என் மலர்
உலகம்

கழிவு நீர் கலப்பதை தடுக்க ஏரிகளை சுற்றி ஓட்டல் கட்ட தடை விதித்த பாகிஸ்தான்
- கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி ஆகும்.
- அந்த நகரின் அழகை ரசிக்க வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியம் இயற்கை எழில் கொஞ்சும் பகுதி ஆகும். அந்த நகரின் அழகைக் கண்டு ரசிக்க வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். எனவே சுற்றுலா பயணிகளுக்காக அங்கு ஏராளமான ஓட்டல்களும் புதிது புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் சமீபத்தில் அங்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு ஓட்டலின் கழிவுநீர் அருகில் இருந்த ஏரியில் கலப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
இந்த வீடியோ வைரலான நிலையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதன்பின் அந்த ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். இதனையடுத்து, ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் புதிதாக ஓட்டல் கட்டுவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.






