search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Swapna Suresh"

  • ஸ்வப்னா சுரேஷ்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
  • கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசியது உண்மை.

  திருவனந்தபுரம்:

  வளைகுடா நாட்டில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைதானவர் ஸ்வப்னா சுரேஷ்.

  இவருக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

  இந்நிலையில் ஸ்வப்னா சுரேசுக்கு கேரள அரசின் ஸ்பேஸ்பார்க் நிறுவனத்தில் வேலை கிடைத்தது எப்படி? என்பது பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.

  மேலும் கேரள சட்டசபையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். இதற்கு ஆளும் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததோடு, ஸ்வப்னா சுரேசுக்கும், முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கூறினர்.

  பினராய் விஜயனும் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். இதற்கு பதில் அளித்து ஸ்வப்னா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

  கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசியது உண்மை. இதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உதவி செய்தார்.

  அதன்பின்புதான் எனக்கு கேரள அரசின் ஸ்பேஸ்பார்க்கில் வேலை கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார். ஸ்வப்னா சுரேசின் பேட்டியை தொடர்ந்து கேரளாவில் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • சென்னையில் உள்ள கோவிலில், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர், எனக்கு தாலி கட்டினார்.
  • வழக்கில் இருந்து தப்பிக்க முடியும் என்று என்னை நம்ப வைத்து ஆடியோ பதிவு செய்தார்கள்.

  திருவனந்தபுரம்:

  கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளா தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

  மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை இந்த வழக்கை விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் ஜாமினில் விடுதலையான ஸ்வப்னா சுரேஷ் எழுதி உள்ள சுயசரிதை புத்தகம் வெளியாகி கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  சதியின் பத்ம வியூகம் என்ற பெயரில் அவர் எழுதியுள்ள சுயசரிதை புத்தகத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர், முன்னாள் மந்திரி ஜலீல் உள்பட பல முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இடம் பெற்று உள்ளன. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:-

  கேரளாவில் மீண்டும் பினராயி விஜயன் அரசு வர வேண்டும் என்பதற்காகத்தான் தங்கக் கடத்தல் விவகாரத்தில் அரசுக்கோ, அரசு சார்ந்தவர்களுக்கோ எந்த தொடர்பும் இல்லை என்று சிறையில் இருந்தபடி வெளியிட்ட ஆடியோவில் தெரிவித்திருந்தேன்.

  ஆட்சி மாறினால் வழக்கு விசாரணைக்கு போக்கும் என்றும், என்னை காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள் என்றும், மீண்டும் இடதுசாரி முன்னணி ஆட்சிக்கு வந்தால் தான், வழக்கில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறி என்னை நம்ப வைத்து அந்த ஆடியோவை பதிவு செய்தார்கள்.

  முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சிவசங்கர் சென்னையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டி 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அப்போது ஒருபோதும் உன்னை கைவிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

  நான் யாருக்கு எதிராகவும் பாலியல் புகார் கூற விரும்பவில்லை. ஆனால் முன்னாள் மந்திரியும், கேரள சட்டசபையில் முக்கிய நபருமாக இருந்த ஒருவர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு வருமாறு பலமுறை அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு நான் உடன்படவில்லை.

  இது தொடர்பாக அவர் எனக்கு பலமுறை அனுப்பிய வாட்ஸ் ஆப் தகவல்கள் இப்போதும் என்னிடம் பத்திரமாக உள்ளன. அதை நான் விசாரணை அதிகாரிகளிடம் ஏற்கனவே கொடுத்துவிட்டேன். இவ்வாறு அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கேரளா மார்க்சிஸ்ட் எம்எல்ஏ கே.டி.ஜலீல் மீது ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டு.
  • எந்த நிலைக்கும் இறங்க முடியும் என்று அவர் நினைக்கிறார்.

  திருவனந்தபுரம்:

  கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் கேரளா மாநில தலைநகர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பிடிபட்டது. இந்த வழக்கில் ஐக்கிய அரபு அமீரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ், கேரள முதல்வர் பினராயி விஜயனின் அப்போதைய முதன்மை செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மத்திய புலனாய்வு அமைப்பான என்ஐஏ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.

  இந்த வழக்கில் ஜாமினில் விடுதலையான ஸ்வப்னா சுரேஷ், நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் இதில் தொடர்பு இருப்பாக கூறியிருந்தார். மேலும் முன்னாள் அமைச்சர் ஜலீல் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் ஆகியோர் மீதும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.

  இந்நிலையில் திருவனந்தபுரத்தில் நேற்று பேட்டி அளித்த ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்துள்ளதாவது:

  இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அழித்து விட்டனர். கேரள முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்.எல்.ஏ.வுமான கே.டி.ஜலீல் மீதான எந்த குற்றச்சாட்டுகளையும் அவரால் மறுக்க முடியாது. இது குறித்து ஆதாரத்துடன் எனது வாக்குமூலத்தில் சேர்த்துள்ளேன். அவர்தான் தற்போது இந்த ஆதாரங்களை அழிக்க நினைக்கிறார்.

