சூடு பிடிக்கும் தங்க கடத்தல் விவகாரம்- ஸ்வப்னாவிடம் மீண்டும் அமலாக்கத்துறை விசாரணை

கேரள முன்னாள் மந்திரி ஜலீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ஸ்வப்னா கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ளது. இந்த வழக்கில் ஸ்வப்னா மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153 மற்றும் 120 பி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சூடு பிடிக்கும் தங்க கடத்தல் விவகாரம்- ஸ்வப்னாவிடம் மீண்டும்  அமலாக்கத்துறை விசாரணை
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் நடந்த தங்க கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சமீபத்தில் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

ஸ்வப்னா அளித்த வாக்குமூலத்தில் தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார்.

இது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஸ்வப்னாவிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.

அதன்படி கடந்த வாரம் ஸ்வப்னா அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் 11 மணி நேரத்திற்கும் மேல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்றும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்ற அவரிடம் அதிகாரிகள் சுமார் 5½ மணி நேரம் விசாரணை நடத்தினர். இன்றும் அவரிடம் விசாரணை நடக்கிறது.

இந்த நிலையில் கேரள முன்னாள் மந்திரி ஜலீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு ஸ்வப்னா கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடக்க உள்ளது. இந்த வழக்கில் ஸ்வப்னா மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 153 மற்றும் 120 பி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com