என் மலர்
இந்தியா

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி பிரேசில் பயணம்
- பிரிக்ஸ் உச்சி மாநாடு அடுத்த மாதம் 6 மற்றும் 7-ம் தேதிகளில் பிரேசிலில் நடக்கிறது.
- பிரதமர் மோடி அடுத்த வாரம் பிரேசில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியது.
புதுடெல்லி:
பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த மாதம் (ஜூலை) 6 மற்றும் 7-ம் தேதிகளில் பிரேசிலில் நடக்கிறது. இந்த அமைப்பின் உறுப்பு நாடான இந்தியாவுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதை ஏற்று மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் பிரேசில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்தப் பயணத்துடன் மேலும் 4 நாடுகளில் அவர் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். அதன்படி கானா, டிரினிடாட் டொபாகோ, அர்ஜென்டினா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கும் செல்ல உள்ளதாகத் தெரிகிறது.
ஆனாலும், இந்தப் பயணம் குறித்து மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Next Story






