என் மலர்
உலகம்

21 ஆம் நூற்றாண்டு Software, 20 ஆம் நூற்றாண்டு Typewriter-இல் இயங்காது - BRICS மாநாட்டில் பிரதமர் மோடி
- முக்கிய உலகளாவிய அமைப்புகளில் சுமார் 80 ஆண்டுகளாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
- பிரிக்ஸ் குழுவின் சமீபத்திய விரிவாக்கம் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நாம் உறுதியுடன் செயல்படுவதற்கான ஒரு சான்றாகும்.
பிரதமர் மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.
உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) போன்ற அமைப்புகளின் தோல்வியை விமர்சித்தார். "20 ஆம் நூற்றாண்டின் தட்டச்சுப்பொறியில் 21 ஆம் நூற்றாண்டின் மென்பொருளை இயக்குவது சாத்தியமற்றது" என்று அவர் இவ்வமைப்புகளின் காலாவதியான தன்மையை சுட்டிக்காட்டினார்.
மேலும், உலகின் பெரும்பாலான நாடுகளின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அமைப்புகள் (குளோபல் சவுத்) "நெட்வொர்க் இல்லாத சிம் கார்டு கொண்ட மொபைல் போன்கள்" என்று அதன் தெரிவித்தார்.
மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு வாரமும் புதிய புதுப்பிப்புகளைக் கொண்டு வரும் இந்தக் காலத்தில், முக்கிய உலகளாவிய அமைப்புகளில் சுமார் 80 ஆண்டுகளாக எந்த மாற்றமும் ஏற்படாதது கவலையளிக்கிறது என்று மோடி கூறினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் (MDBs) போன்ற நிறுவனங்களின் கட்டமைப்பில் மாற்றங்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
பிரிக்ஸ் குழுவின் சமீபத்திய விரிவாக்கம் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நாம் உறுதியுடன் செயல்படுவதற்கான ஒரு சான்றாகும் என்றும், மற்ற சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தங்களில் அதே முனைப்பு காட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியா எதிர்நோக்கியிருக்கும் சூழலில் மோடியின் விமர்சனம் முக்கியதுவம் பெறுகிறது.