என் மலர்
நீங்கள் தேடியது "இலவச மருத்துவ முகாம்"
- சிறப்பு மருத்துவ முகாம் நாளை மற்றும் 19, 26 மற்றும் அடுத்த மாதம் 3-ந் தேதி ஆகிய 4 சனிக்கிழமைகளில் நடக்கிறது.
- முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம், கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நாளை (சனிக்கிழமை) மற்றும் 19, 26 மற்றும் அடுத்த மாதம் 3-ந் தேதி ஆகிய 4 சனிக்கிழமைகளில் நடக்கிறது. இந்த மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொதுமருத்துவம், இருதய நோய் சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம், கண் சிகிச்சை, புற்றுநோய், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, குழந்தைகள் மருத்துவம், தோல்நோய் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், குடும்பநல சிகிச்சை மற்றும் ஆலோசனை, பால்வினை நோய் பரிசோதனை, சித்தா மருத்துவ சிகிச்சை, உயர் பரிந்துரை சிகிச்சை மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம், கொரோனா தடுப்பூசி முதல், 2-ம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) போடப்படுகிறது.
இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 3-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.49 பகுதிக்கு நாளை (சனிக்கிழமை) மணியக்காரம்பாளையம் ரோட்டில் உள்ள தங்கவேல் திருமண மண்டபத்திலும், 2-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.19 பகுதிக்கு 19-ந் தேதி திருநீலகண்டபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 1-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.24 பகுதிக்கு 26-ந்தேதி ஈ.பி.காலனி நடுநிலைப்பள்ளியிலும், 4-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.40 பகுதிக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. எனவே பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
- இன்று முதல் நவ.26 வரை நடக்கிறது
- சிகிச்சை சம்பந்தமான விளக்கங்கள் இலவசமாக வழங்கப்படும்.
நாகர்கோவில்:
பொன் ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூளை நரம்பியல் மற்றும் எலும்பியல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ முகாம் இன்று (23-ந்தேதி) முதல் 26-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த முகாமில் மூளை நரம் பியல் பிரிவில் முதுகு வலி, தலைவலி, வலிப்பு நோய், தலைக்காயம், மூளைக் கட்டி முதுகு தண்டுவட கட்டிகள் ஜவ்வு விலகுதல், நரம்பு பலவீனம், பிட்யூட்றி கட்டிகள் கழுத்து வலி எலும்பியல் சிகிச்சையில் மூட்டு மற்றும் எலும்பு முறிவு, முட்டு தேய்வு, மூட்டு ஜவ்வு, மூட்டு வில கல், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இடுப்பு கைகால் மூட்டிக்கான சிகிச்சைகள், தண்டுவட தேய்வு, தண்டு வட முறிவு, தண்டுவட ஜவ் வுக்கான சிகிச்சை, நுண் துளை அறுவை சிகிச்சை, சிறுவர்களுக்கான பாதம் கோணலுக்கான சிகிச்சை, கை, கால் நரம்பு அழுத்தல் மற்றும் தசைநார் சிகிச்சை சம்பந்தமான விளக்கங்கள் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் சிறப்பம்சமாக நரம்பு பலவீனம் கண்டறி தல், எலும்பு கனிம அடர்த்தி சோதனை (BMD), ஆகியவை இலவசமாக செய்பற்றுஎன்று பொன் ஜெஸ்லி நிறுவனங்களின் தலைவர் பொன் ராபர்ட் சிங் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜார்ஜ் ஆகியோர் தெரி வித்தனர்.
- மருத்துவ முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமை தாங்கினார்.
- பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
கடையம்:
கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாம்பட்டி ஊராட்சி நெல்லையப்பபுரத்தில் இலவச மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி தலைமையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் சித்ரா பாபு முன்னிலையில் நடைபெற்றது.
