என் மலர்

  நீங்கள் தேடியது "Young woman murder"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கள்ளக்காதல் ஜோடி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், கம்பர் தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர்.
  • கடந்த சில நாட்களாக கள்ளக்காதல் ஜோடி வீடு பூட்டியே கிடந்தது.

  திருவள்ளூர்:

  சோழவரம் அடுத்த எருமை வெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. தனியார் பள்ளியில் பஸ் டிரைவராக உள்ளார். இவரது மனைவி அமுதா (வயது30). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

  அமுதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த பாபு, மனைவியை கண்டித்தும் கேட்கவில்லை. அவர் தொடர்ந்து கள்ளக்காதலனுடன் பழகி வந்தார்.

  கடந்த 2 மாதத்திற்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு அமுதா தனது கள்ளக்காதலன் ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு, தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

  இதற்கிடையே கள்ளக்காதல் ஜோடி திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பம், கம்பர் தெருவில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்தனர். கடந்த சில நாட்களாக அவர்களது வீடு பூட்டியே கிடந்தது.

  இந்த நிலையில் அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் திருவள்ளூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீபபி மற்றும் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்த போது அமுதா உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். உடன் தங்கி இருந்த கள்ளக்காதலன் மாயமாகி இருந்தார்.

  அமுதாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அமுதாவின் உடல் அழுகிய நிலையில் இருப்பதால் அவர் இறந்து ஒரு வாரம் இருக்கும் என்று தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

  இது தொடர்பாக அமுதாவுடன் தங்கி இருந்த காதலன் ஜோதீஸ்வரனிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர். அவர் சிக்கினால் தான் அமுதா எப்படி இறந்தார் என்பது தெரியவரும்.

  கொலையுண்ட அமுதா இதற்கு முன்பும் 2 முறை ஜோதீஸ்வரனுடன் ஓட்டம் பிடித்ததாக தெரிகிறது. அப்போது அவர் இருக்கும் இடம் தெரிந்து பாபு சமாதானம் பேசி அழைத்து வந்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 3-வது முறையாக அமுதா ஓட்டம் பிடித்தபோது பாபுவுக்கு அவரது நண்பர் ஒருவர் மூலம் இருக்கும் இடம் தெரிந்து உள்ளது.

  அப்போது பாபு, மனைவி அமுதாவை சந்தித்து பேசியபோது, கள்ளக்காதலன் ஜோதீஸ்வரன் தன்னை ஏமாற்றி விட்டதாக தெரிவித்து சென்று இருக்கிறார். இதன் பின்னர் அமுதா கொலை செய்யப்பட்டு உள்ளார்.

  இது தொடர்பாக பாபுவின் நண்பரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். கள்ளகாதலனுடன் சென்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த சில நாட்களாக சுவிட்ச்ஆப் ஆகியிருந்த செல்போன், கடந்த 4 நாட்களுக்கு முன் ‘ஆன்’ ஆனது.
  • செல்போனை திருப்பத்தூர் நகரில் கோட்டை தெருவை சேர்ந்த ஒரு வாலிபர் பயன்படுத்தியது தெரியவந்தது.

  திருப்பத்தூர்:

  திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி அருகே உள்ள செல்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் பிரியா (வயது 22). இவரது பெற்றோர் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர்.

  இதனால் சந்தோஷ்பிரியா, தனது தாத்தா சீனன் என்பவரிடம் வளர்ந்து வந்தார். தற்போது பிஎஸ்சி முடித்துவிட்டு டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார்.

  இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி அங்குள்ள கிணற்றில் பிணமாக மிதந்தார். தகவலறிந்த கந்திலி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  பின்னர் தற்கொலை வழக்காக பதிவு செய்தனர். இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், சந்தோஷ் பிரியா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டது தெரியவந்தது.

  இதையடுத்து கந்திலி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் சந்தோஷ் பிரியா பயன்படுத்தி காணாமல் போன செல்போனின் ஐஎம்இஐ எண்ணை கொண்டு விசாரணை நடத்தினர்.

