என் மலர்
உள்ளூர் செய்திகள்

Ranipettai News Free medical camp at Sollinger
- 200-க்கும் மேற்பட்டோர் மேல்சிகிச்சைக்கு கோவைக்கு அனுப்பி வைப்பு
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு சோளிங்கர் நகர திமுக, சோளிங்கர் லயன்ஸ் சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், ஆயுக்தா மருத்துவமனை மோகன் அறக்கட்டளை இணைந்து கண் சிகிச்சை முகாம், உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முகாம், உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சோளிங்கர் நகர திமுக செயலாளரும், சோளிங்கர் லயன்ஸ் சங்க தலைவருமான கோபி தலைமை தாங்கினார். லயன்ஸ் சங்க செயலாளர் திருமால் முன்னிலை வகித்தார். சங்க பொருளாளர் சலீம் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமிற்கு மாநில சுற்றுச்சூழல் துணைச் செயலாளர் வினோத் காந்தி கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாம் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார்.
உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டு கண் அறுவை சிகிச்சைக்காக 200க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சைக்காக கோவை சங்கரா மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம் தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகராட்சி துணை தலைவர் பழனி, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகராட்சி உறுப்பினர்கள் அன்பரசு, லோகேஸ்வரி சரத்பாபு, மாவட்ட பிரதிநிதி சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






