என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "BRICS Summit"
- முதல் உச்சி மாநாடு 2009ல் ரஷியாவில் நடைபெற்றது
- 5 நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குதல் கடினம் என்கிறார் பேராசிரியர்
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பாக 2009-இல் பிரிக்ஸ் (BRICS) உருவானது.
இதன் முதல் உச்சி மாநாடு 2009-இல் ரஷியாவில் நடைபெற்றது.
2023 ஆகஸ்ட் 22-ம் தொடங்கி இன்றுடன் 3-வது மற்றும் நிறைவு நாளாக இந்த அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகென்னஸ்பர்க் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது.
2024-இல் அர்ஜென்டினா, எகிப்து, எதியோப்பியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்த கூட்டமைப்பில் இணைய போகின்றன.
இது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும் போது,"கூட்டமைப்பின் விரிவாக்கம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம்," என தெரிவித்துள்ளார்.
"இது ஒரு மிக பெரிய தருணம். வளர்ச்சிக்கான ஒரு உலக கட்டமைப்பை உருவாக்க எத்தியோப்பியா துணை நிற்கும்" என புதிதாக இணையவுள்ள எத்தியோப்பியாவின் பிரதமர் அபி அகமது கூறியுள்ளார்.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான் மற்றும் எகிப்து ஆகியவை இணைவதன் மூலம் 'மெனா' எனப்படும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க (MENA) நாடுகளுக்கு ஒரு பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
ரஷியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் அமெரிக்க உட்பட மேற்கத்திய நாடுகளால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்கள் நலனை கருத்தில் கொண்டு அவை இந்த விரிவாக்கத்திற்கு பெரிதும் முனைந்துள்ளன.
"5 பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே ஒருமித்த கருத்தை உருவாக்குதல் கடினம் என்பதால் இந்த கூட்டமைப்பு இதுவரை குறிப்பிட்டு சொல்லும் வகையில் எதையும் சாதிக்கவில்லை. எனவே இதன் விரிவாக்கம் மேலும் இப்பிரச்சனையை சிக்கலாக்கலாம். இருந்தாலும் அது இணைந்து கொள்ளும் நாடுகளின் கையில் உள்ளது" என தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா பல்கலைக்கழக பேராசிரியர் டேனி பிராட்லோ தெரிவித்துள்ளார்.
- பிரிக்ஸ் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.
- உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.
ஜோகனஸ்பர்க்:
தென்ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24-ம் தேதி வரை நடக்கிறது.
அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று தென்ஆப்பிரிக்கா சென்றடைந்தார்.
ஜோகனஸ்பர்க் நகரில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், பிரிக்ஸ் அமைப்புகளின் வர்த்தக அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
உலக பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது.
உலக வளர்ச்சிக்கான இன்ஜினாக இந்தியா விளங்கும்.
இந்தியாவில் ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்த பிறகு முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது.
யு.பி.ஐ. தொழில்நுட்பம் இன்று தெருவோர வியாபாரிகளால் பயன்படுத்தப்படுகிறது.
சூரிய ஆற்றல், காற்றாலை ஆற்றல், மின்சார வாகனங்கள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற நாங்கள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.
- பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்க வாய்ப்பு.
- மாநாட்டிற்கு தென்ஆப்பிரிக்கா தரப்பிலிருந்து அழைக்கப்பட்ட பிற நாடுகள் கலந்துகொள்கின்றன.
தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தொடங்கி ஆகஸ்ட் 24-ந்தேதி வரை நடக்கிறது. தென்ஆப்ரிக்க அதிபர் மதமேலா சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதையொட்டி இந்தியாவில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி தென்ஆப்ரிக்காவின் ஜொகனெஸ்பர்க் சென்றடைந்தார். ஜோகனெஸ்பர்க் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு இந்திய வம்சாவெளியினர் பிரமான்ட வரவேற்பு அளித்தனர்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே, சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பிரதமர் மோடி சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசின் அழைப்பின் பேரில் மோடி அங்கு செல்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 2019-ம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் முதல் பிரிக்ஸ் உச்சிமாநாடு இதுவாகும். உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நடைபெறுகிறது. இதில் தென்ஆப்பிரிக்கா தரப்பிலிருந்து அழைக்கப்பட்ட பிற நாடுகள் கலந்துகொள்ளும். ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் சில தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.
- 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென்னாப்பிரிக்கா தரப்பிலிருந்து அழைக்கப்பட்ட பிற நாடுகள் கலந்துகொள்ளும்.
புதுடெல்லி:
தென்ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 15-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தொடங்கி 24-ந்தேதி வரை நடக்கிறது. தென் ஆப்ரிக்க அதிபர் மதமேலா சிரில் ரமபோசாவின் அழைப்பின் பேரில் 15-வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அவர் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிசின் அழைப்பின் பேரில் மோடி அங்கு செல்கிறார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பிரதமர் ஒருவர் கிரீஸ் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2019-ம் ஆண்டுக்கு பிறகு நடக்கும் முதல் பிரிக்ஸ் உச்சிமாநாடு இதுவாகும்.
