என் மலர்
நீங்கள் தேடியது "தங்க கடத்தல் வழக்கு"
- துபாயில் சில வியாபாரிகளிடம் வாங்கும் தங்கத்திற்காக வெளிநாட்டு பணத்தை ரன்யா ராவ் பயன்படுத்தி உள்ளார்.
- கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து பெங்களூரு, கோவா, மும்பையில் இருந்து 52 முறை துபாய்க்கு சென்றுள்ளார்.
கன்னட நடிகையான ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தங்கம் கடத்தல் வழக்கில் ரன்யா ராவின் நண்பரும், தெலுங்கு நடிகருமான தருண் ராஜும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் ரன்யா ராவின் வளர்ப்பு தந்தையும், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியுமான ராமசந்திர ராவை, கர்நாடக அரசு கட்டாய விடுப்பில் அனுப்பி வைத்துள்ளது. அவருக்கு எந்த பதவியும் வழங்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைத்துள்ளது. தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மறுபுறம் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருப்பவர்களை பிடிக்க வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த கோணத்தில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் சில பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது துபாயில் இருந்து தங்கம் கடத்துவதற்காக, அங்கு ஒரு நகைக்கடையை நடத்தி வந்த அதிர்ச்சி தகவலும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. அதாவது அந்த நகைக்கடையில் ரன்யா ராவ், தருண் ராஜு தலா 50 சதவீத பணத்தை முதலீடு செய்து நடத்தி வந்துள்ளனர். துபாயில் சில வியாபாரிகளிடம் வாங்கும் தங்கத்திற்காக வெளிநாட்டு பணத்தை ரன்யா ராவ் பயன்படுத்தி உள்ளார்.
இவ்வாறு தங்கம் வாங்கிய போது, ஒரு வியாபாரி ரன்யா ராவிடம் ரூ.1.70 கோடியை பெற்று விட்டு, தங்கத்தை கொடுக்காமல் மோசடி செய்திருந்தார். இந்த ரூ.1.70 கோடியை ஹவாலா மூலமாக துபாய்க்கு ரன்யா ராவ் கொண்டு சென்றிருந்ததாக நடிகர் தருண் ராஜ் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதே நேரத்தில் ரன்யா ராவ், தருண் ராஜு ஆகியோருக்கு துபாய் மட்டும் இன்றி ஜெனிவா, பாங்காக்கை சேர்ந்த நகை வியாபாரிகளுடனும் தொடர்பு இருந்துள்ளது.
அவர்கள் மூலமாகவும் தங்கத்தை வாங்கியதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்காக தான் துபாயில் நகைக்கடையை 2 பேரும் நடத்தி வந்துள்ளனர். துபாயில் இருந்து தங்கத்தை கடத்தி வரும் போது, தான் நடத்தி வரும் நிறுவனம் பற்றியும், சுவிட்சர்லாந்து, ஜெனிவாவுக்கு செல்வதாக துபாய் அதிகாரிகளை ரன்யா ராவ் ஏமாற்றி வந்துள்ளார். இதற்காக அவரிடம் அமெரிக்க நாட்டு விசாவும் இருந்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் இருந்து அவர் பெங்களூரு, கோவா, மும்பையில் இருந்து 52 முறை துபாய்க்கு சென்றுள்ளார். பெரும்பாலும் ஒரே நாளில் இந்தியாவில் இருந்து துபாய்க்கு சென்றுவிட்டு, திரும்பி வந்திருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலமாக அவர் தங்கம் கடத்தலில் தொடர்ந்து ஈடுபட்டு இருப்பதும், அவருக்கு பின்னணியில் பெரிய கடத்தல் கும்பல் இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதே நேரத்தில் ரன்யா ராவ், தருண் ராஜு வங்கி கணக்குகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பல கோடி ரூபாய் வங்கி கணக்குகளுக்கு வந்திருப்பதும், அது உடனடியாக மற்ற வங்கி கணக்குகளுக்கு மாற்றப்பட்டு இருப்பதும் தெரியவந்துள்ளது. ரன்யா ராவ் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் சர்வதேச அளவில் பெரிய கடத்தல் கும்பல் இருக்கலாம் என்ற கோணத்திலும் சி.பி.ஐ. மற்றும் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இதையடுத்து, ரன்யா ராவ், தருண் ராஜுக்கு வந்திருந்த வெளிநாட்டு செல்போன், தொலைபேசி அழைப்புகள் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அத்துடன் தங்கம் கடத்தல் விவகாரம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.
