search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "therapeutic"

    • சேலம் நெத்திமேடு, புத்தூர் இட்டேரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கீதா நேற்று வேலையில் இருந்த போது, கீதாவின் இடது கையில் போட்டிருந்த வளையல்கள் எந்திரத்தில் திடீரென மாட்டிக் கொண்டது.
    • இதில் கண்ணிமைக்கும் கண நேரத்தில், இயந்திரத்தோடு சேர்ந்து கையும் சுழன்றது. இதில் அவரின் மணிக்கட்டு பகுதி நசுங்கியது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் நெத்திமேடு, புத்தூர் இட்டேரி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கீதா (வயது 52). இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர் நெத்திமேடு அருகே உள்ள பருப்பு மில்லில் வேலை செய்து வருகிறார்.

    நேற்று வேலையில் இருந்த போது, கீதாவின் இடது கையில் போட்டிருந்த வளையல்கள் எந்திரத்தில் திடீரென மாட்டிக் கொண்டது. இதில் கண்ணிமைக்கும் கண நேரத்தில், இயந்திரத்தோடு சேர்ந்து கையும் சுழன்றது. இதில் அவரின் மணிக்கட்டு பகுதி நசுங்கியது.

    படுகாயமடைந்து வலியால் துடித்த அவரை உடன் பணிபுரிவோர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி கோட்டை அரிமா சங்கம் மற்றும் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பரமத்தி கோட்டை அரிமா சங்க தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் ராகா ஆயில் தமிழ்மணி வரவேற்றார். பரமத்தி அ.தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். முகாமினை குமாரபாளையம் தங்கமணி எம்.எல்.ஏ, பரமத்தி வேலூர் சேகர் எம்.எல்.ஏ, அரிமா சங்கம் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

    முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திலகவதி வெற்றிவேல், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜே.பி.ரவி, பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, பரமத்தி நகர செயலாளர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நட்றாம்பாளையம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராத விதமாக திடீரென மோதிக்கொண்டன.
    • இதையடுத்து மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. உடல் கருகிய இளம் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

    சேலம்:

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நட்றாம்பாளையம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள் எதிர்பாராத விதமாக திடீரென மோதிக்கொண்டன.

    இதில் ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.இதையடுத்து மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது .

    இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற 25 வயது மதிக்க தக்க இளம் பெண் ஒருவரின் உடலிலும் தீப்பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக சேலம் அரச ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். இந்த தீ விபத்தில் 50 சதவீதம் அவரது உடல் கருகியது.

    தொடர்ந்து அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து கொண்ட லாம்பட்டி போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×