உச்சிமாநாட்டைத் தொடர்ந்து ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நடைபெறுகிறது. இதில் தென்னாப்பிரிக்கா தரப்பிலிருந்து அழைக்கப்பட்ட பிற நாடுகள் கலந்துகொள்ளும். ஜோகன்னஸ்பர்க்கில் இருக்கும் சில தலைவர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய பிரிக்ஸ் குழுவானது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் 5 பொருளாதார நாடுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த மாத இறுதியில் நடைபெறுகிறது.
- பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார்.
கேப் டவுன்:
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது.
2023-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்கா நாட்டில் நடைபெற உள்ளது என அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில் ஆகஸ்ட் 22 முதல் 24-ம் தேதி வரை பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ஆவலுடன் உள்ளேன் என தெரிவித்தார்.
இதுதொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது இருதரப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் பேசினர். 2023-ல் இருதரப்பு ராஜதந்திர உறவுகள் தொடங்கப்பட்டதன் 30-வது ஆண்டு விழா கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து சர்வதேச கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்குப் பின்னர் முதல் முறையாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கக் கூடிய முதல் உச்சி மாநாடாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
- தென் ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
- இதில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தென் ஆப்பிரிக்கா அதிபர் அறிவித்துள்ளார்.
கேப்டவுன்:
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பங்கேற்கும் பிரிக்ஸ் நாடுகளின் 15-வது உச்சி மாநாட்டை நடத்துவதற்குத் தென் ஆப்பிரிக்கா தயாராக உள்ளது என அதிபர் சிரில் ராமபோசா உறுதிப்படுத்தினார்.
இதன்படி அடுத்த மாதம் பிரிக்ஸ் நாடுகளின் 15-வது உச்சி மாநாடு நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று நெருக்கடி மற்றும் அதனைத் தொடர்ந்து சர்வதேச கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்குப் பின் முதல் முறையாக பல்வேறு நாடுகளின் தலைவர்கள் நேரடியாகப் பங்கேற்கக் கூடிய முதல் உச்சி மாநாடாக அது அமையும்.
உக்ரைனுக்கு எதிரான ரஷியாவின் படையெடுப்பு தீவிரமடைந்து உள்ள சூழலில், போரைக் கைவிட உலக நாடுகள் வலியுறுத்தின. சர்வதேச அமைப்புகளும் கோரிக்கை விடுத்தன. ஆனால், அதனை இரு நாடுகளும் கேட்கவில்லை. போர் நீடித்து வருகிறது.
உக்ரைன் மீது போர் தொடுத்த புதினை கைது செய்யச் சர்வதேச குற்ற நீதிமன்றம் சார்பில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதில், தென் ஆப்பிரிக்காவும் ஓர் உறுப்பினராக உள்ளது. அதனால், புதின் அந்நாட்டில் இருக்கும்போது, அவரை கைது செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா அறிவித்துள்ளார்.
ரஷிய கூட்டமைப்பு சார்பில் ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரவ் பங்கேற்பார் என ரஷிய அதிபரின் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.
- இந்தாண்டு சீனா தலைமையில் 14-வது பிரிக்ஸ் மாநாடு நாளை பீஜிங்கில் தொடங்குகிறது.
- சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பின் பேரில் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
புதுடெல்லி:
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன.
இந்தாண்டு சீனா தலைமையில் 14-வது பிரிக்ஸ் மாநாடு நாளை பீஜிங்கில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும்படி சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சீன அதிபரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி நாளை பிரிக்ஸ் மாநாட்டில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக கலந்து கொள்ள உள்ளார். அவருடன் ரஷிய அதிபர் புதின், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ, தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் மாநாட்டில் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.
மாநாட்டையொட்டி இன்று நடக்கும் வர்த்தக கூட்டத்தில் பிரதமர் மோடியின் அறிக்கை வாசிக்கப்படும்.
நாளை மறுநாள் சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக உறுப்பு நாடுகளின் உயர்மட்டக் கூட்டம் நடக்க உள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உகாண்டா, ருவாண்டா நாடுகளின் தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது இந்தியாவுக்கும் மேற்கண்ட இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன.

தொடர்ந்து, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பெர்க் நகரில் நேற்று நடந்த பிரிக்ஸ் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரேசில், ரஷியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாட்டு தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். மாநாடு முடிந்த பின்னர், இந்த நாடுகளின் தலைவர்களை மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், அர்ஜெண்டினா அதிபர் மவுரிசியோ மாக்ரி ஆகியோரை மோடி சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியாக இன்று மாலை துருக்கி அதிபர் ரெசெப் எர்டோகன்-ஐ சந்தித்த பிரதமர் மோடி இரண்டாவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், தனி விமானம் மூலம் ஜோகன்னஸ்பெர்க் நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி புறப்பட்டார். #PMModi #BRICSSummit #Johannesburg