மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்முதுகலை பட்டபடிப்பு மாணவமாணவிகளுக்கு ரூ.6,000மும் வாசிப்பாளர் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது
மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
Published on

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டிற்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவிகளுக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கிட தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஒரு ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக 1 முதல் 5ஆம் வகுப்பு வரை ரூ.1,000-மும், 6 முதல் 8ஆம் வகுப்பு வரை ரூ.3,000மும், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை ரூ.4,000மும், தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.4,000மும் இளங்கலை பட்ட படிப்பிற்கு ரூ.6,000மும், முதுகலை பட்ட படிப்பு மற்றும் தொழில் படிப்பிற்கு ரூ.7,000மும் வழங்கப்படுகிறது.

மேலும் பார்வையற்ற மாணவ மாணவிகளுக்கு 9 முதல் 12ஆம் வகுப்பு, தொழிற் பயிற்சி மற்றும் பட்டய படிப்பிற்கு ரூ.3,000மும் மற்றும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவ மாணவிகளுக்கு ரூ.5,000மும், முதுகலை பட்டபடிப்பு மாணவமாணவிகளுக்கு ரூ.6,000மும் வாசிப்பாளர் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

கல்வி உதவித்தொகை மற்றும் பார்வையற்ற மாணவ மாணவிகள் வாசிப்பாளர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனடைய மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றுள்ள அரசுப்பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ}மாணவிகள் முந்தைய கல்வி ஆண்டு இறுதி தேர்வில் குறைந்த பட்சமாக 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

மாணவ மாணவிகள் பிறதுறைகளில் கல்வி உதவித்தொகை பெற வில்லை என தலைமையாசிரியர், கல்லூரி முதலமைச்சர் சான்றிதழ், மாணவ, மாணவிகளின் வங்கி கணக்கு புத்தக நகல், முகம் மட்டும் தெரியும்படியான தற்போதைய புகைப்படம் ஆகியவற்றுடன் உரிய விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரைத்தளத்தில் அறை எண் 17-ல் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com