என் மலர்
நீங்கள் தேடியது "Food Delivery Worker"
- அவரது வரவிருக்கும் திருமணம், நிலையான சம்பளம் என பலவற்றை குறிப்பிட்டு குடும்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
- டெலிவரி வேலையின்போது லிஃப்டைப் பயன்படுத்தியதற்காக வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களை அவர் சந்தித்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு இளைஞர் ஆண்டுக்கு ரூ.25 லட்சம் சம்பளம் தரும் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு உணவு டெலிவரி ஊழியராக மாறியுள்ளார்.
இதற்கு பின்னால் ஒரு காரணமும் இருக்கிறது. அதாவது அவர் சொந்தமாக கிளவுட் கிச்சன் உணவகம் தொடங்கும் கனவை கொண்டிருந்தார்.
இதற்காக, தான் பயின்ற பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள பகுதியில் என்ன வகையான உணவுக்கு தேவை உள்ளது, நுகர்வோர் என்ன விலையில் அதை வாங்கத் தயாராக உள்ளனர், எந்தெந்த பகுதிகளில் ஆர்டர்கள் அதிகம் வருகின்றன என்பதைத் தானே கண்டுபிடிக்க விரும்பினார். இந்தக் கள ஆராய்ச்சிக்கு டெலிவரி ஊழியராக ஆனார்.
அவரது வரவிருக்கும் திருமணம், நிலையான சம்பளம் என பலவற்றை குறிப்பிட்டு குடும்பத்தினர் அவரது முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சில நண்பர்கள் அவரை கேலி செய்தனர், மேலும் டெலிவரி வேலையின்போது லிஃப்டைப் பயன்படுத்தியதற்காக வாட்ச்மேன்களால் திட்டப்பட்டது போன்ற அவமானங்களை அவர் சந்தித்தார்.
இவ்வளவு தடைகள் இருந்தபோதிலும், அவர் பின்வாங்கவில்லை. தனது ஆராய்ச்சியின் மூலம், குறைந்த விலையில் அதிகம் விற்பனையாகும் 12 வகையான உணவுப் பொருட்களை அவர் அடையாளம் கண்டார்.
இந்த மாதிரியின் மூலம் 3-4 மாதங்களுக்குள் லாபம் ஈட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். அவரது நண்பர் அவர் குறித்து இவ்வாறு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
- தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள டெலிவரி ஊழியர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.
- ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் 2,000 டெலிவரி ஊழியர்கள் மின்சார இருசக்கர வாகனம் (e scooter) வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்குவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. டெலிவரி ஊழியர்கள் மானியம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.20,000 மானியம்: முக்கிய அம்சங்கள்
தமிழ்நாடு அரசு, இணையவழி சேவைகளில் பணிபுரியும் கிக் தொழிலாளர்களுக்காக (gig workers) ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், டெலிவரி ஊழியர்கள் புதிய மின்சார ஸ்கூட்டர் (e-scooter) வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். இந்த மானியத்திற்காக அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த மானியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
யாருக்கு மானியம்?
தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள டெலிவரி ஊழியர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும். இது Zomato, Swiggy, Zepto, Amazon, Flipkart போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்குப் பொருந்தும்.
பயனாளிகளின் எண்ணிக்கை
ஆரம்பகட்டமாக, இந்தத் திட்டத்தின் கீழ் 2,000 டெலிவரி ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
மானியம் எவ்வளவு?
ஒரு மின்சார ஸ்கூட்டர் வாங்க, தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த கூடுதல் தகவல்களை நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnuwwb.tn.gov.in -ல் காணலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
- ஆன்லைன் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் மூலம் டெலிவரி ஊழியர்களுக்கு வேலையில் மேலும் எளிமையாக செயல்பட உதவும்.
தமிழகத்தில் 2,000 உணவு டெலிவரி ஊழியர்கள் மின்சார இருசக்கர வாகனம் (e scooter) வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்குவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், சொமட்டோ, மீசோ போன்ற ஆன்லைன் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
நலவாரியத்தில் பதிவு பெற்ற டெலிவரி ஓட்டுநர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து மானியம் பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் டெலிவரி ஊழியர்களுக்கு வேலையில் மேலும் எளிமையாக செயல்பட உதவும். டெலிவரி ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.
- காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர்.
- இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார்
பெங்களூருவில் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு டெலிவரி ஊழியர் நேற்று இரவு மருத்துவமனை சந்திப்புக்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோதிலும், ஹாரன் அடித்து, அவரை முன்னோக்கி நகர்த்துமாறு கோரினர்.
அதற்கு அந்த ஊழியர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதாக விளக்கியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர். அந்த நபர்கள், அவரை மீண்டும் மீண்டும் அடித்து உதைத்து வேகமாக ஓடிச் சென்று காரில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. இந்த தாக்குதல் குறித்து அவர் பசவேஸ்வரா நகர் போலீஸ் நிலையத்தில் தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மது போதையில் இருந்ததாக கூறி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
டெலிவரி ஊழியர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
- இவ்வளவு தகுதிகள் இருந்தும், டிங்கிற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை.
- பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, தனது வேலைக்காக 10 நேர்காணல்களில் கலந்து கொண்டார்.