இதனால் கூடிய விரைவில் தங்கம் கடத்தலுக்கு பின்னணியில் இருக்கும் முக்கிய நபர்கள் சிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
- ரன்யா ராவ் பரப்பனஅக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
- ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
பிரபல நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர்.
தற்போது ரன்யா ராவ் பரப்பனஅக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ரன்யாவின் தந்தை டிஜிபி ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரன்யா ராவ் குறித்து பாஜக எம்.எல்.ஏ. பசங்கவுடா பாட்டீல் கொச்சையாக தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரன்யா ராவ் குறித்து பேசிய பசங்கவுடா பாட்டீல், "தங்க கடத்தலில் சுங்க அதிகாரிகளின் மீது தவறு இருந்தால் அவர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரன்யா ராவ் உடல் முழுவதும் தங்கத்தை வைத்திருந்தாள். அவள் உடலில் துளைகள் இருந்த இடங்களில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தினாள். வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து அமைச்சர்களின் பெயரையும் வெளியிடுவேன்
தங்கம் கடத்தலில் ரன்யா ராவுக்கு யார் எல்லாம் உதவி செய்தார்கள் என்பது பற்றிய முழுமையான தகவல்களை நான் சேகரித்துள்ளேன்அவள் தங்கத்தை எந்த துளையில் மறைத்து கொண்டு வந்தாள் என்பது உட்பட அனைத்தையும் நான் அம்பலப்படுத்துவேன்" என்று தெரிவித்தார்.
- விசாரணை குழு தங்கம் கடத்தல் தொடர்பான விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
- ராமசந்திர ராவ் தங்க கடத்தல் விசாரணையை எதிர்கொள்ள கடந்த 14-ந்தேதி முதல் அவருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில காவல்துறை வீட்டு வசதி வாரிய கூடுதல் டி.ஜி.பி. ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் புலனாய்வு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். அவர் பரப்பனஅக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த தங்க கடத்தல் பின்னணியில் அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் உள்ளனர். இதனால் டி.ஆர்.ஐ, சி.பி.ஐ, அமலாக்கத்துறை, மாநில காவல் துறை ஆகியவை விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
நடிகை ரன்யா ராவ் தங்க கடத்திக் கொண்டு வரும்போதெல்லாம் அவரை விமான நிலையத்தில் இருந்து பத்திரமாக ஜீப்பில் வீட்டுக்கு அழைத்து சென்று விட்ட போலீஸ்காரர் விசாரணை அதிகாரிகளிடம் டி.ஜி.பி.ராமசந்திர ராவின் நேரடி உத்தரவுகளை பின்பற்றியே வி.ஐ.பி. நுழைவு வாயில் வழியாக அழைத்து வந்ததாக கூறினார். இதனால் ராமசந்திர ராவுக்கும் இந்த தங்க கடத்தலில் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மாநில அரசு சார்பில் இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் தலைமை செயலாளர் கவுரவ் குப்தா மற்றும் விசாரணைக்கு உதவுவதற்காக சி.ஐ.டி. டி.ஐ.ஜி. வம்சி கிருஷ்ணா ஆகியோரை நியமித்து உத்தரவிட்டுள்ளது. இந்த விசாரணை குழு தங்கம் கடத்தல் தொடர்பான விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ராமசந்திர ராவ் தங்க கடத்தல் விசாரணையை எதிர்கொள்ள கடந்த 14-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் அவருக்கு கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக அவரை கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கும் மாற்றி உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே டி.ஜி.பி. ராமசந்திர ராவ் பற்றி பரபரப்பு தகவல் கிடைத்துள்ளது.
