என் மலர்
நீங்கள் தேடியது "Online Delivery"
- சில மாதங்களில் இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
- நிதின் அகர்வால் தனது ஆர்டரை ரத்து செய்யவில்லை.
சாப்பிடும் உணவு பொருட்கள் முதல் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்கள் வரை 'ஆன்-லைன்' மூலமாக ஆர்டர் செய்து பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு 'ஆன்-லைன்' மூலமாக ஆர்டர் செய்த பொருள் 4 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.
டெல்லியை சேர்ந்தவர் நிதின் அகர்வால். இவர் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் சீனாவை சேர்ந்த பிரபல 'ஆன்-லைன்' தளமான அலி எக்ஸ்பிரசில் ஒரு ஆர்டர் செய்தார். அதோடு ஆர்டருக்கான பணத்தையும் செலுத்தினார். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக சீனாவில் சர்வதேச போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அவரது ஆர்டர் வினியோகம் செய்யப்படவில்லை.
பின்னர் சில மாதங்களில் இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து 2020-ம் ஆண்டு மத்திய அரசு 'டிக்-டாக்' உள்ளிட்ட பெரும்பாலான சீன செயலிகளுக்கு தடை விதித்தது. அதில் அலி எக்ஸ்பிரஸ் செயலியும் இடம்பெற்றிருந்தது. இதனால் அந்த செயலியின் சேவைகள் இந்தியாவில் தடைபட்டதால் பல்லாயிரக்கணக்கான ஆர்டர்கள் அனுப்ப முடியாத நிலை உருவானது. இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலரும் தங்களது ஆர்டரை ரத்து செய்து பணத்தை திரும்ப பெற்றனர்.
ஆனால் நிதின் அகர்வால் தனது ஆர்டரை ரத்து செய்யவில்லை. இந்நிலையில் கடந்த 21-ந் தேதி அவருக்கு மற்றொரு டெலிவரி நிறுவனத்தில் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதில், 4 வருடங்களுக்கு முன்பு தான் ஆர்டர் செய்த பொருள் இருந்தது. இதைக்கண்டு வியப்பும், ஆனந்தமும் அடைந்த நிதின் அகர்வால் பார்சலின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அது தற்போது வைரலாகி வரும் நிலையில், பயனர்கள் பலரும் நீங்கள் ஆர்டர் செய்தது என்ன? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Never lose hope! So, I ordered this from Ali Express (now banned in India) back in 2019 and the parcel was delivered today. pic.twitter.com/xRa5JADonK
— Tech Bharat (Nitin Agarwal) (@techbharatco) June 21, 2023
- ஸ்விகி, சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களின் வருகை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்திய மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது.
இந்திய சமூகத்தில் சமீப காலமாக ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் முறை அதிகரித்து வருகிறது. மேல்தட்டு மக்கள் இடையே மட்டுமே இருந்து வந்த இந்த வழக்கம் தற்சமயம் நடுத்தர குடும்பங்கள் இடையேயும் பரவி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஸ்விகி, சோமாட்டோ உள்ளிட்ட ஆன்லைன் உணவு ஆர்டர் நிறுவனங்களின் வருகை.
சிலிண்டர் டோர் டெலிவரி வாங்கி உணவு சமைத்து சாப்பிடுவற்கு பதிலாக உணவையே 10 நிமிடங்களில் டோர் டெலிவரி வாங்கி சாப்பிட்டுவிடலாமே என்ற மனநிலைக்கு மக்கள் வந்துள்ளனர். தற்கால கார்ப்பரேட் லைப் ஸ்டைலில் எதற்குமே நேரம் இல்லாதது போலவும், எல்லாமே எளிதில் கிடைக்கும்போது ஏன் சிரமப்பட வேண்டும் என்ற பிம்பமும் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வியாபார உத்தியால் நாளுமொரு புதிய நிறுவனம் உதித்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள ஒரு புள்ளி விவரம் மேற்கூறியவற்றை உறுதி செய்வதாக உள்ளது. அதாவது, ஆன்லைன் ஸ்விகி [Swiggy], சோமாட்டோ[Zomato], பலசரக்கு டெலிவரி நிறுவனமான [Blinkit] மற்றும் [Zepto] ஆகிய 4 நிறுவனங்கள் சேர்ந்து கடந்த ஒரே வருடத்தில் 35,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளன.
இது இந்திய மக்களின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறியுள்ளதையே சுட்டிக்காட்டுகிறது. நிறுவனங்களின் பசி, மக்களின் பசியை தீர்மானிக்கும் காலம் இது என சமூக ஆர்வலர்கள் நொந்து கொள்கின்றனர்.
- இந்த நிதியாண்டில் 72% உயர்ந்து ரூ 5,747 கோடியாக செலவினம் அதிகரித்துள்ளது.
- கடந்த நிதியாண்டில் நஷ்டம் ரூ.1,272 கோடியாக இருந்த நிலையில் அதுவே இந்த நிதியாண்டில் ரூ.1,249 கோடியாக குறைந்துள்ளது.
ஆன்லைன் காய்கறிகள் மற்றும் பலசரக்கு டெலிவரி நிறுவனமான செப்டோ [Zepto] - உடைய வருவாய் நடப்பு நிதியாண்டில் 120 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2023 நிதியாண்டில் அதன் வருவாய் ரூ.2,026 கோடியாக இருந்த நிலையில் இந்த நிதியாண்டில் அது ரூ.4,455 கோடியாக உயர்ந்துள்ளது.
செப்டோ தனது ஊழியர்களுக்காக இந்த நிதியாண்டு ரூ.426.30 கோடி செலவிட்டுள்ளது, இது முந்தைய ஆண்டு செலவிடப்பட்ட ரூ.263.45 கோடியை 62% அதிகமாகும்.
ரூ.492.65 கோடியை கிடங்குகளுக்காக செலவிட்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டில் செலவிடப்பட்ட ரூ.344.79 கோடியை விட 43% அதிகமாகும்.
விளம்பரங்களுக்கு ரூ.303.5 கோடி செலவிட்டுள்ளது, முந்தைய நிதியாண்டில் செலவிடப்பட்ட ரூ 215.8 கோடியிலிருந்து செலவு விகிதம் 41% அதிகரித்துள்ளது.

மொத்தமாக செலவுகள் கடந்த நிதியாண்டில் ரூ 3,350 கோடியாக இருந்தது. அதுவே இந்த நிதியாண்டில் 72% உயர்ந்து ரூ 5,747 கோடியாக செலவினம் அதிகரித்துள்ளது.
இந்த வருடம் செப்டோவின் செலவினங்கள் அதிகரித்துள்ளபோதிலும் அதிக லாபம் காரணமாக நிறுவனத்தின் நஷ்டம் [நிகர இழப்பு] 2% வரை குறைந்துள்ளது. அதாவது கடந்த நிதியாண்டில் நஷ்டம் ரூ.1,272 கோடியாக இருந்த நிலையில் அதுவே இந்த நிதியாண்டில் ரூ.1,249 கோடியாக குறைந்துள்ளது.
இந்த தரவுகளை செப்டோ தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ஆதித் பாலிச்சா இந்த நிதி அறிக்கையை தனது லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
