சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.
சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
Published on

சேலம்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 பணி காலியிடங்களுக் கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் நிலைய அதிகாரி 129 பணி காலியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் 1.6.2023 முதல் 30.6.2023 வரை விண்ணப்பித்து கொள்ளலாம்.

தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படு வதோடு, மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தீயணைப்பு நிலைய அலுவலர், இரண் டாம் நிலை காவலர் பணிகளுக்கான தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலா என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com