2014-ம் ஆண்டில் அவர் ஹவாலா ஊழலில் சிக்கிய ரூ.2.07 கோடியை பறிமுதல் செய்து முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். இதன் அடிப்படையில் மைசூர் எல்லைக்கான காவல் துறை ஐ.ஜி. பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் போலி என்கவுன்டரில் வழக்கில் அவர் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக சி.ஐ.டி.யால் விசாரிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கர்நாடக காவல்துறை வீட்டு வசதி வாரிய டிஜிபி ராமச்சந்திர ராவை பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
- மறு உத்தரவு வரும் வரை கட்டாய விடுப்பில் அனுப்புமாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
நடிகை ரன்யா ராவ் வழக்கில், அவரது வளர்ப்பு தந்தையை டிஜிபி பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கர்நாடக காவல்துறை வீட்டு வசதி வாரிய டிஜிபி ராமச்சந்திர ராவை பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மறு உத்தரவு வரும் வரை கட்டாய விடுப்பில் அனுப்புமாறு கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
தங்க கடத்தல் தொடர்பான வழக்கை கர்நாடக அரசின் சிறப்பு குழுவும் விசாரித்து வரும் நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான கன்னட நடிகை ரன்யா, வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆர்ஐ) அதிகாரிகள் தன்னைத் தாக்கி, வெற்று மற்றும் தட்டச்சு செய்யப்பட்ட ஆவணங்களில் கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
- நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள்.
- என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா?.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வரும்போது கர்நாடக மாநில விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரணைக்குப் பின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ரன்யா ராவ் தங்கம் கடத்தல் வழக்கில் இரண்டு கர்நாடக மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், இது வெறும் வதந்திகள்தான். ஆதாரங்கள் தேவை. இந்த விவகாரத்திற்குப்பின் பாஜக-வின் சதித்திட்டம் உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறியதாவது:-
ரன்யா ராவ் தங்கம் கடத்தல் விவகாரத்தில் இரண்டு மாநில அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி வெறும் யூகம்தான். எந்த அமைச்சர்கள் பெயர் வெளியானது? யாராவது பார்த்தீர்கள் அல்லது கேட்டீர்களா?. அரசியல்வாதிகளாகிய நாங்கள் திருமணங்கள் அல்லது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது, நூற்றுக்கணக்கான மக்கள் எங்களுடன் போட்டோ எழுத்துக் கொள்கிறார்கள். என்னுடன் யாரோ ஒருவர் போட்டோ எடுத்துக் கொண்டால், அவர் என்னுடன் தொடர்புடையவர் என அர்த்தமா?.
என்னுடனோ அல்லது முதல்வருடனோ போட்டோ எடுத்துக் கொண்ட ஒரு நபர், குற்றச்செயலில் ஈடுபட்டால் அவருக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று அர்த்தமா?.
தங்கம் கடத்திய ரன்யா ராவ் உடன் எந்த அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்பதை நீங்கள் வெளிப்படுத்துவீர்களா? என முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் பாஜக எக்ஸ் பக்க பதிவு மூலம் கேட்டுள்ளது.
ரன்யா தங்கம் கடத்தல் வழக்கில் ஒருவேளை பாஜக-வுக்கு தொடர்பு இருக்கலாம், ஆனால் காங்கிரஸ்க்கு தொடர்பு இல்லை. எந்த அமைச்சரும் இதுபோன்ற ஊழல்களில் ஈடுபட மாட்டார்கள். முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
விமான நிலையங்களில் வாட்ச், பெல்ட் என அனைத்தும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த பரிசோதனைகள் இருக்கும்போது 14 கிலோ தங்கம் கடத்திவரப்பட்டுள்ளது என்பதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்.
இது பாஜக-வின் சதி திட்டம். இதில் எந்தவொரு அமைச்சரும் ஈடுபடவில்லை என உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
- கேரள முதல் மந்திரி பற்றியோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ அவதூறாக எதுவும் பேசக்கூடாது.
- பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பெண் அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரும் இந்த வழக்கில் கைதானார்.
இதையடுத்து இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. அவர் பதவி விலக கோரி போராட்டங்களும் நடத்தினர்.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா அவ்வப்போது ஊடகங்கள் முன்பு பரபரப்பு தகவல்களை தெரிவித்து வந்தார். மேலும் இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதன்பின்னணியில் அரசியல் இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கூறிவந்த நிலையில் நேற்று ஸ்வப்னா முகநூலில் தோன்றி மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-
கேரளாவை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களாக என்னை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என கூறினார். அவரை பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்து பேசினேன். அப்போது அவர் தங்க கடத்தல் தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் தந்து விடும்படி கேட்டார்.
