search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waste water"

    • கழிவுநீர் சாலையில் நீண்ட தூரம் வழிந்தோடுகிறது.
    • சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம், பங்களாபுதூர் சாலையில் கழிவுநீர் செல்ல புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த கழிவுநீர் செல்லும் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அப்பகுதியில் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்று, குளம் போல் காட்சியளித்தது.

    மேலும் கழிவுநீர் சாலையில் நீண்ட தூரம் வழிந்தோடுகிறது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கழிவுநீர் ஆடைகளின் மேல் பட்டு அசுத்தத்தை ஏற்படுத்தி துர்நாற்றம் வீசி வருகிறது. சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

    மேலும் அப்பகுதியில் சாலை அரிப்புகள் ஏற்பட்டு, சாலை சேதம் அடைய வாய்ப்புள்ளது. மேலும் சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் பல மாதங்களாக சரி செய்யப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    எனவே நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரிசெய்து, கழிவுநீர் சீராக செல்ல வழிவகை செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் கழிவு நீர் குளம் போல் தேங்கியது.
    • கழிவு நீருக்குள் செல்வதால் ஊழியர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சாலைத் தெரு ஸ்டேட் பாங்க் எதிரில் மின் வாரியத்தின் நான்கு டிரான்ஸ்பார்மர் உள்ளன. இங்கு 1700 கே.வி உயரழுத்த மின்சாரம் இந்த மின் மாற்றிகள் வழியாக செல்கி றது.

    இந்த பகுதியில் நகராட்சி பாதாள சாக்கடையில் வெளியேறும் கழிவு நீர் டிரான்ஸ்பார்மரை சுற்றிலும் குளம் போல் தேங்கியுள்ளது. இது குறித்து மின் வாரிய அதிகாரிகள் நகராட்சி அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் கழிவு நீரை அகற்றி சீரமைக்கப்படவில்லை.

    இந்தப் பகுதியில் உயரழுத்த மின்சாரம் செல்வதால் பீஸ் போனால் கூட மின்வாரிய ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த டிரான்ஸ்பார்மர் பாதாள சாக்கடைக்குள் உள்ளதால் மின் விபத்து அச்சத்தில் பழுது ஏற்பட்டால் சீரமைக்க முடியாத நிலை உள்ளது.

    மேலும் சுற்றிலும் கழிவு நீர் தேங்கியுள்ளதால் மின்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அப்படி ஏற் பட்டால் மின் வாரிய ஊழியர்கள் மட்டுமின்றி அந்தப்பகுதியில் பொது மக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும்.

    மின் வாரிய உதவிப் பொறியாளர் வெற்றிவேல் கூறியதாவது:-

    பாதாள சாக்கடை கழிவு நீர் மேன் ஹோல் வழியாக வெளியேறி மின் மாற்றிப் பகுதியில் குளம் போல் தேங்கியுள்ளது. இப்பகுதியில் உயரழுத்த மின்சாரம் செல்கிறது. இதனால் டிரான்ஸ் பார்மரில் பழுது ஏற்பட் டால் கூட சீரமைக்க முடிவ தில்லை. மின் வாரிய ஊழியர்கள் அச்சப்படு கின்றனர். கழிவு நீருக்குள் செல்வதால் ஊழியர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது என்றார்.

    • பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இருந்து 100 அடி தூரத்துக்கும் மேல் குழி தோண்டி உள்ளார்கள்.
    • கழிவுநீர் கால்வாயும் அமைக்கவில்லை. அடுத்த 300 அடிக்கு மேல் கால்வாய் அமைத்துள்ளார்கள்.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காமாட்சி அம்மன் காலனி, கே.எம்.சி. பப்ளிக் ஸ்கூல் எதிரில் உள்ள தெருவில் மத்திய அரசு நிதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு முன்பே கழிவுநீர் கால்வாய் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் பெருமாநல்லூர் ஊராட்சியில் மெயின் ரோட்டில் இருந்து 100 அடி தூரத்துக்கும் மேல் குழி தோண்டி உள்ளார்கள். ஆனால் கால்வாய் அமைக்க வில்லை. அடுத்த 200 அடிக்கு மேல் குழியும் தோண்டவில்லை. கழிவுநீர் கால்வாயும் அமைக்கவில்லை. அடுத்த 300 அடிக்கு மேல் கால்வாய் அமைத்துள்ளார்கள். அதன் தரம் மிகவும் மோசமாக உள்ளது. மேலும் கால்வாயில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது. வீடுகளே இல்லாத பக்கம் கால்வாய் நேர்கோட்டில் இல்லாமல் வளைந்தும், நெளிந்தும் போடப்பட்டுள்ளது. இது அமைத்ததன் நோக்கமே புரியாமல் அந்த தெருவில் உள்ள மக்கள் புலம்பி தவிக்கிறார்கள். வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் கால்வாய் அமைக்காமல் ஊருக்கு ஒதுக்குப்புறம் குறைந்த வீடுகளே உள்ள பகுதியாக தேர்ந்தெடுத்து பாதி பகுதிக்கு மட்டும் கழிவுநீர் கால்வாய் அமைத்ததால் நிதி முறைகேடு ஏற்பட்டு இருக்கலாம் என்று பொதுமக்கள் சந்தேகிக்கிறார்கள். எனவே இது பற்றி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளோம். மேலும் திருப்பூர் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பொதுமக்களை ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டமும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தகவலை திருப்பூர் மாவட்டம் வடக்கு ஒன்றிய பா.ஜ.க. பொது செயலாளர் பா.குமார் தெரிவித்துள்ளார்.

    • கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது.
    • கழிவுநீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்

    பல்லடம்:

    பல்லடம் அண்ணா நகர் பகுதியில், சுமார் 3ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அண்ணாநகர் மேற்குப்பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்றும் இதனால் கழிவுநீர் தேங்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

    அண்ணாநகர் மேற்குப் பகுதியில் முறையான கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால் இங்குள்ள தாழ்வான பகுதியில் கழிவு நீர் குளம் போல் தேங்கி விடுகிறது. மேலும் மழை பெய்தால் இங்கு மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால் இங்கு கொசுக்கள் மற்றும் ஈக்கள் உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இங்குள்ள ஆழ்குழாய் கிணறு அருகே கழிவுநீர் தேங்குவதால் ஆழ்குழாய் கிணற்று மூலம் வரும் நீரும் கழிவு நீராகவே வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவு நீர் கால்வாய் அமைத்து இந்தப் பகுதியில் கழிவு நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை நீர்நிலைகளில் திறந்து விடுகின்றனர்.
    • சாயக்கழிவுகளை கலந்துவிடும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயம் காக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை துறையின் அங்கமாக உள்ள சாய ஆலைகள், பிரிண்டிங், வாஷிங் நிறுவனங்கள் தொடங்குவதற்கு முன் சாயக்கழிவுநீரை ஜீரோ டிஸ்சார்ஜ் தொழில்நுட்பத்தில் சுத்திகரிக்க வேண்டும் என பல விதிமுறைகளுக்கு உட்பட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி பெற வேண்டும்.

    ஆனால் சில நிறுவனங்கள் அனுமதி பெறாமலே குடோன்கள் மற்றும் வீடுகளில் பிளாஸ்டிக் டிரம் மூலம் பட்டன், ஜிப் போன்றவற்றுக்கு சாயமேற்றுகின்றனர். பின்னர் சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை நீர்நிலைகளில் திறந்து விடுகின்றனர். அவ்வாறு திருப்பூர் ராயபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றில் கலந்த சாயக்கழிவுநீரால் ஆற்றுநீர் நிறம் மாறி நுரையுடன் பாய்ந்தது.

    இதனால் தண்ணீரில் உப்புத்தன்மை அதிகரித்துள்ளதால் நீரை பாசனத்திற்கு பயன்படுத்தும்போது பயிர்கள் காய்கின்றன. இதனால் ஆற்றுநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

    எனவே மாசுக்கட்டுபாட்டு வாரியம் சாயக்கழிவுகளை கலந்துவிடும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து விவசாயம் காக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொட்டி நிறைந்து வால்வு அடைக்க முடியாத நிலை யில், தண்ணீர் வீணானது. இதனை பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் போராடி வாழ்வை அடைத்தனர்.
    • தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பழனி சாலை கணபதி அக்ரஹாரம் பகுதியில் மேல்நிலைத் தொட்டி உள்ளது. 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டிக்கு மின் மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு பகுதிகளுக்கு வழங்கப்படு கிறது. இதில் இருந்து மாநகராட்சிக்கு உட்பட்ட 8 வது வார்டு முழுவதிற்கும் 7 மற்றும் 12 வது வார்டு பகுதியில் ஒரு சில பகுதி களுக்கும் குடிநீர் விநி யோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் பயன்பெற்று வருகின்றன.

    இந்நிலையில் இன்று காலை மின் மோட்டார் மூலம் மேல்நிலைத் தொட்டி யில் தண்ணீர் ஏற்றப்பட்டது. தண்ணீர் தொட்டி நிறைந்து சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் கீழே கொட்டியது. 40 அடி உயரத்தில் அருவி போல் விழுந்த தண்ணீரை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து சென்றனர்.

