என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐநா பாதுகாப்பு கவுன்சில்"

    • தனது சொந்த குடிமக்கள் மீது குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலையைச் செய்யும் அதே நாடு இது.
    • உலகம் அதன் இரட்டைத் தரத்தை உணர்ந்திருந்தாலும், இப்போது அது தன்னை 'மனித உரிமைகளின் பாதுகாவலர்' என்று சித்தரிக்க முயற்சிக்கிறது.

    ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் "பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நேற்று விவாதம் நடைபெற்றது.

    இதில் பேசிய பாகிஸ்தான் பிரதிநிதி சைமா சலீம், காஷ்மீரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை பல தசாப்தங்களாக போர் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

    ஆனால் இதை மறுத்து பேசிய இந்தியாவுக்கான நிரந்தர ஐநா பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பாகிஸ்தான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

    அவர் பேசியதாவது, "ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டிற்கு எதிராக பொய்களைப் பரப்பும் பாகிஸ்தானிடமிருந்து தவறான அறிக்கைகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

    1971 ஆம் ஆண்டு வங்கதேச போரில் ஆபரேஷன் சர்ச்லைட்டின் போது 400,000 பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ய உத்தரவிட்ட அதே நாடு இதுதான்.

    தனது சொந்த குடிமக்கள் மீது குண்டுவீசி திட்டமிட்ட இனப்படுகொலையைச் செய்யும் அதே நாடு இது.

    உலகம் அதன் இரட்டைத் தரத்தை உணர்ந்திருந்தாலும், இப்போது அது தன்னை 'மனித உரிமைகளின் பாதுகாவலர்' என்று சித்தரிக்க முயற்சிக்கிறது.

    பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவின் சாதனை எந்த விதத்திலும் குறைபாடற்ற முன்மாதிரியான ஒன்றாகும்" என்று தெரிவித்தார்.   

    காசாவில் இஸ்ரேலின் புதிய தரைவழித் தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் பஞ்சம் உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    காசாவில் போர் நிறுத்தம் கோரும் ஐ.நா. தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி மீண்டும் ஒருமுறை தோல்வி அடைய செய்துள்ளது.

    இந்தத் தீர்மானத்திற்கு கவுன்சிலின் மற்ற 14 உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவித்திருந்தன.

    தீர்மானத்தின்படி, காசாவில் உடனடி, நிபந்தனையற்ற மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் மற்றும் பிணைக்கைதிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.

    ஆனால், இதை அமெரிக்கா மீண்டும் நிராகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்திலும் அமெரிக்கா இதேபோல் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலுக்கு ஆதவராக முந்தைய தீர்மானத்தையும் தோல்வி அடைய செய்தது.

    ஹமாஸின் தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை என்று கூறி அமெரிக்கா தீர்மானத்தை நிராகரித்தது.

    காசாவில் இஸ்ரேலின் புதிய தரைவழித் தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் பஞ்சம் உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்ததற்கு பல்வேறு உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

    இதற்கிடையில், ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் ரியாத் மன்சூர், இந்தத் தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ செய்தது வருத்தமளிக்கிறது என்று கூறினார். மேலும், பாலஸ்தீன மக்களை இனப்படுகொலையிலிருந்து பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

    இந்த தீர்மானத்திற்கு எதிராக பேசிய இஸ்ரேல் தூதர், "இஸ்ரேலுக்கு எதிரான தீர்மானங்கள் பிணைக்கைதிகளை விடுவிக்கவோ அல்லது பிராந்தியத்திற்கு பாதுகாப்பைக் கொண்டுவரவோ உதவாது" என்று தெரிவித்தார்.

    வரும் வாரத்தில் நடைபெறவுள்ள ஐ.நா. உச்சிமாநாட்டில் இந்த விவகாரம் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது.
    • காசாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறுவது தவறு என அமெரிக்கா கூறியது.

    நியூயார்க்:

    காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. இதில் இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாத்தது.

    குறிப்பாக, காசாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறுவது தவறு எனக் கூறியது. அத்துடன் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க தயாராகி உள்ளது.

    அதேநேரம் சீனா, ரஷியா உள்ளிட்ட பிற உறுப்பு நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கை குறித்து அபாயத்தை வெளிப்படுத்தின.

    குறிப்பாக, காசாவில் மக்களுக்கு வழங்கப்படும் கூட்டு தண்டனையை ஏற்க முடியாது என சீனாவும், அங்கே பொறுப்பற்ற விரோதப் போக்கு தொடர்வதற்கு எதிராக ரஷியா எச்சரிக்கையும் விடுத்தன.

    • முக்கிய உலகளாவிய அமைப்புகளில் சுமார் 80 ஆண்டுகளாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
    • பிரிக்ஸ் குழுவின் சமீபத்திய விரிவாக்கம் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நாம் உறுதியுடன் செயல்படுவதற்கான ஒரு சான்றாகும்.