முகாமில் தென்காசி மாவட்ட துணை இயக்குனர் டாக்டர் முரளி சங்கர் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். மேலும் நெல்லையப்பபுரம் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் பழனிகுமார், வட்டார மேற்பார்வையாளர் ஆனந்தன், சுகாதார ஆய்வாளர் சண்முகம், நடமாடும் மருத்துவக் குழு மருத்துவர் முகமது முபாரக் மற்றும் செவிலியர்கள், பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொண்டனர். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 200-க்கும் மேற்பட்டோர் மேல்சிகிச்சைக்கு கோவைக்கு அனுப்பி வைப்பு
- ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்தநாள் முன்னிட்டு சோளிங்கர் நகர திமுக, சோளிங்கர் லயன்ஸ் சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவ மையம், ஆயுக்தா மருத்துவமனை மோகன் அறக்கட்டளை இணைந்து கண் சிகிச்சை முகாம், உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முகாம், உடல் உறுப்பு தானம் பற்றிய சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு சோளிங்கர் நகர திமுக செயலாளரும், சோளிங்கர் லயன்ஸ் சங்க தலைவருமான கோபி தலைமை தாங்கினார். லயன்ஸ் சங்க செயலாளர் திருமால் முன்னிலை வகித்தார். சங்க பொருளாளர் சலீம் அனைவரையும் வரவேற்றார். இந்த முகாமிற்கு மாநில சுற்றுச்சூழல் துணைச் செயலாளர் வினோத் காந்தி கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாம் உடல் உறுப்பு அறுவை சிகிச்சை முகாமை துவக்கி வைத்தார்.
உடல் உறுப்பு தானம் பற்றி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார். சோளிங்கர் மற்றும் சுற்றுப்புற கிராமத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டு கண் அறுவை சிகிச்சைக்காக 200க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சைக்காக கோவை சங்கரா மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட துணைச் செயலாளர் சிவானந்தம் தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன், நகராட்சி துணை தலைவர் பழனி, பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், நகராட்சி உறுப்பினர்கள் அன்பரசு, லோகேஸ்வரி சரத்பாபு, மாவட்ட பிரதிநிதி சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அம்பேத்கர் பிறந்த நாள் விழாவையொட்டி நடந்தது
- 300-க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் அம்பேத்கர் 132 வது பிறந்தநாள் விழா, அன்னை மருத்துவமனை மற்றும் அன்னை பல் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு அம்பேத்கர் மன்ற செயல் தலைவர் அருள்மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் மோகன், மன்ற தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ் கலந்து கொண்டு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
டாக்டர் ஸ்வப்னா மேற்பார்வையில் பல், மற்றும் கண் பரிசோதனை ரத்த கொதிப்பு பரிசோதனை, சர்க்கரை அளவு, ரத்த வகை கண்டறிதல், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், இருதயம் மற்றும் எலும்பு நோய்க்கான இலவச பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
ஓய்வு பெற்ற போலீஸ் டோமினிக் சேவியோ, டவுன் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, கிருஷ்ணா கல்வி குழும செயலாளர் ரவிக்குமார், அரசு மருத்துவர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இலவச மருத்துவ முகாமில் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்கள் பயனடைந்தனர்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் ரவி நன்றி கூறினார்.
- பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகளை வழங்கினர்.
- யோகாசனம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கேத்தன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கெட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அனுமந்தபுரம் அரசு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனுராதா முகாமை தொடங்கி வைத்து பேசினார். சிறப்பு மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய், இரத்த வகை கண்டறிதல் மற்றும் கண், பல் ஆகியவற்றிற்கு சிறப்பு பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகளை வழங்கினர்.
மேலும் இயற்கை முறையிலான மருத்துவம் யோகாசனம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் நிலவேம்புகசாயம் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் பஞ்சாயத்து தலைவர் செல்வராணி, கால்நடை டாக்டர் ஜெயபால், வேளாண்மை அலுவலர் சதீஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
- தொண்டை, கண் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை அளித்தனர்.
- 27 டாக்டர்கள், 250 பணியாளர்கள், முகாமில் 2100-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம், அரூர் அரசு கலை கல்லூரியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் சாந்தி தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் இந்திராணி தனபால் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.
இதில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, கர்ப்பிணி மருத்துவர், பல், தொண்டை, கண் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனை அளித்தனர்.
