search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Compulsory Education"

    • கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த, ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.
    • 103 பள்ளிகளில், நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களைக் காட்டிலும், கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    நாமக்கல்:

    கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் கீழ், நடப்பு கல்வி ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், கடந்த, ஏப்ரல் மாதம் ஆன்லைன் மூலம் பெறப்பட்டது.

    அதன்படி 145 தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற 1,892 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், 103 பள்ளிகளில், நிர்ணயம் செய்யப்பட்ட இடங்களைக் காட்டிலும், கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

    மீதம் உள்ள, 42 தனியார் பள்ளிகளில், இருக்கின்ற இடங்களுக்கு ஏற்ப விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதை யடுத்து, குலுக்கல் முறையில் மாணவ, மாணவிகள் சேர்க்கை பெற 103 பள்ளிக ளில் சிறப்பு முகாம் நடந்தது.

    அதற்காக, ஒவ்வொரு தனியார் பள்ளிகளுக்கும், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டனர்.

    மேலும், அரசு விதிமுறைகளைப் பின்பற்றி குலுக்கல் நடக்கிறதா என்பதை கண்காணிக்கவும், மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

    மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், நுழைவு நிலை வகுப்பில் சேர்க்கை பெற, 1,600 மாணவ, மாணவியர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல், 42 தனியார் பள்ளிகளில், 25 சதவீதம் இடஒதுக்கீட்டின் கீழ், நேரடியாக மாணவ, மாண வியர் தேர்வு செய்யப்பட்ட னர் என பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பள்ளிகளில் 8-ம் வகுப்புவரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. #Parliament #Education #Class8
    புதுடெல்லி:

    கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ‘குழந்தைகள் இலவச, கட்டாய கல்வி உரிமை சட்டம்’, 8-ம் வகுப்புவரை எந்த மாணவரையும் ‘பெயில்’ ஆக்குவதற்கு தடை விதிக்கிறது. அதன்படி, 8-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களும் கட்டாய தேர்ச்சி (ஆல் பாஸ்) செய்யப்பட்டு வருகிறார்கள்.



    இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யும்வகையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அம்மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், இந்த மசோதா, நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதனால், இரு அவைகளின் ஒப்புதலையும் மசோதா பெற்று விட்டது. மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

    மசோதா மீதான விவாதத்துக்கு பதில் அளித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

    இந்த திருத்த மசோதாவின்படி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதியில் வழக்கமான தேர்வு நடைபெறும். அதில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும். அதிலும் தேர்ச்சி அடையாத மாணவர்களை ‘பெயில்’ ஆக்கி, அதே வகுப்பில் மீண்டும் படிக்க செய்ய சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்கலாம். இதில், மாநில அரசுகளே இறுதி முடிவு எடுக்கலாம்.

    இந்த சட்டத்தால், படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று உறுப்பினர்கள் கவலைப்படுவது சரியல்ல. போட்டி உணர்வை உருவாக்குவதே சட்டத்தின் நோக்கம். எந்த மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #Parliament #Education #Class8
    ×