search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Strong stench"

    • மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரால் கடும் துர்நாற்றம் பொதுமக்கள், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    • சுகாதார சீர்கேடுகள் நிலவுவது வேதனைக்குரிய விசயமாகும்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் வளர்ச்சி திட்டங்களுக்காக பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றதாக கூறப்பட்டாலும், தற்போது பல பகுதிகளில் அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.கடந்த 2 வாரங்களாக பெய்த கோடை மழையால் சாலைகள் மோசமாக காட்சியளிக்கிறது.

    நகரில் பாதாள சாக்கடை பராமரிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளாததால் கழிவுநீர் வெளியேறுவது தொடர் கதையாக உள்ளது. பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை, மாசி விதிகளில் இந்த பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது.

    சமீபத்தில் நடந்த சித்திரை திருவிழாவின் போதுகூட கிழக்கு சித்திரை வீதியில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் வெளியேறியது. தற்போது மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள சாலைகள், தெருக்களில் அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் ஆறு போல் ஓடுகிறது. சாலைகளில் வடிகால் வசதி இல்லாததால் கழிவு நீர் ஆங்காங்கே தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல வெளியூர் பக்தர்கள் நேதாஜி சாலை வழியாக வரவேண்டும். ஆனால் நேதாஜி சாலையில் உள்ள தண்டபாணி முருகன் கோவிலில் இருந்து சில மீட்டர் தூரத்தில் உள்ள பாதாள சாக்கடை அடிக்கடி நிரம்பி வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கோவி லுக்கு வரும் வெளி மாநிலத்த வர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.

    மேலும் மாதத்தில் ஒரு முறை பாதாள சாக்கடையை எந்திரம் மூலம் சுத்தம் செய்யும் ஊழியர்கள் அந்த கழிவுகளை உடனே அப்புறப்படுத்தாமல் ஒரு நாள் முழுவதும் நடு ரோட்டில் கொட்டி வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சொல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது.

    இது தொடர்பாக பலமுறை புகார் தெரிவித்தும் அதிகாரி கள் நடவடிக்கை எடுக்க அக்கறையும் காட்டவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இன்று காலையில் வடக்கு மாசி வீதி சாலையில் உள்ள பாதாள சாக்கடை நிரம்பி கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதுபோன்று நாள்தோறும் கோவிலை சுற்றியுள்ள ஏதேனும் ஒரு பகுதியில் இந்த பிரச்சினை ஏற்படுகிறது.

    இதேபோல் ரெயில் நிலையத்தில் இருந்து வரும் வெளி மாவட்டத்தினர் மற்றும் மற்ற மாநில மக்கள் டவுன்ஹால் ரோடு வழியாக கோவிலுக்கு செல்கின்றனர். டவுன்ஹால் ரோடு பகுதியில் குப்பைகளும், கழிவுகளும் தேங்கி சுகாதார மற்ற முறையில் காட்சி யளிக்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து நகருக்கு வரும் மக்களுக்கு மதுரையின் சுகாதாரம் குறித்து தவறான எண்ணம் ஏற்படும்.

    எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் கோவிலை சுற்றி சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    உலக அளவில் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி இது போன்ற சுகாதார சீர்கேடுகள் நிலவுவது வேதனைக்குரிய விசயமாகும்.

    ×