பள்ளி நேரங்களில் பற்றாக்குறை ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்க வேண்டும்- அமைச்சர் சிவசங்கர் உத்தரவு

மகளிரை, நடத்துநர் ஓட்டுநர்கள் அதிக மரியாதையுடன் நடத்த வலியுறுத்தல்.பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அமைச்சர் அறிவுரை
அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்
Published on

அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அமைச்சர் கூறியுள்ளதாவது:

தமிழக அரசின் கட்டணமில்லா மகளிர் பயண திட்டத்தின் மூலம் 173 கோடி மகளிர் பயணம் மேற் கொண்டுள்ளனர். இத்திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால், போக்குவரத்துக் கழகங்களுக்கு இழப்பு எதுவும் இல்லை. ஓட்டுநர், நடத்துநர்கள் இத்திட்டத்தை மேலும் சிறப்பிக்க மகளிரை அதிக மரியாதையுடன் நடத்த வேண்டும். 

மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வரக்கூடிய காலை, மாலை நேரங்களில் பேருந்து பற்றாக்குறை என்ற நிலை ஏற்படா வண்ணம், பள்ளி கல்வித்துறையிடம் கலந்தாலோசித்து பேருந்துகளை இயக்க வேண்டும். வடகிழக்கு பருவமழைக் காலம் தொடங்கும் நிலை உள்ளதால் பேருந்துகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்து, பயணிகளுக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படா வண்ணம் இயக்க வேண்டும். பயணிகள் எண்ணிக்கையை பொறுத்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்வதை தவிர்க்கும் பொருட்டு, மாவட்ட வாரியாக பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுடன் Whatsapp Group-ஐ ஏற்படுத்த வேண்டும். நவ திருப்பதி போன்ற சுற்றுலா தொகுப்பை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் எல்லையில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com