என் மலர்
நீங்கள் தேடியது "கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்"
- சிறப்பு மருத்துவ முகாம் நாளை மற்றும் 19, 26 மற்றும் அடுத்த மாதம் 3-ந் தேதி ஆகிய 4 சனிக்கிழமைகளில் நடக்கிறது.
- முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம், கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நாளை (சனிக்கிழமை) மற்றும் 19, 26 மற்றும் அடுத்த மாதம் 3-ந் தேதி ஆகிய 4 சனிக்கிழமைகளில் நடக்கிறது. இந்த மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொதுமருத்துவம், இருதய நோய் சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், பல் மருத்துவம், கண் சிகிச்சை, புற்றுநோய், எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம், ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை, குழந்தைகள் மருத்துவம், தோல்நோய் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், குடும்பநல சிகிச்சை மற்றும் ஆலோசனை, பால்வினை நோய் பரிசோதனை, சித்தா மருத்துவ சிகிச்சை, உயர் பரிந்துரை சிகிச்சை மற்றும் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம், கொரோனா தடுப்பூசி முதல், 2-ம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தடுப்பூசி (பூஸ்டர்) போடப்படுகிறது.
இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 3-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.49 பகுதிக்கு நாளை (சனிக்கிழமை) மணியக்காரம்பாளையம் ரோட்டில் உள்ள தங்கவேல் திருமண மண்டபத்திலும், 2-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.19 பகுதிக்கு 19-ந் தேதி திருநீலகண்டபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், 1-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.24 பகுதிக்கு 26-ந்தேதி ஈ.பி.காலனி நடுநிலைப்பள்ளியிலும், 4-வது மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்.40 பகுதிக்கு அடுத்த மாதம் 3-ந் தேதி இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் நடக்கிறது. எனவே பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.






