என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: ஹெல்மெட் அணிந்தபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்
    X

    VIDEO: ஹெல்மெட் அணிந்தபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

    • இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.
    • பேருந்தை இயக்கும் ஷிபு தாமஸ் என்பவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டுள்ளார்.

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்று வரும் பொது வேலை நிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களை சார்ந்த ஓட்டுநர்கள் வராத நிலையில், தற்காலிக பணியாளர்கள் கொண்டு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், அரசு பேருந்நு ஓட்டும் ஓட்டுநர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பேருந்தை இயக்குவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    கேரள மாநிலம் பத்தனம்திட்டாவிலிருந்து கொல்லம் செல்லும் பாதையில் பேருந்து சென்று கொண்டிருக்கிறது. அப்போது பேருந்தை இயக்கும் ஷிபு தாமஸ் என்பவர் தலையில் ஹெல்மெட் அணிந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தாக்குதலின்போது ஏற்படும் காயங்களில் இருந்து தப்பிக்க ஹெல்மெட் அணிந்திருப்பதாக கூறுகிறார்.



    Next Story
    ×