search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DISABLED STUDENTS"

    • மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
    • தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

    இது பள்ளி இறுதித்தேர்வுக்கான காலகட்டம். 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிவிட்ட நிலையில், 10 வகுப்பு தேர்வுகள் தொடங்க உள்ளன. சாதாரண மாணவர்களைப் போல மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எனவே அவர்களுக்கு தேர்வு எழுதுவதில் சில முன்னுரிமைகளை அரசு வழங்குகிறது.

     மாற்றுத்திறனாளி மாணவர்களை 18 வகையாக வகைப்படுத்தி உள்ளனர். மெல்ல கற்போர், செவித்திறன் குறைபாடு உடையோர், பார்வை திறன் குறைபாடு உடையோர், ஆட்டிசம் குறைபாடு உள்ளோர், போலியோவால் பாதிக்கப்பட்டோர், வாய் பேச முடியாதோர் போன்றவர்களுக்கு அரசு பொதுத்தேர்வு எழுதுவதிலும், செய்முறைத்தேர்வு எழுதுவதிலும், சில சலுகைகளையும், விலக்குகளையும் அளிக்கிறது. அவை...

     1. தேர்வு நேரத்தில் கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்குவது.

    2. சொல்லுவதை எழுதுவதற்கு தனியாக ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்தல்.

    3. மொழித்தாள்களான ஆங்கிலம் அல்லது தமிழ் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மாணவனின் விருப்பத்தின் பேரில் விலக்கு அளித்தல்.

    4. செய்முறைத் தேர்வுகளுக்கு விலக்கு கோருதல்.

    5. தேர்வின்போது உபயோகப்படுத்தப்படும் கால்குலேட்டர், அச்சடிக்கப்பட்ட அட்டவணைகள் போன்றவற்றுக்கு அனுமதி அளித்தல்.

     6. தேர்வு எழுதுவதற்கு உதவியாளராக (ஸ்கிரைப்) தன்னுடைய தாய் அல்லது தந்தை அல்லது தனக்கு தனியாக கற்பித்த ஆசிரியரை நியமித்துக்கொள்ள உரிமை.

    7. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு அவர்கள் எளிதில், தேர்வு எழுதும் அறையை அடைய சாய்தள வசதி.

    8. மாற்றுத்திறன் மாணவர்களுக்கு தரைத்தளத்திலேயே அவர்களின் பதிவெண் வருமாறு அமைத்துக் கொடுத்தல்.

     இதுபோன்ற பல சலுகைகளை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசு வழங்கி வருகிறது. இவற்றை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட மாற்றுத் திறன் அலுவலகத்தை அணுகி மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெற்று இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவக் குழு பரிந்துரைத்த மருத்துவச் சான்றும் பெற்றிருக்க வேண்டும். இச்சான்றுகளை வைத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்டக் கல்வி அதிகாரிக்கு எழுதி அனுப்பினால் அதற்கான அனுமதி பெற்று தரப்படும்.

    பொதுத்தேர்வு தொடங்குவதற்கு முன்போ, தேர்வு நடக்கும்பொழுதோ விபத்து நடந்து எழுத முடியாத சூழல் ஏற்பட்டாலும் அந்த மாணவர், மருத்துவரின் சான்றிதழின் பேரில் தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பித்து, தான் சொல்லுவதை எழுதுகின்ற ஆசிரியரை (ஸ்கிரைப்) நியமித்து தேர்வு எழுதலாம்.

    • மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வையாளர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் கே.என்.பி.புரம் நகராட்சி பள்ளியில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை மற்றும் மாவட்ட ஒருங்கிணை ப்பாளர்பாலசுந்தரி ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கிவைத்தனர்.

    திருப்பூர் வடக்கு,தெற்கு, பொங்கலூர், பல்லடம், அவினாசி, காங்கேயம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள மாற்றுதிறன் மாணவ ர்களுக்கு உபகர ணங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேற்பார்வை யாளர்கள், ஒருங்கிணை ப்பாளர்கள் மற்றும் சிறப்பு பயிற்று னர்கள் செய்திருந்தனர்.  

    • பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
    • முகாமில் புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    விளாத்திகுளம்:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் மருத்துவச் சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் முகாமில் வழங்கப்பட்டது.

    முகாமை மாவட்ட திட்ட அலுவலர் பெர்சியால்ஞானமணி தொடங்கி வைத்தார். மாவட்ட மாற்றுத்திறன் நல அலுவலர் சிவசங்கரன் முன்னிலை வகித்தார். இம்முகாமில் புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    முகாமில் வட்டார கல்வி அலுவலர் முருகேஸ்வரி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசெல்வி, கிருஷ்ணவேணி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சித்ரா, ஆசிரியர் பயிற்றுநர்கள் ராமர், பூவையா, ஜெயசுதா, மிதிலை குமாரி, சிறப்பு ஆசிரியர் பயிற்சிநர்கள் ஆரோக்கியராஜ், ஞானராஜ், அருள்மேரிசுதா, இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மருத்துவர்கள் சரவணவித்யா, பாலசுப்பிரமணியன், நிரஞ்சனாதேவி, பாண்டி பிரகாஷ், சிவப்பிரகாஷ் ஆகியோர் சிகிச்சை வழங்கினர்.

    • பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ- மாணவி களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல் போட்டிகள் இன்று நடைபெற்றது.

    நெல்லை:

    பாளை அண்ணா விளையாட்டு அரங்கில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ- மாணவி களுக்கான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, உதவி கலெக்டர் பயிற்சி கோகுல் முன்னிலையில் இன்று தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவினை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளியில் பயிலும் 210 மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளும் விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த விளையாட்டுப் போட்டி களில் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான நீளம் தாண்டுதல், 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எரிதல் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் மாணவ- மாணவிகளுக்கு குறிப்பிட்ட பொருட்களை சேகரித்தல் போன்ற போட்டிகள் இன்று நடைபெற்றது.

    இப்போட்டியில் முதல் மற்றும் 2-ம் இடம்பிடிக்கும் மாணவ- மாணவிகள் வருகிற 1-ந் தேதி சென்னையில் நடை பெறவுள்ள போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

    சென்னையில் நடைபெறும் போட்டி களில் வெற்றி பெறுபவ ர்களுக்கு 3-ந் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாநில அளவில் சென்னையில் அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு நல அலுவலர் கிருஷ்ணசக்கரவர்த்தி, முடநீக்கியல் வல்லுனர் பிரபாகரன் மற்றும் சிறப்பு பள்ளி தாளாளர்கள், தலைமை ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ-மாணவிகள் ஆகி யோர் கலந்து கொண்டனர்.

    • அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்
    • முதுகலை பட்டபடிப்பு மாணவமாணவிகளுக்கு ரூ.6,000மும் வாசிப்பாளர் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவிகளுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ரூ.1,000-மும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.3,000மும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூ.4,000மும், தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4,000மும் இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ.6,000மும், முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7,000மும் வழங்கப்படுகிறது.

    மேலும் பார்வையற்ற மாணவ மாணவிகளுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3,000மும் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவ மாணவிகளுக்கு ரூ.5,000மும், முதுகலை பட்டபடிப்பு மாணவமாணவிகளுக்கு ரூ.6,000மும் வாசிப்பாளர் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

    கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவிகள் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ}மாணவிகள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    மாணவ மாணவிகள் பிறதுறைகளில் கல்வி உதவித்தொகை பெற வில்லை என தலைமையாசிரியர், கல்லூரி முதலமைச்சர் சான்றிதழ், மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கு புத்தக நகல், முகம் மட்டும் தெரியும்படியான தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் உரிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 17-ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

    ×