search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "medical"

    குமாரபாளையத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    குமாரபாளையம்:

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலமாக ஆய்வு செய்ததில், நாமக்கல் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 201 குழந்தைகள் வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவு தன்மை ஆகிய குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த மே 24ந் தேதி முதல் ஒரு மாதத்திற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, இது போன்ற குழந்தைகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

    இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
    உடன்குடி பேரூராட்சி 3-வது வார்டில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    உடன்குடி:

    தமிழக அரசின் வீடு தேடி மருத்துவ முகாம் திட்டத்தின்படி ரத்த அழுத்தம், நீரழிவு நோய், பரிசோதனை முகாம் உடன்குடி பேரூராட்சி 3-வது வார்டில் நடந்தது. 

    மக்களை சந்தித்து மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. 3-வது வார்டு கவுன்சிலர் மும்தாஜ் பேகம் முகாமை தொடங்கி வைத்தார். 

    பின்பு 3-வது வார்டு முழுவதும் சுற்றி வந்து 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் பெண்களை கட்டாயமாக பரிசோதனை செய்ய அழைத்து வந்து பரிசோதனை செய்ய வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை 3-வது வார்டு தி.மு.க. செயலாளர் சலீம் செய்திருந்தார்.  

    நிகழ்ச்சியில் ஹாஜா முகைதீன், பீர் முஹம்மது மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    நாமக்கல் மாவட்டத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் 1 மாதம் நடக்கிறது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி-110-ன் கீழ் சட்டமன்றத்தில்  தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியினை மேம்படுத்த அரசு வழிகாட்டுதலின்படி, மார்ச்  மாதம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் மூலமாக தமிழகத்திலுள்ள சுமார் 37 இலட்சம்       6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘சிறப்பு வளர்ச்சிக் கண்காணிப்பு இயக்கம்” நடத்தப்பட்டது.

     இதில், நாமக்கல் மாவட்டத்தில் 16201 குழந்தைகள் வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது  கண்டறியப்பட்டுள்ளது. 

    முதல்-அமைச்சரின் அறிவிப்பினை முனைந்து செயல்படுத்த முதற்கட்டமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டப்பணிகள் துறை மற்றும் சுகாதாரத்துறையுடன் இணைந்து  ஒரு மாத காலத்திற்கு குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற–வுள்ளது.

    எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள குழந்தைகள் மையத்தை (அங்கன்வாடி மையத்தை) தொடர்பு கொண்டு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த விபரத்தினை அறிந்துகொண்டு, வருங்கால  சந்ததியினர்களை வளமானவர் களாக மாற்ற, ஊட்டச்சத்து குறைபாடில்லா தமிழகத்தை உருவாக்கிட பெற்றோர்களும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். 

    இன்று முதல்  1 மாத காலத்திற்கு நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமிற்கு தங்கள் குழந்தைகளுடன் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படு–கிறார்கள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    ×