என் மலர்
நீங்கள் தேடியது "அரசு பேருந்து"
- பஸ் பணிமனைக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர்.
- தூத்துக்குடியில் மின் கம்பம் உடைந்து அந்தரத்தில் தொங்குவதாக கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை:
தமிழக அரசின் மகளிர் விடியல் பஸ்சின் நிலை என்று கூறி பின்பக்கம் நொறுங்கிய நிலையில் செல்லும் பஸ்சின் படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
இது விபத்தில் சிக்கிய பஸ். கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் கோவை மாவட்டம் சட்டகல்புதூர் செல்லும் மகளிர் விடியல் பஸ்சின் பின்பக்கம் லாரி மோதி விபத்தில் சிக்கியது. இதையடுத்து, இந்த பஸ் பணிமனைக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தவறாக பரப்பி வருகின்றனர். வதந்தியை பரப்பவேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல தூத்துக்குடியில் மின் கம்பம் உடைந்து அந்தரத்தில் தொங்குவதாக கூறி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தமிழ்நாடு இல்லை என்றும், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து முதலில் இந்த வீடியோ பகிரப்பட்டதாகவும் தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
- தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
சென்னை:
அரசு விரைவு போக்கு வரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வார விடுமுறை தினங்களான நாளை (சனிக்கிழமை), ஞாயிற்றுக் கிழமை மற்றும் முகூா்த்த தினத்தை முன்னிட்டு சென்னையில் இருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், நாளை (சனிக்கிழமை) 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதுபோல சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 55 பஸ்களும், நாளை 55 பஸ்களும் மேற்கூறிய இடங்களில் இருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை ஆகிய நாட்களில் 20 பஸ்கள் என ஆக மொத்தம் 980 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
- பேருந்தை இயக்கும் ஷிபு தாமஸ் என்பவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டுள்ளார்.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெற்று வரும் பொது வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை சார்ந்த ஓட்டுநர்கள் வராத நிலையில், தற்காலிக பணியாளர்கள் கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அரசு பேருந்நு ஓட்டும் ஓட்டுநர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்தை இயக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவிலிருந்து கொல்லம் செல்லும் பாதையில் பேருந்து சென்று கொண்டிருக்கிறது. அப்போது பேருந்தை இயக்கும் ஷிபு தாமஸ் என்பவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தாக்குதலின்போது ஏற்படும் காயங்களில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்திருப்பதாக கூறுகிறார்.
- பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும்.
- தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இடைகால் என்ற கிராமத்தில் ஓடிக் கொண்டிருந்த அரசு பேருந்தின், பின்புற அச்சு உடைந்து இரு பின் சக்கரங்கள் தனியாகக் கழன்று ஓடியிருக்கின்றன. இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் காயமடைந்துள்ள நிலையில், ஓட்டுனரின் திறமையால் உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகளில் இருந்து சக்கரங்கள் கழன்று ஓடுவதும், இருக்கைகள் உடைந்து வெளியில் தெறிப்பதும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன. அரசு எவ்வாறு அச்சாணி இல்லாமல் இயங்குகிறதோ, அதே போல் தான் அரசுப் பேருந்துகளும் எந்த பிணைப்பும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பேருந்து விபத்து நடக்கும் போதும் ஓர் ஓட்டுனரையோ, நடத்துனரையோ, தொழில்நுட்பப் பணியாளரையோ பணியிடைநீக்கம் செய்து விட்டு கடமையை முடித்துக் கொள்கிறது திராவிட மாடல் அரசு.
பயணிகளை பாதிக்கும் வகையில் விபத்துகளை ஏற்படுத்தும் பேருந்துகளும் மாற்றப்பட வேண்டும்; தமிழ்நாட்டை சீரழிக்கும் திராவிட மாடல் அரசும் மாற்றப்பட வேண்டும். இது தான் விபத்தில்லா பயணத்திற்கும், அரசு நிர்வாகத்திற்கும் எளிதான தீர்வு! என்று கூறியுள்ளார்.
- பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
- நீதிமன்ற அறிவுரையின்படியே தற்போது மக்கள் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது.
அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது.
* அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என ஏற்கனவே அரசு அறிவித்துள்ளது.
* பேருந்து கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு அரசு விரும்பவில்லை.
* பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் நீதிமன்றத்தை நாடினர்.
* நீதிமன்ற அறிவுரையின்படியே தற்போது மக்கள் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது.
* தனியார் பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக கருத்து கேட்டு நீதிமன்றத்திடம் விவரம் அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
- பேருந்து விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதிய அரசு பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து நிகழ்ந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
- SETC அரசு பேருந்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு பயணம் செய்தார்.
