search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivashankar"

    • லைப் மிஷனில் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தை மீறியதாக சிவசங்கர் கைது செய்யப்பட்டார்.
    • சிவசங்கருக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர்.

    இவர் மாநில அரசின் முதன்மை வீட்டுத் திட்டமான லைப் மிஷனில் வெளிநாட்டு பங்களிப்பு சட்டத்தை மீறியதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, சிவசங்கரை கைது செய்தது.

    இந்த வழக்கில் கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வருகிற 21-ந் தேதி வரை காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் சிவசங்கருக்கு நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர், கொச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • ஸ்வப்னா சுரேஷ்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசியது உண்மை.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாட்டில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைதானவர் ஸ்வப்னா சுரேஷ்.

    இவருக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ஸ்வப்னா சுரேசுக்கு கேரள அரசின் ஸ்பேஸ்பார்க் நிறுவனத்தில் வேலை கிடைத்தது எப்படி? என்பது பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

    மேலும் கேரள சட்டசபையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். இதற்கு ஆளும் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததோடு, ஸ்வப்னா சுரேசுக்கும், முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கூறினர்.

    பினராய் விஜயனும் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். இதற்கு பதில் அளித்து ஸ்வப்னா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசியது உண்மை. இதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உதவி செய்தார்.

    அதன்பின்புதான் எனக்கு கேரள அரசின் ஸ்பேஸ்பார்க்கில் வேலை கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார். ஸ்வப்னா சுரேசின் பேட்டியை தொடர்ந்து கேரளாவில் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • விளம்பர மோகம் இல்லாமல் மக்களுக்கு முதலமைச்சர் பணியாற்றி வருகிறார்.
    • அண்ணாமலையையும், பாஜகவையும் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

     குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் அரசு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:

    எந்த விளம்பர மோகமும் இல்லாமல் மக்களுக்கு பணியாற்றி வருபவர் நமது முதலமைச்சர். எதை செய்தாலும் எதை பேசினாலும் மக்கள் தன் பக்கம் திரும்பி பார்க்க மாட்டேன் என்கிறார்கள் என்ற ஆதங்கத்தில் அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.

    எவ்வளவு உருண்டு புரண்டாலும் தமிழக மக்கள் அண்ணாமலையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவருடைய கட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதுதான் நிதர்சனமான உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மகளிரை, நடத்துநர் ஓட்டுநர்கள் அதிக மரியாதையுடன் நடத்த வலியுறுத்தல்.
    • பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அமைச்சர் அறிவுரை

    அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் கூறியுள்ளதாவது:

    தமிழக அரசின் கட்டணமில்லா மகளிர் பயண திட்டத்தின் மூலம் 173 கோடி மகளிர் பயணம் மேற் கொண்டுள்ளனர். இத்திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை. ஓட்டுநர், நடத்துநர்கள் இத்திட்டத்தை மேலும் சிறப்பிக்க மகளிரை அதிக மரியாதையுடன் நடத்த வேண்டும். 


    மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வரக்கூடிய காலை, மாலை நேரங்களில் பேருந்து பற்றாக்குறை என்ற நிலை ஏற்படா வண்ணம், பள்ளி கல்வித்துறையிடம் கலந்தாலோசித்து பேருந்துகளை இயக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கும் நிலை உள்ளதால் பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, பயணிகளுக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படா வண்ணம் இயக்க வேண்டும். பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட வாரியாக பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுடன் Whatsapp Group-ஐ ஏற்படுத்த வேண்டும். நவ திருப்பதி போன்ற சுற்றுலா தொகுப்பை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் எல்லையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×