என் மலர்
உள்ளூர் செய்திகள்

முகாமில் மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்த காட்சி.
சுகாதாரத்துறை சார்பில் இலவச மருத்துவ முகாம்
- பொதுமக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகளை வழங்கினர்.
- யோகாசனம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கேத்தன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட கெட்டூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை அனுமந்தபுரம் அரசு மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அனுராதா முகாமை தொடங்கி வைத்து பேசினார். சிறப்பு மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய், இரத்த வகை கண்டறிதல் மற்றும் கண், பல் ஆகியவற்றிற்கு சிறப்பு பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகளை வழங்கினர்.
மேலும் இயற்கை முறையிலான மருத்துவம் யோகாசனம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் நிலவேம்புகசாயம் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் மற்றும் தொழுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
முகாமில் பஞ்சாயத்து தலைவர் செல்வராணி, கால்நடை டாக்டர் ஜெயபால், வேளாண்மை அலுவலர் சதீஷ்பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேலும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.