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்திலிருந்து உளுந்தூர்பேட்டை வரை SETC அரசு பேருந்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு பயணம் செய்தார்.
அப்போது அரசு பேருந்து ஓட்டுநரிடம் அவரது பிரச்சனைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அரசு பேருந்தில் பயணம் செய்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் சிவசங்கர் பகிர்ந்துள்ளார்.
- 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்.
- கழுத்து வலியால் மிகவும் அவதிப்படுவதாக அமீன் அகமது அன்சாரி பஸ் பயணிகளிடம் புலம்பி உள்ளார்.
தெலுங்கானா மாநிலம் சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு அவரது தந்தை உயிரிழந்ததையடுத்து கருணை அடிப்படையில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டது.
அமீன் அகமது அன்சாரி 7 அடி உயரம் உள்ளார். 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் தினமும் சுமார் 10 மணி நேரம் தலைகுனிந்தபடி வேலை செய்ததால் பெரும் சிரமத்திற்கு உள்ளானார். இதனால் அவருக்கு கழுத்து, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது. இதற்கு அவர் சிகிச்சையும் பெற்று வந்தார்.
கழுத்து வலியால் மிகவும் அவதிப்படுவதாக அவர் பஸ் பயணிகளிடம் புலம்பி உள்ளார். மேலும் அவர் தனக்கு வேறு வேலை வழங்குமாறு போக்குவரத்துக் கழகத்திடம் கோரிக்கையும் வைத்துள்ளார்.
10 மணி நேர கண்டக்டர் பணியில் அமீன் அகமது அன்சாரி டிக்கெட் வழங்க குனிந்து போராடுவது தொடர்பாக புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த புகைப்படம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
இதையடுத்து போக்குவரத்து அமைச்சர் பொன்னம் பிரபாகர் அமீன் அகமது அன்சாரியை பொருத்தமான பணியில் நியமிக்க உத்தரவிட்டுள்ளார். தெலுங்கானா போக்குவரத்து தலையகத்தில் அவரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
- கழுத்து வலியால் அவதிப்படுவதாக கண்டக்டர் பயணிகளிடம் புழம்பி வருகிறார்.
- பஸ் பயணிகள் அவருக்கு போக்குவரத்து கழக பணிமனையில் வேறு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தெலுங்கானா மாநிலம், சந்திரயாங் பேட்டையை சேர்ந்தவர் அமீன் அகமது அன்சாரி. இவரது தந்தை கச்சேகுடா போக்குவரத்து பணிமனையில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு உடல்நிலை குறைவு காரணமாக இறந்தார். கருணை அடிப்படையில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டது.
அமீன் அகமது அன்சாரி 7 அடி உயரம் உள்ளார். 6 அடி உயரம் கொண்ட பஸ்சில் அமீன் அகமது அன்சாரிக்கு கண்டக்டர் வேலை வழங்கப்பட்டதால் தினமும் சுமார் 10 மணி நேரம் தலை குனிந்த படி வேலை செய்து வருகிறார். இதனை பார்க்கும் பஸ் பயணிகள் அவர் மீது பரிதாபம் கொண்டனர்.
இதனால் அவருக்கு கழுத்து, முதுகு வலி மற்றும் தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டது.
இதனால் அடிக்கடி டாக்டரிடம் சென்று சிகிச்சை பெற்று வருகிறார். கழுத்து வலியால் அவதிப்படுவதாக கண்டக்டர் பயணிகளிடம் புழம்பி வருகிறார்.
இதுகுறித்து பஸ் பயணிகள் அவருக்கு போக்குவரத்து கழக பணிமனையில் வேறு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் அவருக்கு போக்குவரத்து பணிமனையில் வேறு வேலை வழங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
- பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
- மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் இருந்து நீடூர் வழியாக பந்தநல்லூர் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் உள்ள ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை மட்டும் தனியாக இருந்துள்ளது. அதை தவிர மற்ற இருக்கைகளில் பயணிகள் ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர்.
அந்த பஸ்சிற்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்ததும் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் குழந்தை தனியாக இருப்பதை கண்ட சக பயணிகள் குழந்தை யாருடையது? என தெரியாமல் குழம்பினர். பின்னர், உடனடியாக கண்டக்டர் மாதவனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.
இதனால் பதறிப்போன அவர் டிரைவரிடம் தெரிவித்து, பஸ்சை உடனடியாக பழைய பஸ் நிலையத்திற்கு திருப்பினர். அதனை தொடர்ந்து, பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பஸ்சில் இருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பயணிகள் சிலர் குழந்தை அழாமல் இருப்பதற்காக சாக்லெட் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்தனர்.
