என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்க கடத்தல்"

    • ஜட்டியில் இருந்து சுமார் 931.37 கிராம் எடை கொண்ட தங்கப் பசை அடங்கிய மூன்று பைகளை பறிமுதல்.
    • இந்திய சந்தையில் இதன் மதிப்பு தோராயமாக ரூ.68.93 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ரியாத்தில் இருந்து வந்த இரண்டு பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சோதனையின் போது, பயணிகளின் ஜட்டிகள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடை இருப்பதை கண்டு விமான நிலைய அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.

    பின்னர் அவர்களின் ஜட்டியில் ரகசிய பாக்கெட்டில் இருந்து சுமார் 931.37 கிராம் எடை கொண்ட தங்கப் பசை அடங்கிய மூன்று பைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய சந்தையில் இதன் மதிப்பு தோராயமாக ரூ.68.93 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடத்தல் வழக்கில் தன்னை தொடர்ந்து குற்றம் சாட்டுவது மூலம் அரசின் உறுதித் தன்மையையும், அரசியல் தலைமையையும் அசைத்துவிடலாம் என சிலர் கருதுகின்றனர் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    • பொதுமக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சியை ஏற்கெனவே புறக்கணித்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

    திருவனந்தபுரம்:

    ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கேரளாவிற்கு தங்கம் கடத்தி கொண்டுவரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷ், இந்த கடத்தலில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், அவரது மனைவி கமலா மற்றும் மகள் வீனா ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார்.

    இதுகுறித்து பினராயி விஜயன் கூறியதாவது:-

    தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. இது அவர்களின் அரசியல் சூழ்ச்சியின் ஒரு பகுதிதான். பொதுமக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சியை ஏற்கெனவே புறக்கணித்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    சிலர் குற்றவாளிகள் மூலம் இந்த குற்றச்சாட்டை அடிக்கடி முன்வைத்து அரசியல் செய்து வருகின்றனர். இதில் எந்தவொரு உண்மையும் இல்லை. இவ்வாறு தொடர்ந்து குற்றம் சாட்டுவது மூலம் அரசின் உறுதித் தன்மையையும், அரசியல் தலைமையையும்  அசைத்துவிடலாம் என சிலர் கருதுகின்றனர். ஆனால் இது வெறும் வீண் முயற்சி என்பதை அவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

    டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 தங்கம் கடத்தி வந்தவர்களிடம் இருந்து சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. #Delhi
    புதுடெல்லி:

    இந்தியாவின் தலைநகர் டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் வான் நுண்ணறிவுத்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக நடந்துகொண்ட 51 வயது முதியவரை தீவிரமாக கண்காணித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 2 கிலோ எடை கொண்ட 19 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு சுமார் 67.57 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தங்க கடத்தல் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், முன்னதாக ஒரு பயணியிடம் நடத்தப்பட்ட சோதனையில் 24 தங்க கட்டிகளை அவர் மறைத்து வைத்து எடுத்து வந்தது கண்டறியப்பட்டது. சுமார் 2.8 கிலோ எடை கொண்ட இந்த தங்க கட்டிகள் 85.29 லட்ச ரூபாய் மதிப்புடையவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்க கட்டிகளின் மதிப்பு 1.5 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. #Delhi
    ×