என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Genocide"

    • தனது சொந்த குடிமக்கள் மீது குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலையைச் செய்யும் அதே நாடு இது.
    • உலகம் அதன் இரட்டைத் தரத்தை உணர்ந்திருந்தாலும், இப்போது அது தன்னை 'மனித உரிமைகளின் பாதுகாவலர்' என்று சித்தரிக்க முயற்சிக்கிறது.

    ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் "பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நேற்று விவாதம் நடைபெற்றது.

    இதில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம், காஷ்மீரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பல தசாப்தங்களாக போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

    ஆனால் இதை மறுத்து பேசிய இந்தியாவுக்கான நிரந்தர ஐநா பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

    அவர் பேசியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டிற்கு எதிராக பொய்களைப் பரப்பும் பாகிஸ்தானிடமிருந்து தவறான அறிக்கைகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

    1971 ஆம் ஆண்டு வங்கதேச போரில் ஆபரேஷன் சர்ச்லைட்டின் போது 400,000 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உத்தரவிட்ட அதே நாடு இதுதான்.

    தனது சொந்த குடிமக்கள் மீது குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலையைச் செய்யும் அதே நாடு இது.

    உலகம் அதன் இரட்டைத் தரத்தை உணர்ந்திருந்தாலும், இப்போது அது தன்னை 'மனித உரிமைகளின் பாதுகாவலர்' என்று சித்தரிக்க முயற்சிக்கிறது.

    பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவின் சாதனை எந்த விதத்திலும் குறைபாடற்ற முன்மாதிரியான ஒன்றாகும்" என்று தெரிவித்தார்.   

    • ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கை இஸ்ரேல் செய்ததாக ஆணையம் தனது 72 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    • இனக்குழுவினருக்கு வேண்டுமென்றே அழிவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.

    ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணை ஆணையம், இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டி பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

    2023 ஆம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலியப் படைகள் காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருப்பதாக அறிக்கை கூறுகிறது.

    இந்தப் போரில் இஸ்ரேல் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

    சர்வதேச சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கை இஸ்ரேல் செய்ததாக ஆணையம் தனது 72 பக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    ஒரு இனக்குழுவினரை குறிவைத்து கொல்வது, அவர்களுக்கு கடுமையான உடல் மற்றும் மன ரீதியான தீங்கு விளைவிப்பது, அந்த இனக்குழுவினருக்கு வேண்டுமென்றே அழிவுக்கான சூழ்நிலைகளை உருவாக்குவது மற்றும் பிறப்புகளைத் தடுப்பது ஆகியவை இதில் அடங்கும்.

    இஸ்ரேலிய தலைவர்களின் கருத்துகளும் இராணுவத்தின் செயல்களும் அவர்களின் இனப்படுகொலை நோக்கத்திற்கான சான்றுகள் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. வழக்கம்போல இஸ்ரேல் இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது.  

    • இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு விநியோக மையங்களில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
    • துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாக ஐநா குற்றம் சாட்டியுள்ளது.

    கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

    உணவு விநியோக மையங்களை நிர்வகிக்கும் போர்வையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவு விநியோக மையங்களில் அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.

    கடுமையான பசி காரணமாக அவை மரணப் பொறிகள் என்பதை அறிந்தும், மக்கள் கூட்டம் கூட்டமாக விநியோக மையங்களுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் மீது துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவதாகவும் ஐநா குற்றம் சாட்டியுள்ளது.

    இதனுடன் அல்-மவாசியில் உள்ள அகதிகள் முகாமில் நடந்த குண்டுவெடிப்பில் கான் யூனிஸ் 15 பேரும், காசா நகரில் அகதிகள் தங்கியிருந்த பள்ளியில் மேலும் 15 பேரும் கொல்லப்பட்டனர். காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 57,000 ஐ கடந்துள்ளது. 1,34,611 பேர் காயமடைந்தனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 60 நாள் போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததிலிருந்த சூழலில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

    • காசாவில் இஸ்ரேலின் 21 மாத தாக்குதலில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறது.
    • உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம்.

    ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் நடந்த இனப்படுகொலையிலிருந்து லாபம் ஈட்டியதற்காக உலகளாவிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடை உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலுக்கு பிரான்செஸ்கா அல்பனீஸ் அளித்த அறிக்கை, காசாவில் இஸ்ரேலின் 21 மாத தாக்குதலில் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் ஈடுபாட்டை சுட்டிக்காட்டுகிறது.

    காசாவில் முற்றிலுமாக சிதைந்த நிலையிலும், இஸ்ரேலின் இனப்படுகொலை பெருநிறுவனங்களுக்கு லாபகரமானது என்பதால் தொடர்கிறது என பிரான்செஸ்கா அறிக்கை விளக்குகிறது .

    'ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து இனப்படுகொலைப் பொருளாதாரம் வரை' என்ற தலைப்பிலான இந்த அறிக்கை, காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனப் பிரதேசங்களை அழிக்கப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் கனரக இயந்திரங்களை வழங்குவதில் சர்வதேச நிறுவன பங்காளிகளின் ஈடுபாட்டையும், பொருட்களை விற்பனை செய்யும் விவசாய நிறுவனங்களையும், போருக்கு நிதியளிக்கும் முதலீட்டு நிறுவனங்களையும் அறிக்கை குறிப்பிடுகிறது.

    அரசியல் தலைவர்களும் அரசாங்கங்களும் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக்கழிக்கும் அதே வேளையில், ஏராளமான பெருநிறுவனங்கள் இஸ்ரேலின் சட்டவிரோத ஆக்கிரமிப்பு,  இனப்படுகொலை ஆகியவற்றால் லாபம் ஈட்டியுள்ளன என்று அறிக்கை குறிப்பிடுகிறது.

    சிறப்பு அறிக்கையாளர்கள் என்பவர்கள் குறிப்பிட்ட சூழ்நிலைகள் குறித்து ஆலோசனை வழங்க அல்லது அறிக்கை அளிக்க ஐ.நா.வால் நியமிக்கப்பட்ட சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் ஆவர்.

    2022 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்கள் குறித்த சிறப்பு அறிக்கையாளராக இருக்கும் இத்தாலிய சட்ட அறிஞரான பிரான்செஸ்கா அல்பானீஸ், காசாவில் இஸ்ரேலிய தாக்குதலை ஒரு 'இனப்படுகொலை' என்று ஜனவரி 2024 இல் முதன்முதலில் உறுதிப்படுத்தினார். இஸ்ரேலுக்கு எதிரான இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை சர்வதேச நீதிமன்றம் பரிசீலித்து வருகிறது.

    காசா சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, இஸ்ரேலிய தாக்குதலில் 57,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், பல பாலஸ்தீனியர்கள் காணாமல் போயுள்ளதாகவும் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளதாகவும் நம்பப்படுவதால், உண்மையான இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

    • சர்வதேச கோர்ட்டில் இந்த தீர்ப்பால் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
    • நாங்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

    ஜெருசலேம்:

    பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது.

    காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதாக கூறி தீவிர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் போரில் குழந்தைகள், பெண்கள் உள்பட 26 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    காசாவில் இஸ்ரேல், இனப்படுகொலையில் ஈடுபடுவதாக ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் தென் ஆப்பிரிக்கா வழக்கு தொடர்ந்தது. இதில் விசாரணை நடை பெற்று வரும் நிலையல் நேற்று கோர்ட்டு இடைக்கால தீர்ப்பு வழங்கியது.

    அதில், காசாவில் இனப்படுகொலை தவிர்க்க இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. சர்வதேச கோர்ட்டில் இந்த தீர்ப்பால் இஸ்ரேலுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் சர்வதேச கோர்ட்டு தீர்ப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    இஸ்ரேல் மீது சுமத்தப்பட்டுள்ள இனப்படுகொலை குற்றச்சாட்டு தவறானது மட்டுமல்ல, அது மூர்க்கத்தனமானது, எல்லா இடங்களிலும் உள்ள கண்ணியமான மக்கள் அதை நிராகரிக்க வேண்டும். ஒவ்வொரு நாட்டையும் போலவே, இஸ்ரேலுக்கும் தன்னைத் தற்காத்துக் கொள்ள ஒரு உள்ளார்ந்த உரிமை உள்ளது. இந்த அடிப்படை உரிமையை இஸ்ரேலுக்கு மறுக்கும் மோசமான முயற்சி. இஸ்ரேல் அரசுக்கு எதிரான அப்பட்டமான பாகுபாடு ஆகும். எங்கள் நாட்டைப் பாதுகாக்கவும், மக்களைப் பாதுகாக்கவும் தேவையானதை தொடர்ந்து செய்வோம்.

    ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளும். இஸ்ரேலின் போர் ஹமாசுக்கு எதிரானது. பாலஸ்தீன மக்களுக்கு எதிரானது அல்ல. தொடர்ந்து மனிதாபிமான உதவிகளை வழங்குவோம், பொதுமக்களை ஹமாஸ் அமைப்பினர் மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே காசாவின் கான்யூனுஸ் நகரில் தொடர்ந்து தாக்குதல் நடைபெறும் நிலையில் அங்குள்ள நாசர் ஆஸ்பத்திரியில் முழுவதுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். அதே போல் அங்குள்ள மற்ற ஆஸ்பத்திரிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    ×