என் மலர்
உலகம்

மைக்ரோசாப்ட் CEO சத்ய நாதெல்லாவின் ஆண்டு வருமானம் இத்தனை கோடியா?
- 2025 ஆம் ஆண்டில் இதுவரை மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகள் 23% உயர்ந்துள்ளன.
- கடந்த 3 ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் பங்கு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த சத்ய நாதெல்லா பொறுப்பு வகித்து வருகிறார்.
2014 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சத்ய நாதெல்லா பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றது முதல் மைக்ரோசாப்ட் வியாபார வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதோடு லின்க்டுஇன், நுவான்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் செனிமேக்ஸ் போன்ற நிறுவனங்களை மைக்ரோசாப்ட் வசதம் கையகப்படுத்தினார்.
தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்கும் முன் சத்ய நாதெல்லா அந்நிறுவனத்தின் மென்பொருள் பிரிவுகளில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்தார். இவர் இயங்குதளங்கள், கிளவுட் கம்ப்யூடிங் போன்ற பிரிவுகளில் பணியாற்றி இருக்கிறார்.
இந்நிலையில், மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா 2025 நிதியாண்டில் $96.5 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.846 கோடி) வருவாமணம் ஈட்டியுள்ளார்.
இது கடந்த ஆண்டு அவர் ஈட்டிய $79.1 மில்லியனிலிருந்து (இந்திய மதிப்பில் ரூ.694 கோடியிலிருந்து) 22% அதிகமாகும்.
ரூ.846 கோடி வருமானத்தில் ரூ.737 கோடி பங்குகளில் இருந்தும் 83 கோடி ஊக்கத்தொகை மூலமாகவும் ரூ.22 கோடி அடிப்படை சம்பளம் மூலமாகவும் கிடைத்துள்ளது. சத்யா நாதெல்லாவின் வருமானத்தில் 90 சதவீதம் பங்குகளில் இருந்து மட்டுமே கிடைத்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் இதுவரை மைக்ரோசாப்ட் நிறுவன பங்குகள் 23% உயர்ந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் பங்கு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. இதனால் தான் சத்யா நாதெல்லாவின் வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது.






