என் மலர்

  நீங்கள் தேடியது "UN Security Council"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஐநாபாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா சார்பில் ருச்சிரா கம்போஜ் ஏற்று இந்த மாத நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.

  வாஷிங்டன்:

  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. அவ்வகையில் டிசம்பர் மாதங்ததிற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

  பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா சார்பில் ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் ஏற்று இந்த மாத நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். இதையொட்டி அவர் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரசை சந்தித்து பேசினார்.

  பின்னர் அவர் ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

  உலகில் மிக பழமையான நாகரீகம் இந்தியா என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 2,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் ஜனநாயகத்தின் வேர்கள் இருந்தன. நாங்கள் எப்போதுமே ஜனநாயக நாடாகவே உள்ளோம்.

  ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் எங்களிடம் வலுவாக உள்ளது. நீதித்துறை, பத்திரிகைத்துறை, துடிப்பான சமூக ஊடகம் என உலகின் சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

  5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாங்கள் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தி வருகிறோம். எங்கள் நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் உரிமை இருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக ஏற்றங்களை, மாற்றங்களை கண்டு வருகிறோம். எங்கள் முன்னேற்றம் மிக சிறப்பாக உள்ளது. எனவே ஜனநாயகத்தை பற்றி எங்களுக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புல்வாமா தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை கருப்பு பட்டியலில் வைக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உலக நாடுகள் வலியுறுத்தியிருக்கின்றன. #MasoodAzhar
  நியூயார்க்:

  புல்வாமாவில் துணை ராணுவத்தினர் மீது பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப்படை விமானங்கள் நுழைந்து, அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தின.

  இதில் 300-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது இயக்க தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உள்ளிட்ட முக்கிய பயங்கரவாத தளபதிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக தெரிகிறது.  இந்த நிலையில், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை ஐ.நா-வின் கருப்பு பட்டியலில் வைக்க உத்தரவிட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

  மேலும் மசூத் அசார் வெளிநாடு செல்ல தடை விதிக்கவும், அவரது வங்கிக் கணக்குகளை முடக்கவும் பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தப்பட்டுள்ளது. #MasoodAzhar #UNSecurityCouncil #PulwamaAttack

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க தேர்தலில் தலையிட சீனா முயற்சி செய்து வருவதாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் டிரம்ப் புகார் அளித்துள்ளார். #DonaldTrump #China #UNSecurityCouncil
  நியூயார்க்:

  உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நல்லிணக்கம் இல்லை. இரு நாடுகள் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது. சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் தொடர்ந்து கூடுதல் வரி விதித்து வருகின்றன. தைவானுக்கு அமெரிக்கா போர் விமான பாகங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இது சீனாவுக்கு அமெரிக்கா மீது ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்த நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. பேரழிவு ஏற்படுத்துகிற ஆயுதங்கள் பரவுவதைத் தடுப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

  இந்த கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நவம்பர் 6-ந் தேதி நடக்க உள்ள எங்கள் தேர்தலில் தலையிடுவதற்கு சீனா முயற்சி செய்து வருகிறது. இது எனது நிர்வாகத்துக்கு எதிரான நடவடிக்கை ஆகும்” என்று குறிப்பிட்டார். இது கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை சீனா மறுத்துள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 6-ந் தேதி நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கும், செனட் சபையின் 33 இடங்களுக்கும், 39 கவர்னர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்க இருப்பது குறிப்பிடத்தகுந்தது. #DonaldTrump #China #UNSecurityCouncil
  ×