என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்ப்பரேட்"

    • மேலாளருடனான வாட்சப் உரையாடல் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
    • உங்களுக்கு இப்போது விடுப்பு கொடுக்க முடியாது. அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

    ஆட்டு மந்தைகளைப் போல பணி நீக்கம் செய்யப்படுவதும், தனிப்பட்ட வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு எந்த நேரத்திலும் மீட்டிங், பணிச்சுமை என அலைக்கழிக்கப்படுவதும் கார்ப்பரேட் ஊழியர்கள் நவீன கொத்தடிமைகளாக மாறி வருவதற்காக அறிகுறி என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

    இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பல சம்பவங்களும் அவ்வப்போது வெளிவருகின்றன.

    அந்த வகையில், பிரசவ வலி ஏற்பட்ட மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, தனக்கு 2 நாட்கள் லீவ் வேண்டும் என தனது நிறுவன மேலாளரிடம் கேட்ட ஊழியருக்கு கிடைத்த பதில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

    மேலாளருடனான வாட்சப் உரையாடல் புகைப்படத்தை பகிர்ந்து Reddit சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட இந்த அனுபவம் விமர்சனங்களை ஏற்ப்படுத்தி வருகிறது

    அந்த பதிவின்படி, ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் ஊழியர் பிரசவ வலி ஏற்பட்ட தனது கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு அவரை கவனித்துக்கொள்வதற்காக 2 நாட்கள் தனது நிறுவன மேலாளரிடம் விடுப்பு கேட்டுள்ளார்.

    இதற்கு பதியளித்த மேலாளர், 'உங்களுக்கு இப்போது விடுப்பு கொடுக்க முடியாது. அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவியின் பிரசவத்திற்கு நீங்கள் என்ன செய்ய முடியும்? வேண்டுமானால் மருத்துவமனையில் இருந்து வேலை செய்ய முடியுமா?' என்று பதிலளித்தார்.

    இதற்கு பதிலளித்த ஊழியர்,"அது சாத்தியமில்லை, மருத்துவமனையில் மனைவியை கவனித்துக் கொள்ள வேண்டியவன் நான். மருத்துவக் வாங்க செல்வது போன்ற வேறு வேலைகளும் உள்ளன. மேலும், மருத்துவமனையில் இருந்து அலுவலக வேலைகளைச் செய்வது சாத்தியமில்லை," என்று பதில் கூறியுள்ளார். இதன்பின் மேலாளர் வேண்டா வெறுப்பாக அவருக்கு விடுப்பு வழங்கியுள்ளார். இந்த பதிவு வைரலாகி விமர்சனங்களை குவித்து வருகிறது. 

    • அந்த வீடியோவில் தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களுக்கு ஊழியர்கள் நடனமாடுகின்றனர்.
    • இதை பார்த்து வெளிநாட்டு Client ஈர்க்கப்படுகிறார்.

    வெளிநாட்டு Client தங்கள் அலுவலகத்திற்கு வந்தபோது, அவரை நடனமாடி வரவேற்ற இந்திய ஊழியர்களின் வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது.

    அந்த வீடியோவில் தெலுங்கு மற்றும் இந்தி பாடல்களுக்கு ஊழியர்கள் நடனமாடுகின்றனர். இதை பார்த்து வெளிநாட்டு Client ஈர்க்கப்படுகிறார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாக, ஊழியர்கள் அலுவலகத்தில் நடனமாடி வெளிநாட்டு Client -ஐ வரவேற்க கட்டாயப்படுத்தப்படுகிறார்களா? நடனமாடாத ஊழியர்கள் பழிவாங்கப்படுகிறார்களா? என்று நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். மேலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த மோசமான நடைமுறையை நிறுத்த வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காசாவில் இஸ்ரேலின் 21 மாத தாக்குதலில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறது.
    • உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம்.

    ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து லாபம் ஈட்டியதற்காக உலகளாவிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடை உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு பிரான்செஸ்கா அல்பனீஸ் அளித்த அறிக்கை, காசாவில் இஸ்ரேலின் 21 மாத தாக்குதலில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறது.

    காசாவில் முற்றிலுமாக சிதைந்த நிலையிலும், இஸ்ரேலின் இனப்படுகொலை பெருநிறுவனங்களுக்கு லாபகரமானது என்பதால் தொடர்கிறது என பிரான்செஸ்கா அறிக்கை விளக்குகிறது .

    'ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை' என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனப் பிரதேசங்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கனரக இயந்திரங்களை வழங்குவதில் சர்வதேச நிறுவன பங்காளிகளின் ஈடுபாட்டையும், பொருட்களை விற்பனை செய்யும் விவசாய நிறுவனங்களையும், போருக்கு நிதியளிக்கும் முதலீட்டு நிறுவனங்களையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

    அரசியல் தலைவர்களும் அரசாங்கங்களும் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் அதே வேளையில், ஏராளமான பெருநிறுவனங்கள் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு,  இனப்படுகொலை ஆகியவற்றால் லாபம் ஈட்டியுள்ளன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

    சிறப்பு அறிக்கையாளர்கள் என்பவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை வழங்க அல்லது அறிக்கை அளிக்க ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் ஆவர்.

    2022 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்கள் குறித்த சிறப்பு அறிக்கையாளராக இருக்கும் இத்தாலிய சட்ட அறிஞரான பிரான்செஸ்கா அல்பானீஸ், காசாவில் இஸ்ரேலிய தாக்குதலை ஒரு 'இனப்படுகொலை' என்று ஜனவரி 2024 இல் முதன்முதலில் உறுதிப்படுத்தினார். இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.

    காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதலில் 57,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், பல பாலஸ்தீனியர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாகவும் நம்பப்படுவதால், உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

    • வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
    • நான் உங்களுக்கு கூறுவதெல்லாம் அதுபோன்ற [பணிச்சூழல்] பாம்புப் புற்றுகளை விட்டு சுதாரித்து உடனே வெளியே வந்துவிடுங்கள்.

    ஏதன் ஈவென்ஸ் [Ethan Evans] தனது மண வாழ்வுக்கு வேலையிடத்தால் வந்த வினையை குறித்து மனம் திறந்துள்ளார். லிங்க்கிட்- இன் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் தொடக்கத்தில் வேலை செய்து வந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓ, வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.

    எனது மனைவியும் நானும் விவாகரத்து பெற்று பிரிய நேர்ந்தது. நான் எனது வேலையையும் விட்டுவிட்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன். அந்த சிஇஓவின் செயல்கள் குறித்து நான் முன்னரே அறிந்திருந்தாலும் எனது பொருளாதார சூழல் காரணமாகவும், அவர் எப்படியும் அவரது முயற்சிகளில் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கையிலும், அங்கு தொடர்ந்து வேலை செய்து பெரிய தவறு செய்துவிட்டேன். அந்த தவறுக்கு நான் பெரிய விலை கொடுக்க நேர்ந்தது.

     

    நான் உங்களுக்கு கூறுவதெல்லாம் அதுபோன்ற [பணிச்சூழல்] பாம்புப் புற்றுகளை விட்டு சுதாரித்து உடனே வெளியே வந்துவிடுங்கள். இதுபோன்ற [ஸ்டார்ட் அப் சிஇஓ] பாம்புகளை எப்படிக் கண்டறிய வேண்டும் என்றால் அவர்கள் பின்புலம் குறிக்கும், அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது குறித்து முன்னரே அறிந்துகொள்ளுங்கள் என்று கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்து ஊழியர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். ஏதன் அமேசான் சிஇஓ ஜெப் பெசோசை பற்றி தான் கூறுகிறாரா என்று பலர் கேள்வியெழுப்பிய நிலையில் ஏதன் அமேசானில் பணிக்கு சேர்வதற்கு முன்னர் பணியாற்றிய நிறுவனம் குறித்து இங்கு கூறியுள்ளார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ள்ளது. 

     

     

    • Task, Incentive Target, Apprisal உள்ளிட்டவை கார்ப்பரேட் ஊழியர்களைப் பிணைக்கும் சங்கிலிகளாக இறுகி வருகிறது.
    • பெண்ணின் உயிரிழப்புக்கு நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

    உலகம் முழுவதிலும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் வலுப்பெற்றுள்ள நிலையில் ஊழியர்கள் நவீன அடிமைத்தனத்தில் உழன்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் வகையில் பணிச்சுமை மரணங்கள் தொடர்கதையாகி வருகிறது. Task, Incentive Target, Apprisal உள்ளிட்டவை கார்ப்பரேட் ஊழியர்களைப் பிணைக்கும் சங்கிலிகளாக இறுகி வருகிறது. கடந்த வாரம் புனேவின் எர்னஸ்ட் எங் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 26 வயது பணிச்சுமை மற்றும் பணியிட அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

     

    மேலும் உ.பியில் தனியார் வங்கியில் பணியாற்றிவந்த பெண் ஊழியர் வேலையில் இருக்கும்போதே சேரில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்தார். இந்நிலையில் தாய்லாந்தைச் சேர்ந்த 30 வயது பெண் Sick லீவு கிடைக்காமல் மேனேஜர் முன்னையே நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் சமுத் பிராகன் [Samut Prakan] மாகாணத்தில் இயங்கி வரும் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்புடைய பிளான்டில் வேலை செய்தி வந்த மே [May] என்ற 30 வயது பெண் ஊழியர் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டுள்ளார்.

