12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த TCS நிறுவனம்.. காரணம் இதுதான்

இந்தியாவிலும் பல்வேறு நாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்களைப் பாதிக்கும்.டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கிருத்திவாசன் தெரிவித்தார்.
12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த TCS நிறுவனம்.. காரணம் இதுதான்
Published on

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளது.

தொழில்நுட்பத்தில் ஏற்படும் விரைவான மாற்றங்களைச் சமாளிக்க, அதன் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை, அதாவது சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்தியாவிலும் பல்வேறு நாடுகளிலும் பணிபுரியும் ஊழியர்களைப் பாதிக்கும். பணிநீக்க செயல்முறை ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி கிருத்திவாசன், நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக தான் எடுத்த மிகக் கடினமான முடிவுகளில் இதுவும் ஒன்று என்று கூறினார். இது நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று அவர் கூறினார்.

புதிய தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்று அவர் கூறினார்.

"புதிய தொழில்நுட்பங்கள் காரணமாக வேலை செய்யும் முறைகள் மாறி வருகின்றன. எதிர்காலத்திற்கு நாம் தயாராகவும், முன்கூட்டியே செயல்படவும் வேண்டும்" என்று அவர் கூறினார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com