search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச"

    இலவச எல்.கே.ஜி. சேர்க்கை தொடர்பாக சேலம், நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் இன்று குலுக்கல் முறையில் குழந்தைகள் தேர்வு, பெயர் பட்டியல் பலகையில் ஒட்டப்பட்டது.
    சேலம்:

    2022-2023-ம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009 ன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25 சதவீத  இடஒதுக்கீட்டில் சேர்க்கைக்கு 20.04.2022 முதல் 25.05.2022 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 

    இதனை தொடர்ந்து, அவற்றில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் விவரம் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள சம்பந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையில் கடந்த 28-ந்தேதி  ஒட்டப்பட்டது.

    தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத  இடஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக உள்ள பள்ளிகளில் இன்று (30-ந்தேதி) குலுக்கல் முறையில்    தெரிவு செய்து மாணவர் சேர்க்கை வழங்கப்படும் என கடந்த 3 நாட்களுக்கு முன்பு கல்வி துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

    குலுக்கல் மூலம் தேர்வு இதையடுத்து சம்பந்தப்பட்ட பள்ளிகளில் இருந்து பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு குலுக்கல் நடைபெறும் நேரம் தெரிவிக்கப்பட்டது. மேலும், குழந்தையின் பிறந்த சான்றிதழ், சாதி சான்றிதழ், நலிவடைந்த பிரிவினருக்கான வருமான சான்று, ஆதார்  அட்டை, புகைப்படம், பெற்றோரின் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பள்ளிக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கூறப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9 மணிக்கு முன்பாக  பெற்றோர்கள் உரிய ஆவணங்களுடன் தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளுக்கு வந்திருந்தனர்.  ஒரு இடத்திற்கு பலர் விண்ணப்பித்திருந்ததால்  பள்ளி கல்வித்துறை சார்பில்  பள்ளிகளில் குலுக்கல் முறையை கண்காணிக்க  ஆசிரியர் பயிற்றுநர், தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

    காலை 10 மணி அளவில் வகுப்பறையில்  வைத்து மாணவ- மாணவிகளின் பெயர்கள் துண்டு சீட்டுக்களில் எழுதி அட்டை பெட்டிகளில் போடப்பட்டது. இதையடுத்து பெற்றோர், பள்ளி நிர்வாகம் முன்னிலையில் அரசு அதிகாரி மேற்பார்வையில்  அட்டை பெட்டி குலுக்கப்பட்டது. அதில் ஒவ்வொரு மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    இன்று  பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு  மையமாக செயல்பட்ட பள்ளிகளில் மட்டும் தேர்வு முடிந்ததும் பிற்பகல் வேளையில்  குலுக்கல்  நடைபெற்றது.

    பெயர் பட்டியல் இந்த குலுக்கல் மற்றும் குலுக்கல் அல்லாத முறையில் தேர்வு   செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் அரசு அதிகாரியிடம் பள்ளி நிர்வாகம் வழங்கியது.  மேலும் இந்த தேர்வு  பட்டியலும் பள்ளி நோட்டீசு பலகையில்   ஒட்டப்பட்டது.  மேலும் உடனுக்குடன்  இந்த குழந்தைகளுக்கு இலவச எல்.கே.ஜி. சேர்க்கை   வழங்கப்பட்டது.
    குமாரபாளையத்தில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, குமாரபாளையம் செந்தூர் பவுண்டேசன் ஆகியவை  சார்பில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் வேதாந்தபுரம் சித்தி விநாயகர் கோயில் மண்டபத்தில் செந்தூர் பவுண்டேசன் இயக்குனர் கலாவதி தலைமையில் நடந்தது. 

    இதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி மற்றும் செயலர் விஜய்கார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி சக்திவேல் பங்கேற்று இலவச சட்ட விழிப்புணர்வு குறித்து பேசினர். பெண்களுக்கான சட்டம் சார்ந்த கேள்விகளுக்கும் பதில்கள் கூறினார்கள். 

    இதில் விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் சாலைகளில் விபத்து இல்லாமல் நாம் எப்படி பயணம் செல்லலாம் எனும் தலைப்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய  உதவிக்குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் பரிசும் சான்றிதழ்கள்  வழங்கப்பட்டன. இதில் இணை செயலர் மணிகண்டன், விபத்தை தவிர்போம் விழிப்புணர்வு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பூபதிராஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    ×