    பிரதமர் மோடி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.

    உச்சிமாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் (UNSC) போன்ற அமைப்புகளின் தோல்வியை விமர்சித்தார். "20 ஆம் நூற்றாண்டின் தட்டச்சுப்பொறியில் 21 ஆம் நூற்றாண்டின் மென்பொருளை இயக்குவது சாத்தியமற்றது" என்று அவர் இவ்வமைப்புகளின் காலாவதியான தன்மையை சுட்டிக்காட்டினார்.

    மேலும், உலகின் பெரும்பாலான நாடுகளின் குரலைப் பிரதிநிதித்துவப்படுத்தாத அமைப்புகள் (குளோபல் சவுத்) "நெட்வொர்க் இல்லாத சிம் கார்டு கொண்ட மொபைல் போன்கள்" என்று அதன் தெரிவித்தார்.

    மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற தொழில்நுட்பங்கள் ஒவ்வொரு வாரமும் புதிய புதுப்பிப்புகளைக் கொண்டு வரும் இந்தக் காலத்தில், முக்கிய உலகளாவிய அமைப்புகளில் சுமார் 80 ஆண்டுகளாக எந்த மாற்றமும் ஏற்படாதது கவலையளிக்கிறது என்று மோடி கூறினார்.

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் (MDBs) போன்ற நிறுவனங்களின் கட்டமைப்பில் மாற்றங்களின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

    பிரிக்ஸ் குழுவின் சமீபத்திய விரிவாக்கம் மாறிவரும் காலத்திற்கு ஏற்ப நாம் உறுதியுடன் செயல்படுவதற்கான ஒரு சான்றாகும் என்றும், மற்ற சர்வதேச அமைப்புகளின் சீர்திருத்தங்களில் அதே முனைப்பு காட்டப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

    ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை இந்தியா எதிர்நோக்கியிருக்கும் சூழலில் மோடியின் விமர்சனம் முக்கியதுவம் பெறுகிறது.  

    • பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் தலைமையில் பாகிஸ்தானுக்கு இடம்.
    • அமெரிக்காவில் 9/11 இரட்டை தாக்குதலின் மூளையாக இருந்தவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது.

    பயங்கரவாதம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) சில முடிவுகளுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

    நேற்று டேராடூனில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தானின் பயங்கரவாத நிலைப்பாட்டையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழுவில் பாகிஸ்தானுக்கு துணை இருக்கை அளித்ததையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

    " அமெரிக்காவில் 9/11 இரட்டை தாக்குதலின் மூளையாக இருந்தவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்தது அனைவருக்கும் தெரியும்," என்று கூறிய ராஜ்நாத் சிங், பாகிஸ்தானை "பயங்கரவாதத்தின் தந்தை" என்று தெரிவித்தார். எனவே "இது பாலை பாதுகாக்க பூனையை காவல் வைப்பது போன்றது" என்று கூறினார். 

    பயங்கரவாதத்திற்கு நிதி அளித்து, புகலிடம் அளிக்கும் நாடுகளை அம்பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐ.நா. உறுதுணையாக நிற்க வேண்டும் என்றும், சமீபத்திய ஆண்டுகளில் ஐ.நா. எடுத்த பல முடிவுகள் கேள்விக்குறியாகிவிட்டன என்றும் அவர் கூறினார். 

    • ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாலஸ்தீனிய தூதர் பங்கேற்றார்.
    • காசாவின் நிலையை எடுத்துரைக்கும்போது அவர் கதறி அழுதது உருக்கத்தை ஏற்படுத்தியது.

    நியூயார்க்:

    இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனத்தின் காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.

    சமீபத்தில் வெளியான தகவலின்படி உணவு மற்றும் மருந்துக்கு பற்றாக்குறை இருப்பதாகவும், உணவு வாகனங்கள் செல்வதற்கு இஸ்ரேல் அனுமதி அளிக்க வேண்டும் என கோரப்பட்டது. உணவு வாகனங்கள் செல்லாவிட்டால் பல ஆயிரம் குழந்தைகள் இறக்க நேரிடும் என தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய பாலஸ்தீனிய தூதர் ரியாத் மன்சூர், காசாவில் குண்டுவெடிப்பு, தீப்பிழம்பு, பசி, பட்டினி ஆகியவற்றின் நடுவே மக்கள் தவிப்பதாக தெரிவித்தார்.

    அப்போது மனம் உடைந்து கதறி அழுத அவர், தனக்கும் பேரக் குழந்தைகள் இருக்கிறார்கள். காசா குழந்தைகளின் நிலையைப் பார்க்க முடியவில்லை. காசாவின் குழந்தைகள் அண்டை நாடுகள் உள்ளிட்ட இடங்களிலும், அகதிகள் முகாமிலும் வாழ்வதைப் பார்க்க முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

    • பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனைகளை நடத்துவது நிலைமையை மோசமாகும் செயல்
    • சீனவை தவிர்த்து மேலும் பல நாடுகள் அதை எதிர்க்கும்.

