என் மலர்

  இந்தியா

  காதலியை கொன்று உடலை தொட்டியில் மறைத்த வாலிபர் - செல்போன் அழைப்புகள் மூலம் சிக்கினார்
  X

  காதலியை கொன்று உடலை தொட்டியில் மறைத்த வாலிபர் - செல்போன் அழைப்புகள் மூலம் சிக்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ராஜ்கேசரின் உடலை அப்பகுதியில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டு தொட்டியில் மறைத்ததையும் அரவிந்த் ஒப்புக்கொண்டார்.
  • அரவிந்த் காதலியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

  பிரயாக்ராஜ்:

  உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மகேவா பகுதியை சேர்ந்தவர் 35 வயதான பெண் ராஜ்கேசர் (வயது 35). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார்.

  பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே மாயமான தங்களது மகளை கண்டுபிடித்து தருமாறு ராஜ்கேசரின் குடும்பத்தினர் யமுனாபர் கர்ச்சனா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

  அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போனுக்கு வந்த அழைப்புகளின் பட்டியல் சேகரித்து விசாரணை நடத்தினர். இதில் ராஜ்கேசர் அதே பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற வாலிபருடன் போனில் பேசியது தெரியவந்தது.

  இதைத்தொடர்ந்து போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அரவிந்த், ராஜ்கேசரை தீவிரமாக காதலித்து வந்ததும், கடந்த 15 நாட்களுக்கு முன்பு காதலியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை அடித்து கொலை செய்ததும் தெரியவந்தது.

  மேலும் ராஜ்கேசரின் உடலை அப்பகுதியில் தான் புதிதாக கட்டி வரும் வீட்டு தொட்டியில் மறைத்ததையும் அவர் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அரவிந்தை கைது செய்தனர்.

  பின்னர் அவரது வீட்டு தொட்டியில் இருந்து ராஜ்கேசர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

  அரவிந்த் காதலியை கொலை செய்ததற்கான காரணங்கள் குறித்து போலீசாரிடம் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×