  அப்போது கடந்த சில நாட்களாக சுவிட்ச்ஆப் ஆகியிருந்த செல்போன், கடந்த 4 நாட்களுக்கு முன் 'ஆன்' ஆனது. அந்த செல்போனை திருப்பத்தூர் நகரில் கோட்டை தெருவை சேர்ந்த ஒரு வாலிபர் பயன்படுத்தியது தெரியவந்தது.

  அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அப்போது செல்ரப்பட்டி கிராமத்தை சேர்ந்த கொரியர் நிறுவனத்தில் வேலை செய்யும் மகேந்திரன் (21) என்பவர் ரூ.5 ஆயிரத்துக்கு செல்போனை விற்பனை செய்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சந்தோஷ்பிரியாவின் வீட்டின் அருகே வசிக்கும் மகேந்திரன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

  அப்போது மகேந்திரன், சந்தோஷ் பிரியாவை பலாத்காரம் செய்து கழுத்து நெரித்து கொன்று கிணற்றில் வீசியது தெரியவந்தது.

  இதையடுத்து கந்திலி போலீசார் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றி, மகேந்திரனை நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

  கைதான மகேந்திரன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

  எனது பக்கத்து வீட்டை சேர்ந்த சந்தோஷ் பிரியாவை நான் ஒருதலையாக காதலித்து வந்தேன். எனது காதலை அவரிடம் கூறினேன். ஆனால் அவர் ஏற்கவில்லை.

  என்னை காதலிக்கும்படி பலமுறை வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் எனக்கு அவர் மீது தீராத ஏக்கம் இருந்தது.

  கடந்த ஜூலை 22-ந்தேதி இரவு சந்தோஷ் பிரியா தெருவில் தனியாக நடந்து வந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த நான், அவரை பைக்கில் அமரும் படி கூறினேன். மேலும் என்னை காதலிக்கும்படி கூறினேன். ஆனால் அவர் பைக்கில் ஏற மறுத்து தான் வேறு ஒருவரை காதலிப்பதாக தெரிவித்தார்.

  இதனால் ஆத்திரமடைந்த நான், அவளை சரமாரி தாக்கி அருகில் உள்ள கம்புக்கொல்லையில் பலாத்காரம் செய்தேன்.

  பின்னர் கழுத்தை நெரித்துக்கொன்று விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் வீசிவிட்டேன். அவர் பயன்படுத்திய கைப்பையை புதரில் வீசிவிட்டேன். அவரது செல்போனை எடுத்துக் கொண்டேன்.

  போலீசார் சந்தோஷ் பிரியாவின் இறப்பை தற்கொலை வழக்காக பதிவு செய்ததால் எனக்கு தைரியம் வந்துவிட்டது. எனக்கு பணம் தேவைப்பட்டதால் சந்தோஷ் பிரியாவின் செல்போனை ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்துவிட்டேன்.

  அந்த செல்போன் மூலம் சிக்கிக்கொண்டேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.
  • அதைத் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவுக்கு ஹரிஹரன் தொல்லை கொடுத்து வந்தாக கூறப்படுகிறது.

  மதுரை:

  மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் பாண்டி. இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். பாண்டிக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் அபர்ணா (வயது19) பிளஸ்-2 படித்து முடித்து விட்டு, நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

  அபர்ணாவின் பாட்டி வீடு விராட்டிபத்தில் உள்ளது. அங்கு அவர் அடிக்கடி செல்வார். அப்போது அங்குள்ள தனது மாமா வீட்டிற்கு வந்திருந்த கோவை சிங்காநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த ஹரிஹரன் (23) என்ற வாலிபருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

  இதையடுத்து அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஹரிஹரன் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அபர்ணாவுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர்.

  ஆகவே தன்னை பெண் கேட்டு வருமாறு அபர்ணா கூறியிருக்கிறார். அதன் பேரில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அபர்ணாவை பெண் கேட்டு அவரது வீட்டிற்கு ஹரிஹரன் சென்றுள்ளார். ஆனால் ஹரிஹரனுக்கு திருமணம் செய்து கொடுக்க அபர்ணாவின் தந்தை மறுத்து விட்டதாக தெரிகிறது.

  தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அபர்ணாவிடம் தொடர்ந்து ஹரிஹரன் கேட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் முனீஸ்வரன் என்பவருக்கு அபர்ணாவை நிச்சயம் செய்தனர். அவர்களுக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

  இதுகுறித்து தகவல் அறிந்த ஹரிஹரன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அபர்ணாவின் வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று பாண்டியும், அவரது மனைவியும் வழக்கம்போல் மளிகை கடைக்கு சென்று விட்டனர். அபர்ணா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

  மாலையில் அவரது வீட்டிற்கு ஹரிஹரன் வந்தார். அப்போது அபர்ணா தனக்கு நிச்சயிக்கப்பட்ட முனீஸ்வரனுடன் செல்போனில் பேசி கொண்டிருந்தார். தன்னுடன் வந்து விடுமாறு அபர்ணாவை ஹரிஹரன் அழைத்து உள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்து விட்டார்.

  இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அபர்ணாவை சரமாரி குத்தினார். பின்பு அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார். இந்நிலையில் அபர்ணாவிடம் போனில் பேசிக் கொண்டிருந்த முனீஸ்வரன், வீட்டில் யாரோ தகராறு செய்கிறார்கள் என அபர்ணாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.

  இதையடுத்து மளிகை கடையில் இருந்த அபர்ணாவின் தாய் மற்றும் சித்தப்பா ஆகியோர் வீட்டிற்குள் வந்தனர். அப்போது அவர்கள் வீட்டிற்குள்ளே இருந்து ஹரிஹரன் தப்பி ஓடினார். அவரை அவர்கள் பிடிக்க முயன்ற போது தன்னிடம் இருந்த பையை கீழே போட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

  அந்த பையை சோதனை செய்து பார்த்த போது அதில் கத்தி, சுத்தியல், கையுறை போன்றவை இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது அங்கு அபர்ணா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பூமிநாதன் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் அபர்ணாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

  அதில் திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்ததால் அபர்ணாவை அவரது காதலன் ஹரிஹரன் திட்டமிட்டு கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

  ஹரிஹரன் மோட்டார் சைக்கிளில் சென்றதால் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளும் உஷார் படுத்தப்பட்டன. அங்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். மேலும் ஹரிஹரன் எங்கு சென்றார்? என்று ரகசியமாக விசாரணை நடத்தினர்.

  அவர் கோவையை சேர்ந்தவர் என்பதால் அங்கு சென்றிருக்கலாம் என்று கருதப்பட்டது. இதனால் கோவை செல்லக்கூடிய வழித்தடத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பதுங்கி இருந்த ஹரிஹரனை தனிப்படை போலீசார் இ்ன்று கைது செய்தனர்.

  இதையடுத்து அவர் அங்கிருந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். அபர்ணாவை கொலை செய்வதற்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தன்னை காதலித்த பெண் தன்னுடன் வர மறுத்ததால், தனக்கு கிடைக்காதவர் யாருக்கும் கிடைக்க கூடாது என நினைத்து ஆத்திரமடைந்து அபர்ணாவை கொன்றதாக ஹரிஹரன் தெரிவித்தாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

  தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆட்கள் நடமாட்டம் மிகுந்த கோயம்பேடு மார்க்கெட்டில் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  போரூர்:

  கோயம்பேடு பூ மார்க்கெட்டில் உள்ள கடை முன்பு நேற்று நள்ளிரவு பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

  இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் கோயம்பேடு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  கொலையுண்ட பெண்ணுக்கு சுமார் 25 வயது இருக்கும். அவர் யார்? எந்தப் பகுதியை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரது கழுத்து மட்டும் கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது. மற்ற இடங்களில் காயம் இல்லை.

  இறந்து கிடந்த பெண் இரவு 10 மணி அளவில் ஆண் ஒருவருடன் அமர்ந்து அங்கு பிரியாணி சாப்பிட்டதை அவ்வழியே சென்ற தொழிலாளர்கள் சிலர் பார்த்து உள்ளனர்.