27 டாக்டர்கள், 250 பணியாளர்கள், முகாமில் 2100-த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதில் கோட்டாசியர் வில்சன் ராஜசேகரன், பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால், மாநில ஆதி திராவிட நலக்குழு துணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணகுமார், வட்டாட்சியர் பெருமாள், தலைமை மருத்துவர் ராஜேஷ்கண்ணா, நகர செயலாளர் முல்லைரவி, மருத்துவர்கள் தொல்காப்பியன், அரசு, அருண், மாதேஷ்வரி, கலையரசன், சுகாதார ஆய்வாளர்கள் இளவரசன், சுரபி, சேகர், கார்த்திகேயன், ஜெயபிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- அரசு மருத்துவமனையில் உள்ள ஆயுஷ் நல்வாழ்வு மையத்தில் நடைபெற்றது.
- முகாமில் விழிப்புணர்வு ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
மாமல்லபுரம்:
தேசிய மருத்துவர்கள் தினமான இன்று மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் உள்ள ஆயுஷ் நல்வாழ்வு மையத்தில், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. துப்புரவு பணியாளர்கள், பாசி, மணி விற்கும் நரிக்குறவர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு மருத்துவர் வாணதி நாச்சியார் முன்னிலையில், ஆயுஷ் மருத்துவம் குறித்து மூச்சு பயிற்சி, யோகா, மசாஜ், ஆயில் குளியல், தியானம், சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஆலோசனையும் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், சக ஊழியர்கள் உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
- நெசவாளர்க ளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- இன்றைய விழாவில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு மருத்துவ அட்டைகள் வழங்கப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கைத்தறித்துறை சார்பில் 9வது தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் வி.ஐ.பி. மஹாலில் அமைப்பட்டிருந்த கைத்தறி கண்காட்சியை மாவட்ட கலெக்டர் பூங்கொடி இன்று திறந்து வைத்து, நெசவாளர்க ளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு ரூ.8.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் கலெ க்டர் தெரிவித்ததாவது:-
கைத்தறி நெசவாள ர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், அரசு சார்பில் தொழில் கடனுதவிகள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 2015-ம் ஆண்டு முதல் சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7-ம் தேதியன்று தேசிய கைத்தறி தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், கைத்தறித்துறை சார்பில் இந்த ஆண்டு 9வது தேசிய கைத்தறி தின விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், கைத்தறி கண்காட்சி நடத்தப்படுகிறது. இக்கண்காட்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும், மென்பட்டு சேலைகள், காட்டன் சேலைகள், கோரா காட்டன் சேலைகள், வாழை நார் பட்டு சேலைகள், பம்பர் காட்டன் சேலைகள் உள்ளிட்ட கைத்தறி ஜவுளி ரகங்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்த ப்பட்டு ள்ளன.
தேசிய கைத்தறி தின விழாவை முன்னிட்டு, கைத்தறி நெசவாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்காக திண்டுக்கல் வி.ஐ.பி மஹாலில் சிறப்பு பொது மருத்துவ முகாம் மற்றும் நாகல்நகர் பகுதியில் உள்ள செந்தா மஹாலில் இலவச கண் பரிசோதனை முகாம் ஆகியவை நடத்தப்படுகிறது.
இன்றைய விழாவில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தரப் பணியாளர்களுக்கு மருத்துவ அட்டைகள், கைத்தறி ஆதரவுத் திட்டத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்க 5 உறுப்பினர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம் மதிப்பிலான தறி உபகரணங்கள், முத்ரா கடன் திட்டத்தின் கீழ் நெசவாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்கள் 13 நபர்களுக்கு ரூ.8.60 லட்சம் மதிப்பிலான கடன் தொகைகள் உள்பட மொத்தம் ரூ.8.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை நெசவாளர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
- இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு முகாமை தொட ங்கி வைத்தார்.
சென்னிமலை:
சென்னிமலை அடுத்து உள்ள முகாசிபிடாரியூரில் டாக்டர் கலைஞர் நூற்றா ண்டு விழாவினை முன்னி ட்டு ஈரோடு மாவட்ட கைத்தறித் துறையின் சார்பில் கைத்தறி நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இதன் தொடக்க விழா விற்கு கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மணிஷ் மற்றும் அ.கணேசமூர்த்தி எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு முகாமை தொட ங்கி வைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் சென்னிமலை சென்கோப்டெக்ஸ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு கைத்தறி நெசவாளர்களின் குறை களை கேட்டறிந்து சங்க வளாகத்தில் மரக் கன்று களை நட்டு வைத்தார்.