  எந்த நிலைக்கும் இறங்க முடியும் என்று அவர் நினைக்கிறார். எம்.எல்.ஏவாக அவர் எதையும் செய்ய முடியும், ஒரு நாளிதழையோ அல்லது பத்திரிகையையோ அல்லது என்னைப் போன்ற ஒரு பெண்ணையோ தாக்க முடியும்.

  சிலவற்றை என்னால் வெளிப்படுத்த முடியாது, ஏனென்றால் இது வழக்கின் ஒரு பகுதி, அது விசாரணையில் உள்ளது. எனவே உண்மையை கூற முடியாமல் திணறுகிறேன். என்னுடைய ஆதாரங்களை அவர்கள் அழித்தாலும் அவற்றை மீண்டும் சேகரிக்க நான் முயன்று வருகிறேன். இந்த வழக்கில் நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • லைப்மிஷன் ஊழல் வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. இப்போதுதான் முதல் முறையாக ஸ்வப்னாவை விசாரிக்க நோட்டீசு அனுப்பி உள்ளது.
  • இதிலும் ஸ்வப்னா அளிக்கும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

  திருவனந்தபுரம்:

  கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் ஸ்வப்னா.

  இவர் சமீபத்தில் கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தங்க கடத்தல் விவகாரத்தில் தொடர்பு இருப்பாக கூறியிருந்தார்.

  பினராயி விஜயன் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டு இருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதனை வலியுறுத்தி போராட்டங்களும் நடத்தினர். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இதற்கிடையே பினராயி விஜயனால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஸ்வப்னா குற்றம் சாட்டினார். மேலும் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்திலும் புகார் கொடுத்தார்.

  இந்த நிலையில் கேரளாவில் நடந்த லைப்மிஷன் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணையை சி.பி.ஐ. மீண்டும் தொடங்க உள்ளது.

  இந்த ஊழல் வழக்கிலும் ஸ்வப்னாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக வருகிற 11-ந் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு ஸ்வப்னாவுக்கு சி.பி.ஐ. நோட்டீசு அனுப்பி உள்ளது.

  இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே பலரிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. இப்போதுதான் முதல் முறையாக ஸ்வப்னாவை விசாரிக்க நோட்டீசு அனுப்பி உள்ளது. இதிலும் ஸ்வப்னா அளிக்கும் வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

  • ஸ்வப்னா சுரேசிடம் குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை.
  • உண்மையை வெளியே கொண்டு வர முயற்சிப்பதால் என்னை கேரள முதலமைச்சர் துன்புறுத்துகிறார்.

  தங்கம் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அவரது மனைவி, மகள் மற்றும் அமைச்சர், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட பலருக்கும் இதில் தொடர்பு உள்ளதாக தெரிவித்திருந்தார். இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்வப்னா சுரேசின் ரகசிய வாக்குமூலத்தால் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட்டு வருகிறது.

  இதற்கிடையே தங்கம் கடத்தல் வழக்கு, டாலர் கடத்தல், கூட்டு சதி ஆகிய 3 வழக்குகள் குறித்து ஸ்வப்னா சுரேசிடம் கேரள குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

  என் மீது பதிவு செய்யப்பட்ட சதி வழக்கில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அடிப்படையில், அது துன்புறுத்தலாக இருந்தது. எனது வழக்கறிஞர் கிருஷ்ணராஜை வழக்கை விட்டு விலகும்படி வலியுறுத்தினர். விசாரணை என்ற பெயரில் முதலமைச்சர் பினராயி விஜயன் என்னை சாப்பிட கூட விடாமல் துன்புறுத்துகிறார்.

  பொதுமக்களை காக்க வேண்டிய கேரள முதல்வர், தற்போது என்னை பட்டினி கிடக்க வைத்துள்ளார். நான் உண்மையை வெளியே கொண்டு வர முயற்சிப்பதால் அவர் என்னை துன்புறுத்துகிறார். அவரது மகளுக்கு எதுவும் அவரால் செய்யமுடியல்லை. நம் அனைவரையும் அவர் தமது மகளாக கருத வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • கேரள முன்னாள் மந்திரி ஜலீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ஸ்வப்னா கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
  • இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ளது. இந்த வழக்கில் ஸ்வப்னா மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153 மற்றும் 120 பி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  திருவனந்தபுரம்:

  கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சமீபத்தில் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

  ஸ்வப்னா அளித்த வாக்குமூலத்தில் தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார்.

  இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஸ்வப்னாவிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.

