search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Free Medical camp"

    • பரமத்திவேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். வேலூர் பேரூராட்சி செயல்அ லுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    பேரூராட்சி தலைவர் லட்சுமி தலைமை வகித்தார். வேலூர் பேரூராட்சி செயல்அ லுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.

    வேலூர் பேரூராட்சியில் பணிபுரியும் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு பரமத்திவேலூர் அரசு டாக்டர் கோகுல் தலைமையிலான செவிலியர்கள் சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் மன ரீதியாக ஏற்படும் மன அழுத்தத்துக்கும் ஆலோசனை வழங்கப்பட்டது.

    தொடர்ந்து அனைத்து தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரத்த பரிசோதனை செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவு ரத்த அழுத்த அளவு பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, தலைவலி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    இந்த முகாமில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமிற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார்.
    • பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர்.

    முத்தூர்:

    முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் வள்ளியரச்சல் ஊராட்சிக்குட்பட்ட வ.கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.முகாமிற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்குகிறார்.

    முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைக்கிறார்.முகாமில் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர்.க.ஜெகதீஷ் குமார் அறிவுரையின்படி வெள்ளகோவில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ராஜலட்சுமி தலைமையில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், செவிலியர்கள் குழுவினர் நோயாளிகள்,கிராம பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கு இலவசமாக மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கி மருந்து, மாத்திரைகள் வழங்குகின்றனர்.

    முகாமில் மேல் சிகிச்சை, அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் உரிய சிகிச்சை பெற மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    • உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 86 போ் கலந்துகொண்டனா்.
    • ஆசிரிய பயிற்றுநா்கள், குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா்.

    உடுமலை:

    உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலத்தில் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி குடிமங்கலம் வட்டார வளமையத்தின் சாா்பில் உடுமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 86 போ் கலந்துகொண்டனா்.

    இதில் உதவி உபகரணங்கள் ஒருவருக்கும், புதிய தேசிய அடையாள அட்டை 30 பேருக்கும், இலவச பேருந்து பயண அட்டைகள், ெரயில் பயண அட்டைகள் 48 பேருக்கும் வழங்கப்பட்டன.

    மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளா் பாலசுந்தரி, வட்டார கல்வி அலுவலா் சரவணகுமாா், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் வசந்த் ராம்குமாா், வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சுமதி, வட்டார ஒருங்கிணைப்பாளா் சுப்பிரமணி, ஆசிரிய பயிற்றுநா்கள், குடிமங்கலம் வட்டார மருத்துவ அலுவலா்கள் உள்ளிட்டோா் இதில் கலந்து கொண்டனா். 

    • கயத்தாறு பேரூராட்சி மன்ற தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரைதொடங்கி வைத்து கண் கண்ணாடிகளை வழங்கினார்.
    • மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை, பார்வை குறைந்த மாணவ-மாணவிகளுக்கு இலவச கண்ணாடி 86 மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வட்டார ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் கயத்தாறு வட்டார வள மையத்தில் வைத்து 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது.

    முகாமில் மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை மருத்துவ மனைகள் சென்று இலவச சிகிச்சை, பார்வை குறைந்த மாணவ-மாணவிகளுக்கு இலவச கண்ணாடி 86 மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

    மேவலும் மருத்தவர்கள் கமலா மாணவ-மாணவிக ளுக்கு கண்கள் பாதுகாக்கப் படும் வழிமுறைகளை பற்றி விளக்கி கூறினார். இந்த முகாமை கயத்தாறு பேரூ ராட்சி மன்றத் தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்து கண் கண்ணாடிகளை வழங்கியும், அங்கு பரிசோதனைக்கு வந்தவர்களுக்கு அன்ன தானமும் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி யின் மாவட்ட துணை அமைப்பாளர் ராஜதுரை, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சிதம்பரம், வட்டார கல்வி அலுவலர் கனேசன், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுதா, உடற்கல்விஆசிரியர் சுரேஷ், பயிற்றுனர்கள் செந்தாமரை கண்ணன், மோகன் முருகன், நாயகம், ராதா டெல்லா, ஜான்சி, ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற் கான ஏற்பாடு களை வட் டார வளமைய அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக சுகாதார விழிப்புணர்வு முகாம் தளவா பாளையத்தில் நடைபெற்றது.
    • முகாமிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கினார்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் மன்மங்கலம் அருகே பண்டுதகாரன் புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக சுகாதார விழிப்புணர்வு முகாம் தளவா பாளையத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஷாலினி பிரியா மற்றும் டாக்டர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தளவாபாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் வேதியியல் துறை தலைவர் சாந்தி வரவேற்றார். பேராசிரியர்கள் செவ்வந்தி, கவிபிரியா, முதுகலை முதலாம் ஆண்டு மற்றும் இளங்கலை 3-ம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • 15 பேருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான அடையாள தேர்வு அட்டை வழங்கப்பட்டது.
    • ஒருவர் மட்டும் உடனடி அறுவைச் சிகிச்சை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ஒன்றியம் ஜி.தும்மலப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் தமிழக அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா நடராஜன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.

