என் மலர்

  நீங்கள் தேடியது "Lover Murder"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஜ்கேசரின் உடலை அப்பகுதியில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டு தொட்டியில் மறைத்ததையும் அரவிந்த் ஒப்புக்கொண்டார்.
  • அரவிந்த் காதலியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

  பிரயாக்ராஜ்:

  உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மகேவா பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பெண் ராஜ்கேசர் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.

  பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தருமாறு ராஜ்கேசரின் குடும்பத்தினர் யமுனாபர் கர்ச்சனா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளின் பட்டியல் சேகரித்து விசாரணை நடத்தினர். இதில் ராஜ்கேசர் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபருடன் போனில் பேசியது தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அரவிந்த், ராஜ்கேசரை தீவிரமாக காதலித்து வந்ததும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதலியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

  மேலும் ராஜ்கேசரின் உடலை அப்பகுதியில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டு தொட்டியில் மறைத்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அரவிந்தை கைது செய்தனர்.

  பின்னர் அவரது வீட்டு தொட்டியில் இருந்து ராஜ்கேசர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அரவிந்த் காதலியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வினித்தின் தங்கை பாருல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
  • தலைமறைவான வினித் மற்றும் நண்பரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  புதுடெல்லி:

  டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் சமீபகாலமாக திருமணம் செய்து கொள்ளாமல் 'லிவ்-இன் ரிலேசன்ஷிப்'-பில் இளம் ஜோடியினர் வாழ்ந்து வருவது அதிகரித்து வருகிறது.

  இதில் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்படும் போது கொலையில் முடிந்து விடுகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

  கடந்த 12-ந் தேதி வடகிழக்கு டெல்லியில் உள்ள கரவால் நகர் பகுதியில் ஒரு பள்ளி அருகே அடையாளம் தெரியாத பெண் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அந்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை. ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

  இதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் அவர் உத்தரகாண்ட் மாநிலம் மிராஜ் பூரை சேர்ந்த ரோகினா நாஸ் என்ற மஹி (வயது 25) என்பது தெரியவந்தது.

  இவர் கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு டெல்லியை சேர்ந்த வினித் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் 'லிவ்-இன்' ரிலேசன்ஷிப்பில் இருந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் வினித்தை தேடி சென்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.

  இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தினர். இதில் சம்பவத்தன்று ஒரு மோட்டார் சைக்கிளில் வினித், அவரது நண்பர் ஒருவருடன் சேர்ந்து ரோகினா உடலை எடுத்து சென்று சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் குப்பை கொட்டும் இடத்தில் வீசி செல்வது தெரியவந்தது.

  இதனால் வினித்தான் ரோகினாவை கொலை செய்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த போலீசார் அவரையும், அவரது நண்பரையும் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

  இதற்கிடையே கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வினித்தின் தங்கை பாருல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

  அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. வினித் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. அந்த வழக்கில் ஜாமீனில் வந்த அவருக்கு ரோகினாவுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் 'லிவ்-இன்' முறையில் வாழ்ந்து வந்துள்ளனர்.

  இந்நிலையில் ரோகினா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வினித்திடம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது திருமணத்திற்கு வினித்தின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் வினித்-ரோகினா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

  இதனால் ரோகினாவை தீர்த்துக்கட்ட வினித் முடிவு செய்துள்ளார். சம்பவத்தன்று காதலர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்படவே ஆத்திரத்தில் வினித், ரோகினாவை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் உடலை மறைப்பதற்காக தனது நண்பர் மற்றும் தங்கை பாருல் ஆகியோர் உதவியை நாடி உள்ளார். அவர்களும் உதவி செய்தது பாருலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

  ரோகினாவை வினித் கொலை செய்த பிறகு ரத்தக்கறை படிந்த ஆடைகளை மாற்றுவதற்கு பாருல் உதவி செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். மேலும் கொலைக்கு பின்னர் தாங்கள் தங்கியிருந்த வீட்டை விற்றுவிட்டு வேறு ஒரு வீட்டிற்கு வாடகைக்கு செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்தது.

