என் மலர்
உலகம்

காசாவில் இனப்படுகொலை நடப்பதாக கூறுவது தவறு: ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு
- காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது.
- காசாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறுவது தவறு என அமெரிக்கா கூறியது.
நியூயார்க்:
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடந்தது. இதில் இஸ்ரேலை அமெரிக்கா பாதுகாத்தது.
குறிப்பாக, காசாவில் இனப்படுகொலை நடப்பதாகக் கூறுவது தவறு எனக் கூறியது. அத்துடன் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க தயாராகி உள்ளது.
அதேநேரம் சீனா, ரஷியா உள்ளிட்ட பிற உறுப்பு நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கை குறித்து அபாயத்தை வெளிப்படுத்தின.
குறிப்பாக, காசாவில் மக்களுக்கு வழங்கப்படும் கூட்டு தண்டனையை ஏற்க முடியாது என சீனாவும், அங்கே பொறுப்பற்ற விரோதப் போக்கு தொடர்வதற்கு எதிராக ரஷியா எச்சரிக்கையும் விடுத்தன.
Next Story