    துணைத் தலைவர் சங்கரீஸ்வரி கவியரசு முன்னிலை வகித்தார். திண்டுக்கல் டாக்டர் கவுதம் தலைமையில் சிகிச்சை முகாம் நடைபெற்றது. 60 பேருக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 15 பேருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான அடையாள தேர்வு அட்டை வழங்கப்பட்டது. ஒருவர் மட்டும் உடனடி அறுவைச் சிகிச்சை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

    இம்முகாமிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரியா நடராஜன் தலைமையில், துணைத் தலைவர், மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்கள் செய்திருந்தனர். ஊராட்சி மன்ற செயலாளர் சோலைமலை நன்றி கூறினார்.

    • மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பல் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ பரிசோதனை முகாம் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது.
    • முகாமில் தேனி, அரண்மனைப்புதூர் மற்றும் சுற்றி உள்ள பகுதியிலிருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள அரண்மனைப்புதூர் ஆற்றுப்பாலம் அருகே செயல்பட்டு வரும் எம்.எம். மல்டி ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்திரி மற்றும் எம்.எம். பல் ஆஸ்பத்திரி சார்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இலவச பல் பரிசோதனை மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ பரிசோதனை முகாம் ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது.

    பல் எடுத்தல், பல் கட்டுதல், பல் பாதுகாப்பு, பல் தொடர்பான இதர பிரச்சினைகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறப்பு பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில் பல் முக சீரமைப்பு டாக்டர் பாஸ்கரன், பொது பல் மருத்துவர் டாக்டர் ஹேமலதா ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர்.

    முகாமில் தேனி, அரண்மனைப்புதூர் மற்றும் சுற்றி உள்ள பகுதியிலிருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

    • நத்தம் ராம்சன்ஸ் பள்ளியில் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பாக இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம்
    • இதில் கண்புரை, கண் எரிச்சல், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு லென்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

    நத்தம்:

    நத்தம் ராம்சன்ஸ் பள்ளியில் மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரி மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பாக இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு பள்ளித் தாளாளர் ராமசாமி தலைமை தாங்கினார்.

    ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார்.இதில் கண்புரை, கண் எரிச்சல், பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு லென்ஸ்கள் இலவசமாக வழங்கப்பட்டது.முகாமில் டாக்டர் சுரேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    • நத்தம் அருகே சிறுகுடியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • பொது மக்களுக்கு சர்க்கரை, உப்பு, இ.சி.ஜி.உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.

    நத்தம்:

    நத்தம் அருகே சிறுகுடியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாவாணி வீரராகவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.

    முகாமில் திண்டுக்கல் எம்.எம். சிறுநீரக சர்க்கரை நோய் சிகிச்சை மைய மருத்துவர்கள் பாலமுருகன், அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சர்க்கரை, உப்பு, இ.சி.ஜி.உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    இதைப்போலவே நத்தம் வெள்ளக்குட்டு பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. இதில் தொகுதி தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு தடுப்பூசி பணியானது நாளை தொடங்கி 30 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படவுள்ளது.
    • கால்நடை மருந்தகங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில் தடுப்பூசியினை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    ஆட்டுக்கொல்லி நோய் ஆடு வளர்ப்போருக்கு அதிக பொருளாதார இழப்பினை ஏற்படுத்தும் ஒரு கொடிய நோயாகும். இந்நோய் மோர்பில்லி வைரஸ் என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகளுக்கு அதிக காய்ச்சல், சோர்வு, தீனி உட்கொள்ளாத தன்மை, மூக்கிலிருந்து சளி வடிந்து உறைந்து இருத்தல், கண்களில் பூளை தள்ளுதல், வாயின் உட்புறங்கள் ஈறுகள் மற்றும் நாக்கில் புண் ஏற்பட்டு அதிக உமிழ்நீர் சுரத்தல். கழிச்சல், இருமல் ஆகியவை ஏற்படும்.

    இந்நோய் பரவாமல் தடுப்பதற்கு பாதிக்கப்பட்ட ஆடுகளை உடன் அருகில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். ஆட்டுக்கொட்டில்களையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆட்டுக்கொல்லி நோய் வராமல் தடுப்பதற்கு ஆண்டுக்கு 1முறை குறிப்பாக 4 மாத வயத்திற்கு மேற்பட்ட ஆட்டுக்குட்டி களுக்கு ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி கண்டிப்பாக செலுத்த வேண்டும்.