    கடந்த செப்டம்பர் 5 முதல் அவரது உடல்நிலை மோசமான நிலையில் மெடிக்கல் சர்டிபிகேட்டை பணிபுரியும் நிறுவனத்தில் சமர்பித்து செப்டம்பர் 5 முதல் 8 ஆம் தேதி வரை லீவ் எடுத்துவிட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். டிஸ்சார்ஜ் ஆன பிறகு செப்டம்பர் 12 லீவு வரை ஓய்வுக்காக மேலும் 2 நாட்கள் லீவு வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அதிக நாட்கள் லீவு எடுத்து விட்டதால் இனி லீவ் தர முடியாது என்றும் கூடுதலாக செப்டம்பர் 9 முதல் 12 வரை எடுத்த லீவுக்கு மெடிக்கல் சர்டிபிகேட் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வேலை செய்யும்படியும் மேனேஜர் உத்தரவிட்டுள்ளார்.

    வேலையை இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி மேலும் ஒரு மெடிக்கல் சர்டிபிகேட்டுடன் வந்து மேனேஜரிடம் கொடுத்துவிட்டு வேலை செய்யத் தொடங்கிய 20 நிமிடத்திற்குள் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்துள்ளார். தொடந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அடுத்த நாளே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சக ஊழியர்கள் மூலம் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் மே வேலை பார்த்து வந்த  நிறுவனம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

    • ஸ்விகி, சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களின் வருகை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • இந்திய மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது.

    இந்திய சமூகத்தில் சமீப காலமாக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் முறை அதிகரித்து வருகிறது. மேல்தட்டு மக்கள் இடையே மட்டுமே இருந்து வந்த இந்த வழக்கம் தற்சமயம் நடுத்தர குடும்பங்கள் இடையேயும் பரவி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஸ்விகி, சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களின் வருகை.

    சிலிண்டர் டோர் டெலிவரி வாங்கி உணவு சமைத்து சாப்பிடுவற்கு பதிலாக உணவையே 10 நிமிடங்களில் டோர் டெலிவரி வாங்கி சாப்பிட்டுவிடலாமே என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். தற்கால கார்ப்பரேட் லைப் ஸ்டைலில் எதற்குமே நேரம் இல்லாதது போலவும், எல்லாமே எளிதில் கிடைக்கும்போது ஏன் சிரமப்பட வேண்டும் என்ற  பிம்பமும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வியாபார உத்தியால் நாளுமொரு புதிய நிறுவனம் உதித்த வண்ணம் உள்ளது.

     

    அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு புள்ளி விவரம் மேற்கூறியவற்றை உறுதி செய்வதாக உள்ளது. அதாவது, ஆன்லைன் ஸ்விகி [Swiggy], சோமாட்டோ[Zomato], பலசரக்கு டெலிவரி நிறுவனமான [Blinkit] மற்றும் [Zepto] ஆகிய 4 நிறுவனங்கள் சேர்ந்து கடந்த ஒரே வருடத்தில் 35,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன.

    இது இந்திய மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது. நிறுவனங்களின் பசி, மக்களின் பசியை தீர்மானிக்கும் காலம் இது என சமூக ஆர்வலர்கள் நொந்து கொள்கின்றனர்.

    • தாம்சன் மீது சுடப்பட்ட தோட்டாக்களில் 'Deny, defend, depose' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.
    • நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக வேண்டும்

    அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் யுனைடட் ஹெல்த்கேர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி [சிஇஓ] பிரையன் தாம்சன் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி [புதன்கிழமை] மன்ஹாட்டனில் நிறுவனம் முதலீட்டாளர் தினத்தை நடத்தும்போது நியூயார்க் ஹில்டன் மிட்டவுன் ஹோட்டலுக்கு வெளியே வைத்து மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    50 வயதான தாம்சன், யுனைடெட் ஹெல்த் கேர், யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் காப்பீட்டுப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஏப்ரல் 2021 முதல் தாம்சன் செயல்பட்டு வந்தார். தாம்சன் மீது சுடப்பட்ட தோட்டாக்களில் 'Deny, defend, depose' என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன.

     

    இந்த கொலை தொடர்பாகக் கடந்த வாரம் முதல் குற்றவாளியைத் தேடி வந்த எப்.பி.ஐ. போலீஸ் 26 வயதான இன்ஜினீயரிங் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் என்ற இளைஞரை இன்று கைது செய்துள்ளது.

