என் மலர்
நீங்கள் தேடியது "போனஸ்"
- இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்தது.
- ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல்படுத்தினார்கள்.
தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் வழங்கப்பட்டு வருகின்றன. சரி, இந்த போனஸ் வழங்கும் முறை எப்படி வந்தது?
இந்தியாவில் பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திற்கு முன்பு வார சம்பள முறையே நடைமுறையில் இருந்து வந்தது...! (வருடத்திற்கு 52 வாரங்கள்)
ஆங்கிலேயர்கள் மாத சம்பள முறையை அமுல்படுத்தினார்கள். 4 வாரங்களுக்கு ஒரு சம்பளம் என கணக்கிட்டு மாத சம்பளமாக கொடுத்தனர்..! (12×4=48 வாரங்கள்) அவ்வாறு மாதத்திற்கு ஒரு சம்பளம் என்றால் வருடத்திற்கு 12 சம்பளம் வருகிறது. ஆனால் 4 வாரத்திற்கு ஒரு சம்பளம் என்று கணக்கிட்டு பார்த்தால் வருடத்திற்கு 13 சம்பளம் வர வேண்டும்.
அதனை தரும்படி 1930-1940 களில் மகாராஷ்டிராவில் உள்ள தொழிற்சங்க ஊழியர்கள் தங்களது 1 மாத சம்பளம் வஞ்சிக்கப்படுவதாக போராடினார்கள்.
அதன் விளைவாக அந்த ஒரு மாத சம்பளத்தை எப்போது எப்படி கொடுக்கலாம் என பிரிட்டிஷார் தொழிற்சங்க தலைவர்களுடன் ஆலோசனை செய்தார்கள்..!
அப்போது தான், தீபாவளி / தசரா பண்டிகை பிரசித்தி பெற்ற பண்டிகையாதலால் அதனையொட்டி கொடுத்தால் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அது வசதியாக இருக்கும் என கோரிக்கை வைத்ததின் விளைவாக போனஸ் என்ற பெயரில் முதன் முதலில் 1940ம் வருடம் ஜூன் மாதம் 30ம் தேதி வழங்கப்பட்டது..! பின்நாட்களில் அது லாப விகிதத்தை கணக்கிட்டு கொடுக்கப்பட்டது.
- இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
- அக்டோபர் 2-ம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
புதுடெல்லி:
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 2-ம் தேதி தசராவும், அக்டோபர் 20-ம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம்.
இந்நிலையில், ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனசாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன்மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.1,866 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போனஸ் தொகையானது, ரெயில்வே ஊழியர்களில் தண்டவாள பராமரிப்புப் பணி தொழிலாளர்கள், லோகோ பைலட், ரெயில்வே கார்டுகள், ரெயில்நிலைய மேலாளர், கண்காணிப்பாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், உதவியாளர்கள் என பல தரப்பட்ட ஊழியர்களுக்கும் வழங்கப்படும்.
ஊழியர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அவர்களை ஊக்கப்படுத்தவும் மத்திய அரசு சார்பில் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.
- ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.
- இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.
சீனாவில் Arashi Vision Inc என்ற நிறுவனத்தில் உடல் எடையை குறைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ஊழியர்கள் 500 கிராம் எடையை குறைத்தால் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.6,100 வழங்கியுள்ளது.
இந்த சவாலில் பங்கேற்ற இளம்பெண் ஒருவர் 90 நாட்களில் 20 கிலோ எடையை குறைத்து, ரூ.2.47 லட்சம் பெற்றுள்ளார்.
ஊழியர்களிடையே ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, இந்த சவாலை கொண்டு வந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2022 முதல், இந்த நிறுவனம் உடல் எடையை குறைக்கும் சவாலை நடத்தி, தோராயமாக ₹2.47 கோடி வெகுமதிகளை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 99 ஊழியர்கள் மொத்தமாக 950 கிலோ எடையை குறைத்து ரூ.1.23 கோடியை பிரித்துக் கொண்டனர்.
- பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
- 45 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 85 ஆயிரத்திற்கான காசாசோலையை வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கீழச்சிவல் பட்டி அருகே இளையாத்தங்குடியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் பொது பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பால் உற்பத்தியாளர் களுக்கு போனஸ் தொகை மற்றும் கூடுதல் கொள்முதல் விலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அமைச்சர்கள் பெரியகருப்பன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 45 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 85 ஆயிரத்திற்கான காசாசோலையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, வட்டாட்சியர் வெங்க டேஷன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், துணை செயலாளர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்ட மைப்பு தலைவர் மாணிக்க வாசகம், மகிபாலன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், துவார் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன், மற்றும் பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஏ.காசிராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் மு.மனோகரன் முன்னிலை வகித்தாா்.
- போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாகவே வழங்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூா் பனியன் தொழிலாளா் முன்னேற்ற சங்கத்தின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஏ.காசிராஜ் தலைமை வகித்தாா். செயலாளா் மு.மனோகரன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு காரணமாக தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, பனியன் தொழிலைச் சாா்ந்த அனைத்து தொழிலாளா்களுக்கும் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் போனஸ் வழங்க வேண்டும். போனஸ் தொகையை தீபாவளி பண்டிகைக்கு 15 நாள்களுக்கு முன்பாகவே வழங்க வேண்டும். மேலும், தொழிலாளா்களுக்கான 4 சதவீத ஊதிய உயா்வை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- நலவாரியங்களில் தற்போது 40 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா்.
