பத்திரிகையாளர்கள் பணிநீக்க சர்ச்சை.. பதவியை ராஜினாமா செய்த வாஷிங்டன் போஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் திருவானந்தபுர காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒருவர்.வாஷிங்டன் போஸ்டின் நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவே கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டன
பத்திரிகையாளர்கள் பணிநீக்க சர்ச்சை..  பதவியை ராஜினாமா செய்த வாஷிங்டன் போஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி
Published on

அமெரிக்காவின் பிரபல பத்திரிகை நாளிதழ் நிறுவனமான வாஷிங்டன் போஸ்ட் கடந்த புதன்கிழமை, 300 பத்திரிகையாளர்கள் வரை பணிநீக்கம் செய்தது.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் திருவானந்தபுர காங்கிரஸ் எம்.பி சசி தரூரின் மகன் இஷான் தரூரும் ஒருவர்.

இந்நிலையில் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் பதிப்பாளர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) வில் லூயிஸ் நேற்று (சனிக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நிறுவனத்தின் நிதி நெருக்கடி மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைக் கையாண்ட விதம் குறித்து ஊழியர்களிடையே எழுந்த கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் வில் லூயிஸ் பதவி விலகியுள்ளார். கடந்த 15 மாதங்களாக அவர் அந்த பதவியில் இருந்தார்.

"வாஷிங்டன் போஸ்டின் நிலையான எதிர்காலத்தை உறுதிப்படுத்தவே கடினமான முடிவுகள் எடுக்கப்பட்டன" என்று லூயிஸ் தனது பிரியாவிடை குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அவருக்குப் பதிலாக நிறுவனத்தின் நிதி அதிகாரி ஜெஃப் டி'ஒனோப்ரியோ தற்காலிக சிஇஓவாக பொறுப்பேற்றுள்ளார்.   

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com