VIDEO: கிளாம்பாக்கம் முதல் உளுந்தூர்பேட்டை வரை அரசு பேருந்தில் பயணித்த அமைச்சர் சிவசங்கர்

கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன. SETC அரசு பேருந்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு பயணம் செய்தார்.
VIDEO: கிளாம்பாக்கம் முதல் உளுந்தூர்பேட்டை வரை அரசு பேருந்தில் பயணித்த அமைச்சர் சிவசங்கர்
Published on

சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்திலிருந்து உளுந்தூர்பேட்டை வரை SETC அரசு பேருந்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு பயணம் செய்தார்.

அப்போது அரசு பேருந்து ஓட்டுநரிடம் அவரது பிரச்சனைகள் குறித்து அவர் கேட்டறிந்தார். அரசு பேருந்தில் பயணம் செய்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் அமைச்சர் சிவசங்கர் பகிர்ந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com