மேலும் கைத்தறித்துறை யின் சார்பில் சென்னிமலை தொழிலியல், காளிக்காவலசு தொழிலியல்,சென்னிமலை இந்திரா, மைலாடி மற்றும் சுப்பிரமணியசாமி ஆகிய 5 கூட்டுறவு சங்கங்களை சார்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.63 லட்சம் மதிப்பீட்டிலான தொழில் நுட்ப தறி உபகர ணங்களையும், 5 நெசவா ளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ், 13 நெசவாளர்களுக்கு தலா 50 ஆயிரம் வீதம் கடனுதவி வழங்கினார்.
முன்னதாக சாமிநாதன் வேளாண்மை உழவர் நலன் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் துறைகளின் சார்பில் சென்னிமலை அருகே வெப்பிலி துணை விற்பனை கூடத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் குளிர்பதன கிடங்கு அமை க்கும் பணியை தொடங்கி வைத்தார்.
இதில் சென்னிமலை பேரூராட்சித் தலைவர் ஸ்ரீ தேவி அசோக், கைத்தறித்துறை உதவி இயக்குநர் பெ.சரவணன், தலை மை பொது குழு உறுப்பி னரும், முன்னாள் கோ-ஆப்டெக்ஸ் இயக்குனருமான சா.மெய்யப்பன், முகாசி பிடாரியூர் ஊராட்சி துணை தலைவர் சதீஸ் என்கிற சுப்பிரமணியம்,
கைத்தறி கூட்டுறவு சங்க மேலா ளர்கள் இந்திரா டெக்ஸ் சுகுமார் ரவி, காளிக்கோப் டெக்ஸ் கே.என்., சுப்பிர மணியம், சென்கோப்டெக்ஸ் சி.சுப்பிரமணியம், சென்டெ க்ஸ் பாஸ்கர், மயில் டெக்ஸ் ரகுபதி, சுவாமி டெக்ஸ் குழந்தைவேலு, கொங்கு டெக்ஸ் ராஜா,
அண்ணா டெக்ஸ் ரமேஷ், சென்குமார் டெக்ஸ் துரைசாமி, பி.கே., புதூர் டெக்ஸ் மூர்த்தி, மெட்றோ டெக்ஸ் வெள்ளி யங்கிரி, சிரகிரி டெக்ஸ் சுரேஷ், அம்மா டெக்ஸ் கிருஷ்ண மூர்த்தி, சேரன் டெக்ஸ் அழகு என்கிற சண்முகசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்ட கைத்தறி துறை கைத்தறி அலுவலர் ஜானகி, கைத்தறி ஆய்வாளர்கள் யுவராஜ், பிரபாகர் மற்றும் கைத்தறித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.
- அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
- சிகிச்சைக்கு வந்திருந்தவர்களுக்கு சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் சார்பில் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சிவகாமி எஸ்டேட் நிறுவனம், கோவை குமரன் மருத்துவமனை ஆகியவை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
அப்போது கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, எஸ்.கைகாட்டி, சோலூர்மட்டம், ஓம்நகர், நெடுகுளா, சுள்ளிகூடு, கஸ்தூரிபாய்நகர், சுண்டட்டி, கோடநாடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இதில்குழந்தைகள் , பெண்கள், முதியவர்கள் உள்பட 900-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் சிகிச்சைக்கு வந்திருந்தவர்களுக்கு சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் சார்பில் இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
- நத்தம் அருகே சிறுகுடியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
- பொது மக்களுக்கு சர்க்கரை, உப்பு, இ.சி.ஜி.உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர்.
நத்தம்:
நத்தம் அருகே சிறுகுடியில் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாவாணி வீரராகவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.
முகாமில் திண்டுக்கல் எம்.எம். சிறுநீரக சர்க்கரை நோய் சிகிச்சை மைய மருத்துவர்கள் பாலமுருகன், அர்ச்சனா ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சர்க்கரை, உப்பு, இ.சி.ஜி.உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
இதைப்போலவே நத்தம் வெள்ளக்குட்டு பகுதியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சித்த மருத்துவ முகாம் நடந்தது. இதில் தொகுதி தலைவர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






