என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாலுமாவடியில்  புற்றுநோய் கண்டறியும் இலவச முகாம்
    X

    முகாமில் கலந்து கொண்ட ஒருவரை மருத்துவர் பரிசோதனை செய்த காட்சி.


    நாலுமாவடியில் புற்றுநோய் கண்டறியும் இலவச முகாம்

    • இலவச புற்றுநோய் கண்டறியும் முகாமினை யூனியன் சேர்மன் ஜனகர் தொடங்கி வைத்தார்.
    • முகாமில் மேமோகிராம், எக்கோ கார்டியோகிராம், உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

    குரும்பூர்:

    நாலுமாவடி புதுவாழ்வு பன்னோக்கு மருத்துவமனை, மதுரை குரு புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனை சார்பில் இலவச புற்றுநோய் கண்டறியும் முகாம் நாலுமா வடியில் நேற்று நடந்தது.

    முகாமுக்கு புதுவாழ்வு பன்னோக்கு மருத்துவ மனையின் இயக்குநர் டாக்டர் அன்புராஜன் தலை மை தாங்கினார். ஆழ்வை வட்டார மருத்துவ அலுவலர் பாத்திபன் முன்னிலை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ராஜகுமாரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆழ்வை. யூனியன் சேர்மன் ஜனகர் முகாமை தொடங்கி வைத்து பேசினார்.

    முகாமில் மேமோகிராம், ரத்த சர்க்கரை, ஈ.சி.ஜி, எக்கோ கார்டியோகிராம், பிஏபிசமீர், எப்என்ஏசி ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் நாலுமாவடி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து முகாம் இன்றும் நடக்கிறது. ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×