    இந்த தொட்டியில் பொரு த்தப்பட்டுள்ள வால்வு கோளாறு காரண மாக கடந்த 3 நாட்களாக தண்ணீர் ஏற்றப்படவில்லை. இதனால் கடந்த 2 நாட்களாக வார்டு பகுதி களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இந்நிலையில் இன்று தண்ணீர் ஏற்றப்பட்டது. தொட்டி நிறைந்து வால்வு அடைக்க முடியாத நிலை யில், தண்ணீர் வீணானது. இதனை பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் போராடி வாழ்வை அடைத்தனர்.

    தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் பொது மக்களிடம் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்த வலியுறுத்தும் அதிகாரிகள் இதுபோல் தண்ணீர் வெளியேறி வீணாகி வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகள் அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும்.
    • விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் முதல் முறைரூ. 25 ஆயிரம் மேலும் இரண்டாவது முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    பல்லடம்:

    பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம், வெள்ளகோயில், திருமுருகன்பூண்டி, ஆகிய 6 நகராட்சிகளில் இயங்கும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு சட்ட விதிகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பல்லடம் நகராட்சி ஆணையாளர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

    நகராட்சிகளின் மண்டல தூய்மை பாரத திட்ட பொறுப்பாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பல்லடம் நகர சுகாதார அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார்.பல்லடம் சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், சத்தியசுந்தர்ராஜ், மேற்பார்வையாளர்கள் நாராயணன், செந்தில்குமார், மற்றும் உடுமலை, காங்கேயம், உள்ளிட்ட 6 நகராட்சிகளின் சுகாதாரஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவர்களை தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மனித கழிவுகள், மற்றும் கழிவு நீரை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. நகராட்சியால் வழங்கப்படும் இந்த உரிமத்தை வாகனத்தின் முன்புறம் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். உரிமம் பெற்றவர்கள் குறிப்பிட்டுள்ளபடி நேரம், வழித்தடம் ஆகியவற்றை பின்பற்றி குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

    உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகள் அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும். உரிமத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி, விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் முதல் குற்றத்திற்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 2வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர் குற்றங்களை செய்தால் உரிமத்தை இடைநிறுத்தல் அல்லது ரத்து செய்வதோடு, குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்த ஒரு வாகனத்தையும் அல்லது பிற பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை உள்ளது. அகற்றப்படும் கழிவுகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • விதிமுறைகளை மீறி கழிவுகள் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.
    • அதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட செம்புளிச்சாம் பாளையம் ஆவாரம் காட்டு தோட்டம் பகுதியில் ஒரு நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

    இந்த தென்னை நார் ஆலையில் இருந்து நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் விதிமுறைகளை மீறி கழிவுகள் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.

    மேலும் தேங்காய் மட்டைகளை குவித்து பரப்பி பதப்படுத்து வதற்காக நீரில் நனைத்து பின்பு கழிவு நீரை அப்படியே நிலத்தடியிலும் ஓடையிலும் விடுவதாக அந்த பகுதி மக்கள் புகார் கூறினர்.

    இதனால் செம்புளிசாம் பாளையம் பகுதியில் குடிநீர், பொது நிலத்தடி நீர், ஆழ்துளைக்கிணறின் நீர் மற்றும் சுற்றுவட்டார வேளாண்மை மக்களின் குடிநீர் ஆதாரங்களும் பகுதியில் உள்ளதால் கடுமையாக மாசடைய வாய்ப்புகள் உள்ளது என அவர்கள் கூறினர்.

    எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார விவ சாயிகள் ஏற்படும் இன்னல் களில் இருந்து பாதுகாத்து தடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அத்தாணி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    இதனை அடுத்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அத்தாணி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அறவழியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தனர். அந்த மனுவின் நகலை எம்.எல்.ஏ.வுக்கும் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.

    இதனை அடுத்து அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக அந்தப் பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி னார்.

    அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அத்தாணி பேரூராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.வெளியிடங்களில் இருந்து பொதுமக்க ளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் தென்னை நார் கழிவுகளை அத்தாணி பேரூராட்சி கிராமப் பகுதிகளில் மற்றும் விவசாய நிலங்களிலும் கொட்டி வைப்பதை தடை செய்யப்பட்டுள்ளது.

    இதனை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்வ துடன் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படும் என பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பு பலகையில் வாசங்கள் எழுதப்பட்டுள்ளது.

    • நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் தங்கி குழந்தை பெற்று செல்கின்றனர்‌.
    • தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கழிவு நீர் முழுவதும் ஓடி குளம் போல் தேங்கி உள்ளது.