    பஹல்காம் தாக்குதலுக்குப் பின் இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் குறித்து விவாதிக்க நேற்று இரவு ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கூடியது.

    உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். பிற உறுப்பினர்கள் பாகிஸ்தானிடம் கடுமையான கேள்விகளை கேட்டதாக தெரிகிறது. 

    பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு  தாக்குதலில் ஈடுபட்டது குறித்து கவுன்சில் உறுப்பினர்கள் பாகிஸ்தானை விமர்சித்ததாகவும்,  பொறுப்பேற்கும்படி கூறியாதாகவும் கூறப்படுகிறது.

    பதற்றத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் ஏவுகணை சோதனைகளை நடத்துவது நிலைமையை மோசமாகும் செயல் என்று கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஐநா சபையின் முன்னாள் அதிகாரியும் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பியுமான சசி தரூர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது தனக்கு தெரிந்த வரை, இந்தியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் எந்த தீர்மானத்தையும் நிறைவேற்றாது என்று தெரிவித்துள்ளார்.

    அவ்வாறான தீர்மானம் ஏதேனும் நிறைவேற்றப்பட்டால் சீனா அதை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தோல்வி அடையச் செய்யும். பாகிஸ்தானை விமர்சிக்கும் தீர்மானத்தை கவுன்சில் நிறைவேற்றாது. சீனவை தவிர்த்து மேலும் பல நாடுகள் அதை எதிர்க்கும். ஐநாவில் இந்த விஷயங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதன் சோகமான உண்மை இதுதான்.

    இரு நாடுகளையும் நேரடியாகப் பாதிக்கும் எந்தவொரு குறிப்பிட்ட நடவடிக்கைகளையும், முறையான கூட்டங்கள் அல்லது முறைசாரா ஆலோசனைகள் மூலம் கவுன்சில் எடுக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று சசி தரூர் விளக்கினார்.

    பாதுகாப்பு கவுன்சிலின் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்களில் பாகிஸ்தானும் ஒன்று, நேற்று நடந்த கூட்டத்தில் பாகிஸ்தான் கலந்து கொண்டது. அதே நேரத்தில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.

    இதைக்குறித்து பேசிய சசி தரூர், "இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் தங்களுக்கு ஒரு நன்மை இருப்பதாக நினைத்திருக்கும். ஆனால் கவுன்சிலின் பல பிரதிநிதிகள் பாகிஸ்தானிடம் மிகவும் கடினமான கேள்விகளைக் கேட்டதாக தெரிகிறது. குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பாவுக்கு தாக்குதலில் தொடர்பு உள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளது" என்று  அவர் மேலும் கூறினார்.

    • பஹல்காம் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்தது.
    • எந்தவொரு பயங்கரவாதச் செயல்களும் நியாயப்படுத்த முடியாதவை என்றது.

    நியூயார்க்:

    ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துக்கு ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    பயங்கரவாதம் அதன் அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு மிகவும் கடுமையான அச்சுறுத்தல்களில் ஒன்றாகும்.

    இந்த பயங்கரவாதச் செயலுக்கு காரணமானவர்கள், நிதி அளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டும். எந்தவொரு பயங்கரவாதச் செயல்களும் நியாயப்படுத்த முடியாதவை.

    ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின்படி மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச அகதிகள் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் உள்பட சர்வதேச சட்டத்தின் கீழ் உள்ள பிற கடமைகள், பயங்கரவாதச் செயல்களால் ஏற்படும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அனைத்து நாடுகளும் அனைத்து வழிகளிலும் எதிர்த்துப் போராட வேண்டும்.

    நிலைமை மேலும் மோசமடையாமல் இருப்பதை உறுதிசெய்ய இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    • கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது.
    • மும்பை தாக்குதலுக்குக் காரணமானோர் தற்போதும் பாதுகாப்பாக இருப்பதாக வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.

    மும்பை:

    ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாடு மும்பையில் இன்று நடைபெற்றது. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதற்கு எதிராக உலக நாடுகள் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டில் ஐ.நா பாதுகாப்பு அவையின் தலைவர் மைக்கேல் மவுஸ்ஸா, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் பேசியதாவது:

    கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது.

    பயங்கரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் சில நேரங்களில் ஐ.நா.வால் போதிய வெற்றியை பெற முடியாததற்கு அரசியல் காரணங்கள் உள்ளன.

    கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நிகழ்த்தப்பட்ட மும்பை பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்தத் தாக்குதல் மும்பை மீதானது அல்ல. அது சர்வதேச சமூகத்திற்கு எதிரானது.

