பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை மறைத்த CRPF வீரர் பணிநீக்கம்

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை முனீர் அகமது மறைத்துள்ளார். விசா காலத்தை மீறி அப்பெண்ணை இந்தியாவில் அவர் தங்க வைத்துள்ளார்.
பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை மறைத்த CRPF வீரர் பணிநீக்கம்
Published on

ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதை மறைத்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) வீரர் முனீர் அகமது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மே 24 ஆம் தேதி முனீர் அகமது, பாகிஸ்தானை சேர்ந்த மேனல் கான் என்ற பெண்ணை வீடியோ கால் மூலம் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இதனை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினருக்கு தெரியாமல் மறைத்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த திருமணம் வெளிச்சத்துக்கு வந்தது.

இது தொடர்பாக பேசிய CRPF செய்தித் தொடர்பாளராக டிஐஜி தினகரன், "பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்ததை முனீர் அகமது மறைத்துள்ளார். மேலும், விசா காலத்தை மீறி அப்பெண்ணை இந்தியாவில் அவர் தங்க வைத்துள்ளார். இதற்காக முனீர் அகமது உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com