search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swapna"

    • கேரள முதல் மந்திரி பற்றியோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ அவதூறாக எதுவும் பேசக்கூடாது.
    • பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வரப்பட்டது.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பெண் அதிகாரி ஸ்வப்னா கைது செய்யப்பட்டார். இவருடன் தொடர்பில் இருந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கரும் இந்த வழக்கில் கைதானார்.

    இதையடுத்து இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. அவர் பதவி விலக கோரி போராட்டங்களும் நடத்தினர்.

    இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா அவ்வப்போது ஊடகங்கள் முன்பு பரபரப்பு தகவல்களை தெரிவித்து வந்தார். மேலும் இந்த வழக்கில் கேரள முதல்-மந்திரி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

    இதன்பின்னணியில் அரசியல் இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் கூறிவந்த நிலையில் நேற்று ஸ்வப்னா முகநூலில் தோன்றி மேலும் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டார். அதன் விபரம் வருமாறு:-

    கேரளாவை சேர்ந்த ஒருவர் கடந்த சில நாட்களாக என்னை தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வேண்டும் என கூறினார். அவரை பெங்களூருவில் உள்ள ஒரு ஓட்டலில் சந்தித்து பேசினேன். அப்போது அவர் தங்க கடத்தல் தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் தந்து விடும்படி கேட்டார்.

    அவற்றை கொடுத்தால் ரூ.30 கோடி பணம் தருவதாகவும் கூறினார். பெங்களூருவில் இருந்து அரியானாவுக்கோ அல்லது ஜெய்பூருக்கோ சென்றுவிட வேண்டும்.

    மேலும் கேரள முதல் மந்திரி பற்றியோ, அவரது குடும்பத்தினர் குறித்தோ அவதூறாக எதுவும் பேசக்கூடாது. மீறி பேசினால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

    மேலும் பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • கடத்தல் வழக்கில் தன்னை தொடர்ந்து குற்றம் சாட்டுவது மூலம் அரசின் உறுதித் தன்மையையும், அரசியல் தலைமையையும் அசைத்துவிடலாம் என சிலர் கருதுகின்றனர் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    • பொதுமக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சியை ஏற்கெனவே புறக்கணித்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், இந்த கடத்தலில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது மனைவி கமலா மற்றும் மகள் வீனா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார்.

    இதுகுறித்து பினராயி விஜயன் கூறியதாவது:-

    தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது அவர்களின் அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதிதான். பொதுமக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சியை ஏற்கெனவே புறக்கணித்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    சிலர் குற்றவாளிகள் மூலம் இந்த குற்றச்சாட்டை அடிக்கடி முன்வைத்து அரசியல் செய்து வருகின்றனர். இதில் எந்தவொரு உண்மையும் இல்லை. இவ்வாறு தொடர்ந்து குற்றம் சாட்டுவது மூலம் அரசின் உறுதித் தன்மையையும், அரசியல் தலைமையையும்  அசைத்துவிடலாம் என சிலர் கருதுகின்றனர். ஆனால் இது வெறும் வீண் முயற்சி என்பதை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

    ×