    மும்பை பயங்கரவாத தாக்குதலின்போது, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், அவர்கள் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகளை பொறுப்பேற்கச் செய்வதில் இருந்தும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் இருந்தும் சர்வதேச சமூகம் பின்வாங்காது என்ற செய்தியை நாம் வலுவாக வழங்க வேண்டியது மிகவும் முக்கியம் என தெரிவித்தார்.

    ஐநாபாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா சார்பில் ருச்சிரா கம்போஜ் ஏற்று இந்த மாத நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.

    வாஷிங்டன்:

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை உறுப்பு நாடுகள் சுழற்சி முறையில் வகித்து வருகின்றன. அவ்வகையில் டிசம்பர் மாதங்ததிற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது.

    பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை பொறுப்பை இந்தியா சார்பில் ஐ.நா. சபைக்கான நிரந்தர இந்திய பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் ஏற்று இந்த மாத நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார். இதையொட்டி அவர் ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரசை சந்தித்து பேசினார்.

    பின்னர் அவர் ஐ.நா. தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவின் பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

    உலகில் மிக பழமையான நாகரீகம் இந்தியா என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 2,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவின் ஜனநாயகத்தின் வேர்கள் இருந்தன. நாங்கள் எப்போதுமே ஜனநாயக நாடாகவே உள்ளோம்.

    ஜனநாயகத்தின் அனைத்து தூண்களும் எங்களிடம் வலுவாக உள்ளது. நீதித்துறை, பத்திரிகைத்துறை, துடிப்பான சமூக ஊடகம் என உலகின் சிறந்த ஜனநாயக நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

    5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நாங்கள் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தி வருகிறோம். எங்கள் நாட்டில் யார் வேண்டுமானாலும் அவர்கள் மனதில் இருப்பதை சொல்லும் உரிமை இருக்கிறது. நாங்கள் தொடர்ச்சியாக ஏற்றங்களை, மாற்றங்களை கண்டு வருகிறோம். எங்கள் முன்னேற்றம் மிக சிறப்பாக உள்ளது. எனவே ஜனநாயகத்தை பற்றி எங்களுக்கு யாரும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.
    • இவர் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார்.

    புதுடெல்லி:

    பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவர் அப்துல் ரகுமான் மக்கி. இவர் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் உறவினர் ஆவார். அப்துல் ரகுமான் மக்கி, ஜம்மு காஷ்மீரில் இளைஞர்களை வன்முறையில் ஈடுபடுத்துவதிலும், தாக்குதல் நடத்த திட்டமிடுவதிலும் நிதி திரட்டுவதிலும் ஈடுபட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது.

    இதையடுத்து இந்தியாவும் அமெரிக்காவும் அப்துல் ரகுமான் மக்கியை பயங்கரவாதியாக அறிவித்தன. இவரை சர்வேதச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் கடந்த ஆண்டு தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால் சீனா தனக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த தீர்மானம் நிறைவேறாமல் தடுத்தது.

    இதற்கிடையே, அப்துல் ரகுமான் மக்கியை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது.

    இந்நிலையில், அப்துல் ரகுமான் மக்கியை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு வெளியிட்டதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது.

    • நமது கவனம் எப்போதும் நேர்மறையாக முன்னோக்கிய பார்வையில் இருக்க வேண்டும்.
    • பாகிஸ்தானின் பாலகோட்டில் பயங்கரவாத பயிற்சி முகாமை இந்தியாவின் போர் விமானங்கள் தாக்கி அழித்தன.

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 'பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் சர்தாரி, ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை எழுப்பினார்.

    பின்னர் ஐ.நா. சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசித்ரா கம்போஜ் பேசும்போது, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்தார். அவர் பேசியதாவது:-

    ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதிநிதி கூறிய அற்பமான, அடிப்படையற்ற மற்றும் அரசியல் நோக்கத்துடன் கூடிய கருத்துக்களை நிராகரிக்கிறேன். இத்தகைய தீங்கிழைக்கும் மற்றும் பொய்யான பிரச்சாரங்கள் பதிலளிப்பதற்கு கூட தகுதியற்றது.

    மாறாக, நமது கவனம் எப்போதும் நேர்மறையாக முன்னோக்கிய பார்வையில் இருக்க வேண்டும். பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு நமது கூட்டு முயற்சிகளை வலுப்படுத்த இன்றைய விவாதம் மிகவும் முக்கியமானது. விவாதத்தின் தலைப்பை நாங்கள் மதிக்கிறோம். எனவே, எங்கள் கவனம் இந்த தலைப்பில் மட்டுமே இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமை இந்தியாவின் போர் விமானங்கள் தாக்கி அழித்தன. இதையடுத்து, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×