பாளையில் இலவச மருத்துவ முகாம்

நெஞ்சக நோய் டாக்டர் பாலா கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார். முகாமில் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டது.
மருத்துவ முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.
மருத்துவ முகாம் நடைபெற்றபோது எடுத்த படம்.
Published on

நெல்லை:

பாளை-சீவலப்பேரி ரோட்டில் அமைந்துள்ள ஷிம்ஸ் டிரஸ்ட் மருத்துவமனையில் ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் நெஞ்சக நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமில் ஷிபா மருத்துவமனையின் நெஞ்சக நோய் டாக்டர் பாலா கலந்து கொண்டு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை மற்றும் நெஞ்சக நோய் கண்டறியும் பி.எப்.டி. பரிசோதனை கள் இலவசமாக செய்யப்பட்டது. முன்னதாக நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஹாஜி முகம்மது ஷாபி முகாமினை தொடங்கி வைத்தார். முகாமில் கே.டி.சி. நகர், சாந்திநகர், திம்மராஜபுரம், கீழப்பாட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com