பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. மாநாடு முடிந்ததும் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.
பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான், சவூதி அரேபியா, எத்தியோப்பியா, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷியா தலைமையில் அந்நாட்டின் கலாசார மற்றும் கல்வி மையமாக திகழும் கசான் நகரில் நடைபெற்றது.

'உலகளாவிய வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான பலதரப்பு வாதத்தை வலுப்படுத்துதல்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமா் மோடி, சீன அதிபா் ஜி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் ரஜாவி உள்பட உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.

சா்வதேச அரசியல், பிரிக்ஸ் கூட்டமைப்பின் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாடு, பரஸ்பர பிரச்சனைகள் குறித்து இந்த மாநாட்டில் தலைவர்கள் கலந்துரையாடினர்.

இந்த மாநாட்டில் பங்கேற்க தனி விமானத்தில் ரஷியா சென்ற பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரஷிய அதிபர் புதினைச் சந்தித்து பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகை தந்த பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. இது 5 ஆண்டுக்கு பிறகு இரு தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற முறையான இருதரப்பு பேச்சுவார்த்தை என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பிரிக்ஸ் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com