    முன்னதாக இவரின் புகைப்படங்களை போலீஸ் வெளியிட்டிருந்தது. அதன்படி அல்டூனா பகுதியில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவக ஊழியர் ஒருவர் இவரை அடையாளம் கண்டு போலீசிடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஜினீயர் மான்ஜியோனை மடக்கிப் பிடித்துள்ளது.

    கைது செய்யப்பட்டபோது மான்ஜியோன் "கார்ப்பரேட் அமெரிக்காவிற்கு" எதிராக என்ற கையால் எழுதப்பட்ட ஒரு அறிக்கையை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

     

    அதிகாரிகள் கூற்றுப்படி, அந்த இரண்டு பக்க அறிக்கையில், [மருத்துவ] சுகாதாரத் துறை நோயாளிகளின் நலனை விட லாபத்தையே முதன்மை நோக்கமாக வைத்திருப்பதை விமர்சித்ததும், இதற்கு வன்முறைதான் பதில் என்ற முடிவை பரிந்துரைத்துள்ளது.

    நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக  வேண்டும், இந்த ஒட்டுண்ணிகளுக்கு இது நடக்க வேண்டியதுதான் [These parasites had it coming] என்று அதில் எழுதி வைத்துள்ளார். இன்ஜினியர் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் தன்னிச்சையாகவே இந்த கொலையை செய்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

    • கைது செய்யப்பட்ட மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
    • மான்ஜியோனுக்கு ஆதரவாக வாதாட பெண் வழக்கறிஞர் கேரன் ஆக்னிபிலோ ஆஜரானார்.

    அமெரிக்காவில் மருத்துவத்துறை சார்ந்த முன்னணி நிறுவனம் யுனைடட் ஹெல்த்கேர். இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி [சிஇஓ] பிரையன் தாம்சன் [50 வயது] கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ஹோட்டல் வாசலில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

     

    இந்த கொலை தொடர்பாக கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி பென்சில்வேனியாவில் மெக்டோனால்ஸ் கடையில் வைத்து 26 வயதான இன்ஜினீயரிங் பட்டதாரி லூய்கி மான்ஜியோன் என்ற இளைஞரை எப்.பி.ஐ. போலீஸ் கைது செய்தது. வீட்டிலேயே 3டி பிரிண்டர் மூலம் துப்பாக்கியை செய்து அதன்மூலம் இந்த கொலையை அவர் செய்ததாக போலீஸ் தெரிவித்தது.

     

    லைஃப் இன்சூரன்ஸ் சார்ந்த யுனைடட் ஹெல்த்கேர் உள்ளிட்ட நிறுவனங்களின் அணுகுமுறை மக்களின் உயிரை பணமாக பார்ப்பதாக வெகு மக்களிடையே கோபம் இருந்து வந்த நிலையில் இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மான்ஜியோனுக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தான் அந்த கொலையை செய்யவில்லை என்று மாஞ்சியோன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

    கொலை, பயங்கரவாத செய்லபாடுகள் உள்ளிட்ட 11 பிரிவுகளின்கீழ் மாஞ்சியோன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மான்ஹாட்டனில் உள்ள நியூ யார்க் மாகாண குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று [திங்கள்கிழமை] மாஞ்சியோன் ஆஜர்படுத்தப்பட்டார்.

     

    மான்ஜியோனுக்கு ஆதரவாக வாதாட பெண் வழக்கறிஞர் கேரன் ஆக்னிபிலோ ஆஜரானார். தனது கட்சிக்காரரை மனித பிங்பாங் பந்துபோல் அதிகாரிகள் நடத்துவதாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாஞ்சியோன் தான் குற்றம் செய்யவில்லை [NOT GUILTY] என்று தெரிவித்தார்.

     

    இதனையடுத்து வழக்கு விசாரணை 2025, பிப்ரவரி 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் கவனம் பெற்றுவரும் இந்த வழக்கில் மாஞ்சியோன் குற்றத்தை ஒப்புக்கொள்ளாதது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

    முன்னதாக [மருத்துவ] சுகாதாரத் துறை நோயாளிகளின் நலனை விட லாபத்தையே முதன்மை நோக்கமாக வைத்திருப்பதை விமர்சித்து, இதற்கு வன்முறைதான் பதில் என்றும் நான் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன், ஆனால் இதை செய்தே ஆக வேண்டும், இந்த ஒட்டுண்ணிகளுக்கு இது நடக்க வேண்டியதுதான் [These parasites had it coming] என்று கைது செய்யப்பட்டபோது மான்ஜியோனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அறிக்கையில் எழுதியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×