என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்"

    • லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
    • பெரியார் திருவுருவ படத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை இந்தியாவில் ஒளிபரப்பு.

    லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் திருவுருவப்படம் திறப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, லண்டனில் இருந்து வீடியோ வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.

    அந்த பதிவில், " உலகெங்கிலும் உள்ள மக்களின் தன்மானத்தை சுயமரியாதையையும் காத்தவர் தந்தை பெரியார்.

    லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் பெரியார் திருவுருவ படத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நாளை இந்தியாவில் ஒளிபரப்பப்படுகிறது" என்றார்.

    • ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் தந்தை பெரியாரின் உருவப்படம் திறப்பு.
    • இரு நூல்களை பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆதிக்கம்தான் என் எதிரி" என முழங்கிச் சாதியாலும் பாலினத்தாலும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காகச் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்த தந்தை பெரியார் அவர்கள் உலகம் முழுமைக்குமானவர்!

    சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டினையொட்டி உலகப்புகழ் பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 4 அன்று நடைபெறும் கருத்தரங்கினில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து, தென்னக மயக்கம் தீர்த்த சுயமரியாதை இயக்கம் குறித்த இரு நூல்களையும் பன்னாட்டு அறிஞர் பெருமக்கள் முன்னிலையில் வெளியிடுகிறேன்.

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்; பெரியாரியம் உலகத்தவர் அனைவருக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இவ்வளவு தகுதிகள் இருந்தும், டிங்கிற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை.
    • பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, தனது வேலைக்காக 10 நேர்காணல்களில் கலந்து கொண்டார்.

    சீனாவைச் சேர்ந்த டிங், முன்னணி பல்கலைக்கழகங்கள் உட்பட பல பட்டங்களைப் பெற்றவர். பிரிட்டனின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பல்லுயிர் பெருக்கத்தில் முதுகலைப் பட்டம், Peking பல்கலைக்கழகத்தில் ஆற்றல் பொறியியலில் முதுகலைப் பட்டம் மற்றும் சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

    இவ்வளவு தகுதிகள் இருந்தும், டிங்கிற்கு பொருத்தமான வேலை கிடைக்கவில்லை. அவர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பு ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார். மார்ச் மாதத்தில் அவரது ஒப்பந்தம் காலாவதியானதால், புதிய வேலை எதுவும் கிடைக்காததால், அவர் சிங்கப்பூரில் உணவு டெலிவரி ஊழியர் நாட வேண்டியிருந்தது.

    ஆக்ஸ்போர்டு பட்டதாரியான இவர், பல நிறுவனங்களுக்கு விண்ணப்பித்து, தனது வேலைக்காக 10 நேர்காணல்களில் கலந்து கொண்டார். ஆனால் வேலை கிடைக்கவில்லை.

    டெலிவரி ஊழியராக ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்து வாரத்திற்கு ரூ.40,000 க்கு மேல் டிங் சம்பாதிக்கிறார்.

    "நாம் கடினமாக உழைத்தால், நாம் ஒரு நல்ல வாழ்க்கையை சம்பாதிக்க முடியும். இது ஒரு மோசமான வேலை அல்ல" என்று டிங் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்.    

    • தொழில் துறையை மேம்படுத்த மேற்கு வங்க உலக வர்த்தக சந்திப்பு நடைபெற்றது
    • தான் பட்ட துன்பங்களை குறித்து மம்தா உரை ஆற்ற வேண்டும் என்றார் மிச்சி

    இந்தியா மற்றும் அயல்நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், மேற்கு வங்கத்தில் முதலீடு செய்து தொழில்துறையை ஊக்குவிக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் அங்கு உலக வர்த்தக சந்திப்பு நடைபெறுகிறது.

    நேற்று, மேற்கு வங்க உலக வர்த்தக சந்திப்பில் (Bengal Global Business Summit) மேற்கு வங்க முதல்வரின் தலைமை ஆலோசகர் அமித் மித்ரா, ஆக்ஸ்போர்டு துணைவேந்தரும் (pro-vice-chancellor) அறிவுசார் பரிமாற்ற துறையின் பேராசிரியருமான ஜொனாதன் மிச்சியை (Jonathan Michie) உரையாற்ற அழைத்தார்.

    அப்போது ஜொனாதன் மிச்சி தெரிவித்ததாவது:

    இனவெறிக்கு எதிராகவும் சமூக அமைதியை நிலைநாட்டவும் மம்தா பானர்ஜி மேற்கொள்ளும் முயற்சிகள் எங்களை நெகிழ செய்துள்ளது. அடுத்த வருடம் ஜூன் மாதம், எங்கள் பல்கலைக்கழகத்திற்கு அவர் வருகை தந்து தனது வாழ்நாளில் பட்ட துன்பங்களையும், போராட்டங்களையும், அதை தாண்டிய அவரது சாதனைகளையும் குறித்து உரையாற்ற அழைத்தோம். ஆக்ஸ்போர்டில் இந்தியர்கள் பலர் கல்வி பயில்வதால், மம்தாவின் உரை எங்கள் மாணவ மாணவியர்களாலும், பேராசிரியர்களாலும் மிகவும் விரும்பப்படும். எங்கள் அழைப்பை அவர் ஏற்று கொண்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு மிச்சி கூறினார்.

    தென்மேற்கு இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையர் (Oxfordshire) பிராந்தியத்தில் உள்ளது ஆக்ஸ்போர்டு (Oxford) நகரம். உலக புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (Oxford University) இந்நகரத்தில் உள்ளது. தொன்மை வாய்ந்த இப்பல்கலைக்கழகம், 900 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டது.

    ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 38 கல்லூரிகள் இணைந்துள்ளன. அவற்றில் உலகின் பல பகுதிகளில் இருந்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பல்வேறு ஆய்வுகளுக்காக 70 துறைகள் அங்கு இயங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர்.
    • அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் (28-ந்தேதி) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளது.

    இதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 12 பேரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையும் ஒருவர். அங்கு தங்கி படிப்பவர்களுக்கான செலவை பல்கலைக்கழகமே ஏற்றுக்கொண்டது.

    இதற்காக அண்ணாமலை கடந்த ஆகஸ்ட் மாதம் (28-ந்தேதி) இரவு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார்.

    3 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்கும் அண்ணாமலை வருகிற நவம்பர் மாத இறுதியில் படிப்பை முடித்து சென்னை திரும்புவார் என கூறப்பட்டது.

    அதன்படி, லண்டனில் அரசியல் படிப்பை முடித்துவிட்டு நவம்பர் 28-ம் தேதி தமிழகம் திரும்ப உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. நவம்பர் 28-ம் தேதி தமிழகம் வரும் அண்ணாமலை, டிசம்பர் 1-ம் தேதி கோவையில் நடைபெறும் பாஜக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதாக கூறப்பட்டுள்ளது.

    ×