அவற்றை கொடுத்தால் ரூ.30 கோடி பணம் தருவதாகவும் கூறினார். பெங்களூருவில் இருந்து அரியானாவுக்கோ அல்லது ஜெய்பூருக்கோ சென்றுவிட வேண்டும்.
மேலும் கேரள முதல் மந்திரி பற்றியோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ அவதூறாக எதுவும் பேசக்கூடாது. மீறி பேசினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
மேலும் பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் நகர தொழிலதிபரின் மகன் தருண் ராஜுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
- கார் டிரைவர் ரன்யா ராவை விமான நிலையத்தில் இருந்து 3 முறை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
பெங்களூரு:
பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு பல்வேறு தகவல்கள் கிடை த்தது. நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டார். இன்று அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது.
நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தல் வழக்கில் நகர தொழிலதிபரின் மகன் தருண் ராஜுவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. ரன்யாவும், தருணும் பல வருட நண்பர்கள் ஆவார்கள். அவர் மூலம் துபாயில் இருந்து தங்கம் கடத்தி கொண்டு வந்ததாகவும், இருவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை டி.ஆர்.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்
அதுபோல் ஒரு அரசியல் பிரமுகரின் கார் டிரைவரையும் கைது செய்துள்ளனர். இந்த கார் டிரைவர் ரன்யா ராவை விமான நிலையத்தில் இருந்து 3 முறை அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 மற்றும் 28 ஆகிய 2 நாட்களில் மட்டும் கூட்டுறவு வங்கியிலிருந்து ரன்யாவின் கணக்கிற்கு ரூ.10 லட்சம் பணம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணம் வருவதற்கு முன்பு ரன்யாவின் கணக்கில் பணம் இல்லை. இந்த விவகாரம் குறித்தும் அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நடிகை ரன்யா ராவ் விவகாரம் கர்நாடக சட்டமன்றத்திலும் எதிரொலித்தது. கர்நாடக சட்டமன்ற கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது. எதிர்கட்சியை சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் நேற்று சட்டமன்றத்தில் நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்தலில் தொடர்புடையதாக கூறப்படும் செல்வாக்குமிக்க 2 அமைச்சர்கள் யார்? என கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு உள்துறை மந்திரி பரமேஸ்வரா இந்த வழக்கு குறித்து எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. தங்கம் கடத்தல் வழக்கில் அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதா? என்பதை சி.பி.ஐ. விசாரித்து கண்டுபிடிக்கும் என தெரிவித்தார்.
- 12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்தி வரும்போது நடிகை பிடிபட்டார்.
- விமான நிலையத்தில் பாதுகாப்பு நெறிமுறையை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு.
பிரபல தமிழ் பட நடிகையும், கர்நாடக மாநில வீட்டு வசதித்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ராமசந்திரா ராவின் வளர்ப்பு மகளுமான நடிகை ரன்யா ராவ் கடந்த 3-ந்தேதி துபாயில் இருந்து 12 கிலோ 800 கிராம் தங்கத்தை கடத்திக் கொண்டு பெங்களூருவுக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்தபோது அவரை டெல்லி வருவாய் நுண்ணறிவு பிரிவு (டி.ஆர்.ஐ) அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு பல்வேறு தகவல்கள் கிடைத்தது. நேற்றுடன் போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து ரன்யா ராவ் பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
நடிகையின் தந்தை டிஜிபி ரேங்க் அதிகாரி என்பதால், விமான நிலையத்தில் பரிசோதனையில் இருந்து தப்பிக்க தந்தை பெயரை பயன்படுத்தி பாதுகாப்பு நெறிமுறைகளை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த நிலையில் நெறிமுறைகளை பயன்படுத்தியது தொடர்பான உண்மையை கண்டறிய ராமச்சந்திரா ராவிடம் விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அதிகாரியாக கூடுதல் தலைலைச் செயலாளர் கவுரவ் குப்தாவை நியமித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாக உத்தரவிட்டுள்ளார்.
தனது வளர்ப்பு மகள் நடிகை ரன்யா ராவ், தங்கம் கடத்தி வந்ததில் இவருக்கு ஏதும் தொடர்பு இருக்கிறதா? இவரது பெயர் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறுவதற்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்த உண்மையை கண்டறிய கூடுதல் தலைமை செயலாளர் கவுரவ் குப்தா விசாணை நடத்துவார். ராமச்சந்திரா ராவிடம் விசாணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறார்.