    ஆட்டுக்கொல்லி நோய் பாதிப்பினை ஒழிக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் திண்டுக்கல் உட்பட 12 மாவட்டங்களில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு தடுப்பூசி பணியானது நாளை தொடங்கி 30 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படவுள்ளது.

    எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடு வளர்க்கும் விவசாயிகள் 4 மாதத்திற்குமேல் வயதுடைய ஆட்டுக்குட்டிகளுக்கு அருகில் உள்ள கால்நடை மருந்தகங்கள் மூலமாக நடைபெறும் முகாம்களில் தடுப்பூசியினை இலவசமாக செலுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
    • சிகிச்சைக்கு வந்திருந்தவர்களுக்கு சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் சார்பில் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சிவகாமி எஸ்டேட் நிறுவனம், கோவை குமரன் மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    அப்போது கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, எஸ்.கைகாட்டி, சோலூர்மட்டம், ஓம்நகர், நெடுகுளா, சுள்ளிகூடு, கஸ்தூரிபாய்நகர், சுண்டட்டி, கோடநாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில்குழந்தைகள் , பெண்கள், முதியவர்கள் உள்பட 900-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    மேலும் சிகிச்சைக்கு வந்திருந்தவர்களுக்கு சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் சார்பில் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.

    • கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு முகாமை தொட ங்கி வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை அடுத்து உள்ள முகாசிபிடாரியூரில் டாக்டர் கலைஞர் நூற்றா ண்டு விழாவினை முன்னி ட்டு ஈரோடு மாவட்ட கைத்தறித் துறையின் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    இதன் தொடக்க விழா விற்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணிஷ் மற்றும் அ.கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு முகாமை தொட ங்கி வைத்தார்.

    தொடர்ந்து அமைச்சர் சென்னிமலை சென்கோப்டெக்ஸ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கைத்தறி நெசவாளர்களின் குறை களை கேட்டறிந்து சங்க வளாகத்தில் மரக் கன்று களை நட்டு வைத்தார்.

    மேலும் கைத்தறித்துறை யின் சார்பில் சென்னிமலை தொழிலியல், காளிக்காவலசு தொழிலியல்,சென்னிமலை இந்திரா, மைலாடி மற்றும் சுப்பிரமணியசாமி ஆகிய 5 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.63 லட்சம் மதிப்பீட்டிலான தொழில் நுட்ப தறி உபகர ணங்களையும், 5 நெசவா ளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ், 13 நெசவாளர்களுக்கு தலா 50 ஆயிரம் வீதம் கடனுதவி வழங்கினார்.

    முன்னதாக சாமிநாதன் வேளாண்மை உழவர் நலன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் துறைகளின் சார்பில் சென்னிமலை அருகே வெப்பிலி துணை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமை க்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இதில் சென்னிமலை பேரூராட்சித் தலைவர் ஸ்ரீ தேவி அசோக், கைத்தறித்துறை உதவி இயக்குநர் பெ.சரவணன், தலை மை பொது குழு உறுப்பி னரும், முன்னாள் கோ-ஆப்டெக்ஸ் இயக்குனருமான சா.மெய்யப்பன், முகாசி பிடாரியூர் ஊராட்சி துணை தலைவர் சதீஸ் என்கிற சுப்பிரமணியம்,

    கைத்தறி கூட்டுறவு சங்க மேலா ளர்கள் இந்திரா டெக்ஸ் சுகுமார் ரவி, காளிக்கோப் டெக்ஸ் கே.என்., சுப்பிர மணியம், சென்கோப்டெக்ஸ் சி.சுப்பிரமணியம், சென்டெ க்ஸ் பாஸ்கர், மயில் டெக்ஸ் ரகுபதி, சுவாமி டெக்ஸ் குழந்தைவேலு, கொங்கு டெக்ஸ் ராஜா,

    அண்ணா டெக்ஸ் ரமேஷ், சென்குமார் டெக்ஸ் துரைசாமி, பி.கே., புதூர் டெக்ஸ் மூர்த்தி, மெட்றோ டெக்ஸ் வெள்ளி யங்கிரி, சிரகிரி டெக்ஸ் சுரேஷ், அம்மா டெக்ஸ் கிருஷ்ண மூர்த்தி, சேரன் டெக்ஸ் அழகு என்கிற சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட கைத்தறி துறை கைத்தறி அலுவலர் ஜானகி, கைத்தறி ஆய்வாளர்கள் யுவராஜ், பிரபாகர் மற்றும் கைத்தறித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    ×