மத்திய அரசு தேர்வு பணிக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

7500 -க்கும் மேற்பட்ட குரூப்- பி மற்றும் குரூப்- சி ஆகிய பதவி களுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணமாக ரூ. 10/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு தேர்வு பணிக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
Published on

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து ள்ளதாவது:-

மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்.எஸ்.சி) 7500 -க்கும் மேற்பட்ட குரூப்- பி மற்றும் குரூப்- சி ஆகிய பதவி களுக்கான ஒருங்கிணைந்தப் பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2023 ஆகும்.

இத்தேர்விற்கான கல்வித்தகுதி, குறைந்தபட்சம் ஏதாவது ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன் 01.08.2023 அன்றைய நிலையில் எஸ்.சி. எஸ்.டி பிரிவினர் 35 வயதுக்குள்ளும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு நடைமுறைவிதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தேர்வுக் கட்டணமாக ரூ. 10/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதி லிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு 04.05.2023 அன்று சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. வகுப்புகள் தொடர்பான விவரங்களுக்கு 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சேலம் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் அதிக அளவில் இத்தேர்விற்கு விண்ணப்பித்து, இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com