  அதன்படி கடந்த வாரம் ஸ்வப்னா அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரத்திற்கும் மேல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

  இந்த நிலையில் நேற்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்ற அவரிடம் அதிகாரிகள் சுமார் 5½ மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் அவரிடம் விசாரணை நடக்கிறது.

  இந்த நிலையில் கேரள முன்னாள் மந்திரி ஜலீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ஸ்வப்னா கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

  இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ளது. இந்த வழக்கில் ஸ்வப்னா மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153 மற்றும் 120 பி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்று சோலார் ஊழல் வழக்கில் கைதான சரிதா நாயர் தெரிவித்துள்ளார்.
  • ஸ்வப்னாவின் 164 பக்க வாக்குமூலத்தின் நகல் கோரி சரிதா தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  திருவனந்தபுரம்:

  கேரளாவில் தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

  அதன்பிறகு நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் சம்பவத்தில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். அவரது இந்த புகாரால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

  பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. முதல்-மந்திரி செல்லும் இடங்களில் எல்லாம் கருப்புக்கொடி காட்டி வருகின்றனர். இதனால் கேரளாவில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

  திருவனந்தபுரத்தில் இளைஞர் காங்கிரசார் நடத்திய போராட்டத்தின் போது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதில் பலர் காயம் அடைந்தனர்.

  இந்த சூழலில் ஸ்வப்னா சுரேஷ் கூறிய குற்றச்சாட்டுக்கு அவரிடம் ஆதாரம் எதுவும் இல்லை என்று சோலார் ஊழல் வழக்கில் கைதான சரிதா நாயர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

  நான் சிறையில் இருந்தபோது, ஸ்வப்னாவும் சிறையில் இருந்தார். அப்போது என்னிடம் பேசிய அவர், இந்த வழக்கில் முதல்-மந்திரியை தேவையில்லாமல் உள்ளே இழுத்துள்ளதாக தெரிவித்தார். அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அவரை யாரோ பின்னால் இருந்து இயக்குகின்றனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதற்கிடையில், ஸ்வப்னாவின் 164 பக்க வாக்குமூலத்தின் நகல் கோரி சரிதா தாக்கல் செய்த மனுவை எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

  இது தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால் அந்த அறிக்கையை விசாரணை நிறுவனத்துடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும் என்று நீதிமன்றம் கூறி உள்ளது.

  விசாரணை முடியும் வரை ஸ்வப்னாவின் அறிக்கையை பகிர முடியாது என்று நீதிமன்றம் கூறி உள்ளது. எனினும், ஐகோர்ட்டை அணுகப் போவதாக சரிதாவின் வக்கீல் தெரிவித்துள்ளார்.

  இதற்கிடையில் ஸ்வப்னா சுரேஷ் கோர்ட்டில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அமலாக்க இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருகிற 22-ந்தேதி (புதன்கிழமை) ஆஜராகும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

  • ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
  • ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என்றும், இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி எனவும் பினராயி விஜயன் கூறினார்.

  கொச்சி:

  கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தங்க கடத்தல் வழக்கில் தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்வப்னா கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

  கொச்சி கோர்ட்டில் அவர் அளித்த வாக்குமூலத்தில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும் இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு வீட்டில் பினராயி விஜயனை சந்தித்ததாகவும் கூறினார்.

  இதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து பினராயி விஜயன் விலகக் கோரி அம்மாநில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

  இந்நிலையில், கொச்சியில் உள்ள அலுவலகத்தில் ஜூன் 22ம் தேதி ஸ்வப்னா சுரேஷ் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

  • பினராயி விஜயன், அவரது மகளின் ஐ.டி.நிறுவனத்தை அரபு நாட்டிலும் விரிவுபடுத்த விரும்பினார். இதற்காக ஷார்ஜாவின் சுல்தான் கேரளா வந்த போது அவரை பினராயி விஜயன் சந்தித்தார்.
  • ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

  திருவனந்தபுரம்:

  கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரம் குறித்து ஸ்வப்னா கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

  கொச்சி கோர்ட்டில் அவர் அளித்த வாக்குமூலத்தில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

  மேலும் இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு வீட்டில் பினராயி விஜயனை சந்தித்ததாகவும் கூறினார்.

  இதனை முதல் மந்திரி பினராயி விஜயன் மறுத்தார்.இந்த நிலையில் பினராயி விஜயன், அவரது மகளின் ஐ.டி.நிறுவனத்தை அரபு நாட்டிலும் விரிவுபடுத்த விரும்பினார். இதற்காக ஷார்ஜாவின் சுல்தான் கேரளா வந்த போது அவரை பினராயி விஜயன் சந்தித்தார்.

  இத்திட்டத்திற்கு ஷார்ஜா அரசு ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் இத்திட்டம் நிறைவேறவில்லை என ஸ்வப்னா வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

  ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.

  இதையடுத்து பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சியி னரின் போராட்டமும் தீவிரம் அடைந்துள்ளது.