    கடலூர்:

    கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் அறுவை சிகிச்சை, கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் மருத்துவமனை வளாகத்தில் தங்கி சிகிச்சை பெற்று செல்கின்றனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு பிரிவு செயல் பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான கர்ப்பிணி பெண்கள் தங்கி குழந்தை பெற்று செல்கின்றனர். இதனால் மகப்பேறு பிரிவிற்குள் செருப்புகள் அணிந்து செல்லாத வகையில் மிக பாதுகாப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

    ஆனால் மகப்பேறு பிரிவு முன்பு உள்ள கழிவு நீர் தொட்டியில் இருந்து கழிவுநீர் நிரம்பி தற்போது மகப்பேறு பிரிவு முன்பு ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவது போல் கழிவு நீர் முழுவதும் ஓடி குளம் போல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக மகப்பேறு பிரிவு முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு இதனை பார்த்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கொசு உற்பத்தி பெருகி பல்வேறு நோய்கள் உருவாகும் அபாயமும் நிலவி வருகிறது.

    இது மட்டுமின்றி புதிதாக பிறந்துள்ள குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் கழிவு நீர் வெளியேறி உள்ளதால் பல்வேறு தொற்று நோய் மற்றும் பாதிப்புகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். மேலும் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு பலமுறை புகார் அளித்தும் இதனால் வரை நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் பொதுவெளியில் இது போன்ற நிலைபாடு இல்லாத வகையில் அந்தந்த நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் மிகவும் பாதுகாப்பாக இருக்க கூடிய மருத்துவமனை வளாகம் மற்றும் பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வரும் நிலையில் அஜாக்கிரதையாக செயல்பட்டு வரும் நிர்வாகத்தை சமூக அலுவலர்கள் கண்டித்து உள்ளனர்.ஆகையால் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி இது போன்ற அவல நிலை வருங்காலங்களில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் தடை
    • சரி செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்

    வந்தவாசி:

    வந்தவாசி செம்பூர் செல்லும் சாலையில் கூட்டு குடிநீர் குழாய் உள்ளது. இங்கிருந்து 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்தக் குழாயின் பழுப்பு லைன் உடைந்துள்ளதால் தண்ணீர் வீணாகி ஆறு போல் செல்கிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குடிநீர் வடிகால் வாரியம் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பு ஏற்பட்ட இடத்தை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சாலையில் கழிவு நீரை கொட்டிய 10 டிராக்டர் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதியப்பட்டது.
    • கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் அமைந்துள்ளன.

    இதன் அருகில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை யிலும், நகராட்சி குப்பை கிடங்கிற்கு செல்லும் சாலை யோரங்களிலும் பட்டணம் காத்தான் மற்றும் சக்கரக் கோட்டை ஊராட்சி பகுதி வீடுகளில் இருந்து டிராக்டர் களில் எடுத்து வரப்படும் கழிவுநீரை அரசு புறம் போக்கு இடத்தில் அனுமதி யின்றி ஊற்றினர்.

    இது குறித்து பட்டணம் காத்தான் வி.ஏ.ஓ., ஜெயகாந் தன் புகாரில் பட்டிணம் காத்தான் இ.சி.ஆர், குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாரியத்திற்கு அருகேயுள்ள அரசு புறம் போக்கு காலி இடத்தின் அருகிலுள்ள மக்கள் குடியிருக்கும் பகுதி யில், மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று தெரிந்தும், ககாதார சீர் கேட்டை ஏற்படுத்தி, சுற்றுபுற சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையிலும், நோய் தொற்று ஏற்படுத்தும் வகையில் கழிவு நீரை ஊற்றி வருகின்றனர். 10 டிராக்டர்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். கேணிக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
    • பல முறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை என குற்றசாட்டு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ராட்டினமங்கலம் ஊராட்சிக்குபட்ட இ.பி.நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் 50-க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன.

    இந்த அரிசி ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீர் குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாயில் சென்று அடைப்புகள் ஏற்பட்டு பின்னர் குடியிருப்பு பகுதியில் தேங்கி தேங்கி வருகிறது.

    குடியிருப்பு பகுதி காலிமனைகளில் அரிசி ஆலை கழிவு நீர் தேங்கியதால் கொசு உற்பத்தி பண்ணை போல் காட்சியளிக்கின்றன.

    மேலும் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் குழந்தைகள் முதியவர்கள் காய்ச்சல் ஏற்படுவதும் நோய் தொற்றும் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளன.

    இது சம்மந்தமாக அரிசி ஆலை உரிமையா ளர்களிடம் ஊராட்சி நிர்வாகி மாவட்ட நிர்வாகம் ஆகியோரிடம் பல முறை முறையிட்டும் அதிகாரிகள் செவி சாய்ப்ப தில்லை எனவும் குடியிருப்பு வாசிகள் குற்றசாட்டுகின்றனர்.

    மேலும் அரிசி ஆலை கழிவு நீர் தொடர்ந்து தேங்கி வருவதால் குடியிருப்பு பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளன கழிவு நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

    ×