இதுகுறித்து, பணிமனை அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் குழந்தையை அமர வைத்திருந்த பஸ்சை காணவில்லை என பதறிப்போன பெற்றோர்கள் ஆட்டோவில் ஏறி பஸ் செல்லும் பாதையை நோக்கி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மறுபடியும் பஸ் நிலையத்தையே வந்தடைந்தனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ்சில் இடம் பிடிப்பதற்காக குழந்தையுடன் ஏறிய தந்தை குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வருவதற்காக பஸ்சில் இருந்து இறங்கியதும், அதற்குள் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.
மேலும், பஸ்சின் பாதையை பின்தொடர்ந்து, சுமார் 5 கி.மீ. வரை சென்றுவிட்டு, மறுபடியும் பஸ் நிலையத்திற்கு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, நன்கு விசாரித்த போலீசார் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.
திருப்பூர்:
திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும், ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இத்தகைய நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குன்னத்தூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தில் ஏறுவதற்காக பழைய பேருந்து நிலையத்தில் மகளிா் சிலா் காத்திருந்தனா். இதனிடையே பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியபோது மகளிா் சிலா் பேருந்தை நிறுத்தியுள்ளனா். ஆனால், ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.
ஆகவே அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும், அலைக்கழிக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் பயணிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அரசுப் போக்குவரத்துகழக திருப்பூா் 2 கிளை மேலாளா் வடிவேலிடம் கேட்டபோது, அரசுப் பேருந்துகளில் மகளிரை அலைக்கழிக்கக்கூடாது என்று ஏற்கெனவே ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆகவே பாதிக்கப்பட்ட மகளிா் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
- ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்கவே கண்டக்டர்கள் தயங்குகிறார்கள்.
- சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை :
சென்னையில் பஸ் பயணத்தின்போது, டிக்கெட் வாங்க வரும் பயணிகளிடம் 'சில்லரையா கொடுங்கப்பா..' என்று கூவி கூவி கண்டக்டர்கள் கேட்டு வாங்கிய காலம் போய், இன்றைக்கு சில்லரைகளை கொடுத்தாலே கண்டக்டர்கள் கடுப்பாகும் நிலையே நிலவுகிறது. குறிப்பாக ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்கவே கண்டக்டர்கள் தயங்குகிறார்கள். பலர் 'நோட்டே இல்லையா?' என்று கேட்கிறார்கள். சிலர் முணுமுணுத்தபடியும், திட்டிக்கொண்டும் வாங்குகிறார்கள். இன்னும் சிலர் 'இது செல்லாது' என்று கூறி அந்த நாணயங்களை திருப்பி கொடுத்து விடுகிறார்கள்.
ஏற்கனவே கடைகளில் ஒதுக்கப்படும் இந்த ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்கள் தற்போது பஸ்களிலும் புறக்கணிக்கப்படுவதால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். இதனால் தொடக்கத்தில் இந்த நாணயங்கள் அறிமுகமான போது ஆசையுடன் வாங்கிய மக்கள், இப்போது அதை கையில் வைத்திருக்கவே தயங்குகிறார்கள்.
கண்டக்டர்கள் தரும் கெடுபிடியால் கொதித்து போன மக்கள் போக்குவரத்து துறையிடம் தொடர்ந்து இதுகுறித்த புகார்களை அளித்து வருகிறார்கள்.
பொதுமக்களின் புகாரை தொடர்ந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் நேற்று ஒரு அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து கண்டக்டர்கள், மண்டல-கிளை-உதவி மற்றும் பொதுப்பிரிவு மேலாளர்களுக்கு, சென்னை மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநகர பஸ்களில் பயணிகள் டிக்கெட் வாங்க ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை கொடுக்கும்போது, அதனை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கண்டக்டர்கள் உரிய டிக்கெட்டுகளை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையின் மூலம் மீண்டும் அது அறிவுறுத்தப்படுகிறது.
எக்காரணம் கொண்டும் பயணிகள் அளிக்கும் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை பெற்றுக்கொள்ள கண்டக்டர்கள் மறுக்கக்கூடாது. இதனை மீறி ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வாங்க மறுப்பதாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட கண்டக்டரின் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து கிளை, உதவி கிளை மேலாளர்கள் மற்றும் அனைத்து நேர காப்பாளர்கள் ஆகியோர் இதுகுறித்து கண்டக்டர்களுக்கு தெளிவாக எடுத்துக்கூறி அவர்களிடம் கையெழுத்து பெற்று எதிர்காலத்தில் இத்தகைய புகார் எதுவும் வராமல் பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






