தங்க கடத்தல் வழக்கு: ஜூன் 22ம் தேதி ஸ்வப்னா சுரேஷ் ஆஜராக வேண்டும் - சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை

ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என்றும், இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி எனவும் பினராயி விஜயன் கூறினார்.
ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ்
Published on

கொச்சி:

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தங்க கடத்தல் வழக்கில் தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்வப்னா கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

கொச்சி கோர்ட்டில் அவர் அளித்த வாக்குமூலத்தில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும் இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு வீட்டில் பினராயி விஜயனை சந்தித்ததாகவும் கூறினார்.

இதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து பினராயி விஜயன் விலகக் கோரி அம்மாநில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

இந்நிலையில், கொச்சியில் உள்ள அலுவலகத்தில் ஜூன் 22ம் தேதி ஸ்வப்னா சுரேஷ் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com