சீனாவைச் சேர்ந்த டிங், முன்னணி பல்கலைக்கழகங்கள் உட்பட பல பட்டங்களைப் பெற்றவர். பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல்லுயிர் பெருக்கத்தில் முதுகலைப் பட்டம், Peking பல்கலைக்கழகத்தில் ஆற்றல் பொறியியலில் முதுகலைப் பட்டம் மற்றும் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
இவ்வளவு தகுதிகள் இருந்தும், டிங்கிற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை. அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பு ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார். மார்ச் மாதத்தில் அவரது ஒப்பந்தம் காலாவதியானதால், புதிய வேலை எதுவும் கிடைக்காததால், அவர் சிங்கப்பூரில் உணவு டெலிவரி ஊழியர் நாட வேண்டியிருந்தது.
ஆக்ஸ்போர்டு பட்டதாரியான இவர், பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, தனது வேலைக்காக 10 நேர்காணல்களில் கலந்து கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.
டெலிவரி ஊழியராக ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்து வாரத்திற்கு ரூ.40,000 க்கு மேல் டிங் சம்பாதிக்கிறார்.
"நாம் கடினமாக உழைத்தால், நாம் ஒரு நல்ல வாழ்க்கையை சம்பாதிக்க முடியும். இது ஒரு மோசமான வேலை அல்ல" என்று டிங் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.
- டெலிவரி ஊழியர் விஷ்ணுவர்தன் தவறான முகவரியைக் கொடுத்ததற்காக தனது மைத்துனி மீது கோபமடைந்தார்.
- விரைவில் குணமடையவில்லை என்றால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெங்களூருவில் ஜெப்டோ டெலிவரி ஊழியர் வாடிக்கையாளரைத் தாக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பெங்களூருவின் பசவேஸ்வரநகர் பகுதியில் மே 21 அன்று நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாடிக்கையாளர் ஷஷாங்க் கூறுகையில், தனது வீட்டிற்கு டெலிவரி வந்தபோது, டெலிவரி ஊழியர் விஷ்ணுவர்தன் தவறான முகவரியைக் கொடுத்ததற்காக தனது மைத்துனி மீது கோபமடைந்தார்.
டெலிவரி ஊழியர் நடத்தையைப் பற்றி தான் கேள்வி எழுப்பியபோது, அவர் தன்னை திட்டி அடித்தார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு மருத்துவமனையில் சி.டி ஸ்கேன் செய்ததில் கண்ணுக்குக் கீழே உள்ள எலும்பு உடைந்துள்ளதாகவும், அது விரைவில் குணமடையவில்லை என்றால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ஷஷாங்க் தெரிவித்தார்.
காவல்துறையில் புகார் அளித்து, இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
- ஆகாஷிடம் அந்த பெண் தண்ணீர் குடிக்க வேண்டுமா? என மரியாதை நிமித்தமாக கேட்டார்.
- இளம்பெண் சமையல் அறையில் வைத்திருந்த வாணலியை எடுத்து ஆகாஷின் முதுகில் அடித்தார்.
பெங்களூரு:
பெங்களூரு தென்கிழக்கு பகுதியில் உள்ள ஏ.இ.சி.எஸ். லே அவுட் பகுதியில் வசித்து வரும் 30 வயது இளம்பெண் ஒருவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டிற்கு உணவு டெலிவரி செய்யும் ஒரு ஆன்லைன் நிறுவனத்தில் தோசை ஆர்டர் செய்தார்.
இதையடுத்து அந்த நிறுவனத்தை சேர்ந்த ஊழியர் ஆகாஷ் (27) என்பவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த தோசையை மாலை 6.45 மணி அளவில் அந்த பெண்ணின் வீட்டிற்கு கொண்டு வந்து கொடுத்தார். அப்போது ஆகாஷிடம் அந்த பெண் தண்ணீர் குடிக்க வேண்டுமா? என மரியாதை நிமித்தமாக கேட்டார். இதையடுத்து ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்து ஆகாஷிடம் கொடுத்தார்.
இதையடுத்து தண்ணீரை குடித்து விட்டு மீண்டும் தண்ணீர் கேட்டார். இதனால் அந்த பெண் தண்ணீர் கொண்டு வர சமையலறைக்குள் சென்றபோது அவரை பின்தொடர்ந்து சென்ற ஆகாஷ் திடீரென அந்த பெண்ணின் கையை பிடித்து பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் சமையல் அறையில் வைத்திருந்த வாணலியை எடுத்து ஆகாஷின் முதுகில் அடித்தார். உடனே ஆகாஷ் படிக்கட்டு வழியாக இறங்கி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு தென்கிழக்கு பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ஆகாஷ் கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி பகுதியை சேர்ந்தவர் என்றும் இவர் பெங்களூரு குண்டலஹள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த 4 ஆண்டுகளாக தங்கி உணவு டெலிவரி செய்து வருவதும், இதற்கு முன்பு பல்வேறு நிறுவனங்களில் டெலிவரி ஊழியராக பணிபுரிந்தவர் என்பவதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார், தலைமறைவாக இருந்த ஆகாஷை கைது செய்தனர்.