- கட்டுமான தொழிலாளா்களுக்கு வீடு கட்ட மானியம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும்.
திருப்பூர்:
எச்எம்எஸ்., தொழிற்சங்கம் சாா்பில் திருப்பூர் மாவட்டத் தலைவா் ஆா்.முருகன், மாவட்டச்செயலாளா் முத்துசாமி ஆகியோா் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:-
முன்னாள் முதல்வா் கருணாநிதியால் தமிழகத்தில் கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளா்களுக்கு என தனித்தனியாக 18 நலவாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நலவாரியங்களில் தற்போது 40 லட்சம் தொழிலாளா்கள் பதிவு செய்துள்ளனா். இந்த தொழிலாளா்கள் அனைவருக்கும் தீபாவளி போனஸ் தொகையாக ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும்.கட்டுமான தொழிலாளா்களுக்கு வீடு கட்ட மானியம் பெறும் நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும். தமிழகத்தில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான 18 நலவாரியங்களிலும் ஒரே மாதிரியான இணையதள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளிபாளையம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பள்ளிபாளையத்தின் பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்டத் தலைவர் மோகன், ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பள்ளிபாளையம் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்துகொண்டு 20 சதவீத போனஸ் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை அடுத்தடுத்து நடத்த உள்ளதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படும் தீப ஒளிக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை.
- விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதம் ஆக உயர்த்தி உடனடியாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் தீபஒளி திருநாளையொட்டி தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு மிகை ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படும் தீப ஒளிக்கு இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், இது தொடர்பாக அரசிடமிருந்து எந்த அசைவும் இல்லை.
அதனால், கடந்த ஆண்டைப் போலவே கடைசி நேரம் வரை தாமதித்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தாமல், 10 சதவீதம் மட்டுமே மிகை ஊதியம் வழங்கப்படும் என்று அரசு தன்னிச்சையாக அறிவித்து விடுமோ? என்ற ஐயமும், கவலையும் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே தொகையே மிகை ஊதியமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு நடப்பாண்டில் மிகை ஊதியத்தின் அளவை 25 சதவீதம் ஆக உயர்த்தி, உடனடியாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சங்கத்தின் 40 -வது ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.
- போனஸ் விதிகளின்படி அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் அறிவிக்க வேண்டும்.
தஞ்சாவூர்:
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சங்கத்தின் 40 -வது ஆண்டு பேரவை கூட்டம் சங்கத் தலைவர் சேகர் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் சந்திரன் வரவேற்று பேசினார்.
அஞ்சலி தீர்மானத்தை மாநில குழு உறுப்பினர் கஸ்தூரி வாசித்தார்.
ஏஐடியூசி மாநில செயலாளர் தில்லைவனம் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார்.
நடைபெற்ற பணிகள் குறித்து பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன் வேலை அறிக்கை வாசித்தார்.
பொருளாளர் ராஜமன்னன் வரவு செலவு கணக்கு சமர்ப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேரவை புதிய நிர்வாகிகளாக தலைவர் சேகர், பொதுச் செயலாளர் தாமரைச்செல்வன், பொருளாளர் ராஜமன்னன் ஆகியோர் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொருளாளர் நேருதுரை பேரவையை முடித்து வைத்து நிறைவுரை ஆற்றினார்.
இந்த பேரவையில் திருத்தப்பட்ட போனஸ் விதிகளின்படி பஸ்பாடி கிளீனர், கேன்வாசர் உள்ளிட்ட அனைவருக்கும் 25 சதவீதம் போனஸ் அறிவிக்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சம்மேளன துணைத் தலைவர் துரை. மதிவாணன், மாவட்ட தலைவர் சேவையா, தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், ஓய்வு பெற்றோர் சங்க பொருளாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாகிகள் சுந்தரபாண்டியன், தங்கராசு, தமிழ்மன்னன், ரெங்கதுரை, வீரையன், முருகவேல், சுமன், இளங்கோவன், சுகுமார், நல்லதம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தீபாவளி போனஸ் 13.50 சதவீதம் வழங்குவது என ஏற்றுக் கொண்டு கையொப்பம் போடப்பட்டது.
- விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட துணைச்செயலாளா் பழனிசாமி, ஏஐடியூசி., செல்வராஜ், ரவி, ஏடிபி., நடராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
அவிநாசி:
அவிநாசி பகுதி விசைத்தறி தொழிலாளா்களுக்கு இந்த ஆண்டு 13.50 சதவீதம் போனஸ் வழங்குவது என இருதரப்பு பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
அவிநாசி ஒன்றிய பகுதியில் விசைத்தறி கூலித் துணி உற்பத்தியாளா் சங்க பிரதிநிதிகள், விசைத்தறி தொழிற்சங்க நிா்வாகிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது.இதில் தீபாவளி போனஸ் 13.50 சதவீதம் வழங்குவது என ஏற்றுக் கொண்டு கையொப்பம் போடப்பட்டது.