  தலைமறைவான வினித் மற்றும் நண்பரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கைவிட்ட காதலனை கொன்று, சமைத்து, கறிவிருந்து பரிமாறியதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றிவரும் மொராக்கோ நாட்டுப் பெண்ணை போலீசார் கைது செய்தனர். #MoroccoWoman #Womanmincesexlover
  அபுதாபி:

  வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் ஐன் பகுதியில் வீட்டு வேலை செய்துவந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க மொராக்கோ பெண்ணுக்கும், மொராக்கோ நாட்டில் இருந்து இங்கு வேலைக்காக வந்திருந்த 20 வயது வாலிபருக்கும் சுமார் 7 ஆண்டுகால கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

  ஒருகட்டத்தில் கள்ளக்காதலி மீது கொண்ட காதல் புளித்துக் கசந்துப் போன நிலையில், நான் மொராக்கோவுக்கு சென்று எனக்காக நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்துகொள்ள போகிறேன் என அவளிடம் அந்த வாலிபர் கூறியுள்ளார்.

  இதனால், இவ்வளவு காலமாக அவர் செய்துவந்த பண உதவிகள் நின்றுப் போகும் என்று ஆத்திரமடைந்த அந்தப் பெண் தன்னை கைவிட்ட காதலனை வீட்டுக்கு வரவழைத்து தாக்கிக் கொன்றார். பின்னர், அவரது உடலை துண்டுத்துண்டாக வெட்டி, மிக்சியில் போட்டு, கொத்துக்கறியாக்கினார்.

  அந்த கொத்துக்கறியை கொண்டு ஐக்கிய அரபு அமீரகம் பகுதியில் மிகவும் பிரசித்தியான ’மச்பூஸ்’ (நம்மூர் பிரியாணியைப் போல்) கொத்துக்கறிச்சோறு சமைத்தார். அந்த உணவை அருகாமையில் உள்ள இடத்தில் கட்டுமான வேலையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு சுடச்சுட கறிவிருந்தாக பறிமாறி மகிழ்ந்தார்.  இந்நிலையில், 3 மாதங்களாக காணாமல்போன அந்த வாலிபரை தேடி அவரது சகோதரர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சமீபத்தில் விசாரிக்க சென்றார். என்னை அவர் பிரிந்து சென்ற பிறகு இங்கு அவர் வந்ததே இல்லை என ஆவேசமாக பதிலளித்த அந்தப் பெண் அவரது முகத்தில் அடிப்பதுபோல் வீட்டுக் கதவை வேகமாக அறைந்து சாத்தினார்.

  அவரது நடவடிக்கையில் சந்தேகப்பட்ட அந்த நபர், தனது சகோதரரை காணவில்லை என்றும் சம்பந்தப்பட்ட பெண்ணின்மீது தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அல் ஐன் நகர போலீசில் புகார் அளித்தார்.

  இதைதொடர்ந்து, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்ற போலீசார், அங்கிருந்த மிக்சியில் ஒரு மனிதப்பல் சிக்கி இருப்பதை கண்டனர். அந்தப் பல்லை கைப்பற்றி, தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புகார் அளித்த நபரின் மரபணுவும், அந்த பல்லுக்குரியவரின் மரபணுவையும் ஒப்பிட்டு நடத்தப்பட்ட தடயவியல் பரிசோதனையில் அந்தப் பல்லுக்கு சொந்தக்காரரை அவரது முன்னாள் காதலி கொன்று, கறிவிருந்து படைத்த கதை வெட்டவெளிச்சமானது.

  மிக்சியில் அரைபடாத சில பாகங்களை வெட்டி நாய்க்கு விருந்தாக்கிய விபரமும் தெரியவந்தது.
  உடனடியாக அவரை கைது செய்த போலீசார், விசாரணை காவலில் அடைத்து வைத்துள்ளனர். அவருக்கு மனநல பரிசோதனையும் நடத்தப்பட்டதாக வளைகுடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #MoroccoWoman #Womanmincesexlover 
  ×