மேலும் விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும், உதவிகளையும் வழங்குமாறு டிஜிபி, ஐஜி, செயலாளர், அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
12.56 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வரும்போது ரன்யா ராவ் பிடிப்பட்டார். இது தொடர்பாக அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ளும்போது 2.06 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் 2.67 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
- ஸ்வப்னாவின் வாக்குமூல விபரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகி கேரள அரசியலில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
- ஸ்வப்னாவை தனக்கு தெரியாது என்றும், இது எதிர்கட்சிகளின் திட்டமிட்ட சதி எனவும் பினராயி விஜயன் கூறினார்.
கொச்சி:
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தங்க கடத்தல் வழக்கில் தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். அதன்பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்வப்னா கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார். அதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
கொச்சி கோர்ட்டில் அவர் அளித்த வாக்குமூலத்தில் முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். மேலும் இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு வீட்டில் பினராயி விஜயனை சந்தித்ததாகவும் கூறினார்.
இதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து பினராயி விஜயன் விலகக் கோரி அம்மாநில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
இந்நிலையில், கொச்சியில் உள்ள அலுவலகத்தில் ஜூன் 22ம் தேதி ஸ்வப்னா சுரேஷ் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
- பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
- முதல்-மந்திரி பினராய் விஜயன் கண்ணூரில் உள்ள அவரது இல்லத்தில் இரவைக் கழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே உள்ள ஸ்வப்னா சுரேஷ், கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு புகார் கூறினார். இதனை கோர்ட்டில் ரகசிய வாக்குமூலத்திலும் தெரிவித்து உள்ளதாக அவர் கூறினார்.
ஸ்வப்னாவின் இந்த குற்றச்சாட்டு கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்-மந்திரி பினராய் விஜயன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ், பா.ஜனதா மற்றும் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் பினராய் விஜயனுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி கோஷமிட்டு வருகின்றனர். நேற்று பினராய் விஜயன் பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் எதிர்க்கட்சியினர் திரண்டதால் பதட்டம் காணப்பட்டது.
வடகரையில் பினராய் விஜயன் கான்வாய் முன்பு கறுப்புக்கொடி காட்டியதாக 4 காங்கிரஸ் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் தீவிரம் அடைந்ததால் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். குறிப்பாக முதல்-மந்திரி பினராய் விஜயன் கண்ணூரில் உள்ள அவரது இல்லத்தில் இரவைக் கழிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அவர் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டார்.
- கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
- என்னுடன் இருப்பவர்களைக் குறிவைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது என ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார்.
பாலக்காடு:
கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுர்களுக்கு தொடர்பு உள்ளதாக ஸ்வப்னா சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து, முதல் மந்திரி பினராயி விஜயனை பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையே, தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் தரப்பில் வக்கீல் ஆர்.கிருஷ்ணராஜ் ஆஜராகி வாதாடி வருகிறார். இவர் கேரள அரசு போக்குவரத்து கழக பஸ் டிரைவர் ஒருவரை விமர்சித்து முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக வக்கீல் கிருஷ்ணராஜ் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத வகையில் கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், பாலக்காட்டில் உள்ள தனது வீட்டில் வைத்து ஸ்வப்னா சுரேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது குடும்பத்தினர் உள்பட அனைவரின் மீதும் நான் ரகசிய வாக்குமூலத்தில் அளித்துள்ள புகார்களில் இருந்து எந்தக் காரணம் கொண்டும் பின்வாங்கப் போவதில்லை.
என்னுடன் இருப்பவர்களைக் குறிவைத்து காவல்துறை நடவடிக்கை எடுக்கிறது. சரித்குமாரை போலீஸ் பிடித்துச் சென்று ஒரு மணி நேரத்தில் விடுவிப்பார்கள் என்று ஷாஜ் கிரண் கூறினார். அதேபோல நடந்தது. என்னுடைய வக்கீல் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்யும் என்றார். அதுவும் நடந்துள்ளது.
என்னைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. என்னைக் கொன்று விடுங்கள். அப்படி நடந்தால் அனைத்து உண்மைகளும் மூடப்பட்டு விடும் என தெரிவித்தார்.