இதில் உற்பத்தியாளா்கள் சாா்பில் முத்துசாமி, செந்தில், சம்பத்குமாா், தொழிற்சங்கங்கள் சாா்பில் சிஐடியூ., விசைத்தறி தொழிலாளா் சம்மேளன மாநிலத் தலைவா் முத்துசாமி, சிஐடியூ., விசைத்தறி தொழிலாளா் சங்க மாவட்ட துணைச்செயலாளா் பழனிசாமி, ஏஐடியூசி., செல்வராஜ், ரவி, ஏடிபி., நடராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
- பண்டிகை நாட்களில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:
தீபாவளி பண்டிகையை யொட்டி பொதுத்துறை நிறுவனங்களுக்கும், அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனங்களுக்கும் போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ் எத்தனை சதவீதம் வழங்க வேண்டும் என்பதற்கான பேச்சுவார்த்தை சென்னையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 21 தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
தமிழ்நாடு மாநில வாணிப கழக பணியாளர் முன்னேற்ற சங்கம், டாஸ்மாக் தொழிலாளர் அண்ணா தொழிற்சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், பாட்டாளி தொழிற்சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் நிரந்தர பணியாளர் சங்கம், விற்பனையாளர்கள் சங்கம் உள்பட 21 தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்றன.
இதில் டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) பொதுச்செயலாளர் தனசேகரன் கொடுத்திருந்த கோரிக்கையில், டாஸ்மாக் பணியாளர்கள் அனைவருக்கும் 20 சதவீதம் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அது மட்டுமின்றி பண்டிகை நாட்களில் பணிபுரியும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோல் ஒவ்வொரு சங்க பிரதிநிதிகளும் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இவற்றை அமைச்சர் முத்துசாமி பெற்றுக் கொண்டு, ஒவ்வொரு சங்கங்களின் கோரிக்கையையும் கவனமுடன் பரிசீலித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று போனஸ் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
- அதிகபட்சமாக ரூ.7000-7400 வரை கிடைக்கும்
- ரூ.14 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு
கோவை,
தமிழகம் முழுவதும் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
தமிழகத்தில் நெல்லை மாவட்டம் மாஞ்சோலை, கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் நீலகிரி, தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு டான்டீ தேயிலை தோட்டங்கள் மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளன.
அவற்றில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இதில் தனியார் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி போனஸ் வழங்குவதற்கான பேச்சுவார்த்தை கடந்த 2 வாரமாக நடைபெற்று வந்தது. இதில் தற்போது உடன்பாடு ஏற்பட்டு உள்ளது.
பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கம் தரப்பில் அண்ணா தேயிலை தோட்ட தொழிலாளர் சங்க மாநில தலைவர் வால்பாறை
வீ.அமீது, எல்.பி.எப்.சவுந்தர பாண்டியன், வினோத், ஏ.ஐ.டி.யு.சி. மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வீரமணி, செல்வகுமார், ஐ.என்.டி.யு.சி. கருப்பையா, ஆனைமலை ஒர்க்கர்ஸ் யூனியன் வர்க்கீஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
நிர்வாகம் தரப்பில் துணை தலைவர் பாலசந்தர், (உப்ரியார் குரூப்), குரூப் மேலாளர் ரஞ்சித் கட்டபுரம், துணை தலைவர் முரளி பாரிக்கர், (பாரி அக்ரோ), திம்பையா (முடீஸ்), ஆனை மலை தோட்ட அதிபர்கள் சங்க தலைவர் ரஞ்சித்குமார், செயலாளர் பர்தோஸ், விஜயன், (கருமலை), ராஜ்மோகன் (வாட்டர்பால்), குரூப் மேலாளர் அக்ஷயா, (டாடா காபி), சட்ட ஆலோசகர் பிரகாஷ் சங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
அதன்படி உப்ரியார் (ஸ்டான் மோர் குரூப்), பாரி அக்ரோ (அய்யர் பாடி குரூப்), முடீஸ் குரூப், டாடா காபி, சோலையாறு (ஜெய ஸ்ரீ), கருமலை ஆகிய எஸ்டேட்களில் பணியாற் றும் தொழிலாளர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட் டுள்ளது.
இது போல் வாட்டர்பால் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு 10 சதவீதம், கவர்கல் எஸ்டேட் தொழிலாளர்க ளுக்கு 9 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் ஒரு தொழிலாளிக்கு அதிகபட்ச மாக ரூ.7 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரத்து 400 வரை போனஸ் கிடைக்கும். போனஸ் பட்டு வாடாவை உடனே தொடங்கி நாளை மறுநாளுக்குள் (செவ்வாய்க் கிழமை) வழங்கி முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள எஸ்டேட்டுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மொத்தமாக சேர்த்து ரூ.14 கோடியே 70 லட்சம் போனஸ் வழங்கப்பட உள்ளதாக எஸ்டேட் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.