  காதல் விவகாரம் காரணமாக பெண் கொலை செய்யப்பட்டாரா? என்கிற கோணத்தில் போலீசார், விசாரணையை தொடங்கி உள்ளனர். அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தி இருக்கும் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.

  மேலும் கோயம்பேடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் பற்றிய விவரத்தையும் சேகரித்து வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஊசூர் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டார்.
  வேலூர்:

  வேலூர் அடுத்த ஊசூர் புலிமேடு இந்திராநகரை சேர்ந்தவர் சின்னபையன் மகள் சுகன்யா (24). இன்று காலை வீட்டில் தனியாக இருந்தார். வீட்டுக்கு வெளியே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கழுத்து அறுத்து கொலை செய்யபட்டு பிணமாக கிடந்தார்.

  ரத்த வெள்ளத்தில் சுகன்யா இறந்து கிடந்ததை கண்டு திடுக்கிட்ட அக்கம் பக்கத்தினர் அரியூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  சுகன்யா குடும்பத்தினருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் கோவில் கட்டுவது சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. இதில் சுகன்யா கொலை செய்யபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

  இது தொடர்பாக வாலிபர் ஒருரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லடம் அருகே கொலை செய்யப்பட்டு பேரலுக்குள் திணிக்கப்பட்டிருந்த இளம்பெண் குறித்து போலீசார் விசாரணையில் அடையாளம் காணப்பட்டது.
  பல்லடம்:

  பல்லடம் கிரிச்சி பாளையத்தில் செந்தில் (வயது 40) என்பவர் இளம்பெண்ணுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

  கடந்த சில வாரங்களாக அந்த வீடு பூட்டிய நிலையிலேயே இருந்தது. வீடு பூட்டியே இருப்பதால் அந்த வீட்டில் அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் குடியேற முடிவு செய்து வீட்டை சுத்தம் செய்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த பேரலில் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தது.

  காமநாயக்கன்பாளையம் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வந்தனர். பெண்ணின் கையில் எஸ்.எல். என்ற ஆங்கில எழுத்து பச்சை குத்தப்பட்டிருந்தது. தலைமறைவாக உள்ள செந்தில் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் உள்ள மில்லில் பிட்டராக வேலை செய்து வந்தது தெரியவந்தது. அங்கு வேலை செய்த மற்ற பெண் தொழிலாளர்களிடம் பச்சை குறித்து கேட்டபோது இங்கு வேலை செய்த லதா என்பவர் கையில் எஸ்.எல். என்று பச்சை குத்தியிருந்தார் என்று கூறினர்.

  லதா குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லதா கோவை மாவட்டம் அன்னூர் அடுத்துள்ள சாவக்காட்டுப் பாளையத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர் களிடம் நடத்திய விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது

  லதாவுக்கும், தாராபுரத்தை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் திருமணமானது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவர் பெயரும், தனது பெயரும் சேர்த்து ஆங்கில எழுத்தில் எஸ்.எல். என்று பச்சை குத்தியுள்ளார்.

  இந்நிலையில் கணவன்- மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தனர். அதன்பின்னர் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் மில்லுக்கு வேலைக்கு சென்று வந்தார்.

  அப்போது அங்கு பிட்டராக இருந்த தாராபுரம் சின்னகாம்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தான் கிரிச்சிபாளையத்தில் உள்ள வாடகை வீட்டில் குடியேறிய சில வாரங்களில் லதா கொலை செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள செந்திலை பிடித்தால் தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் கூறினர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்லடம் அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே இளம்பெண்ணை கொன்று உடலை பேரலுக்குள் திணத்த மில் தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
  பல்லடம்:

  பல்லடத்தை அடுத்த காமநாயக்கன்பாளையம் அருகே உள்ள இலவந்தி ஊராட்சி கிரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 58) விவசாயி. இவருக்கு கிரிச்சிபாளையத்தில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.

  இந்த வீட்டில் அந்த பகுதியில் உள்ள நூல் மில்லில் வேலை பார்த்து வந்த செந்தில் (40) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். அவருடன் ஒரு இளம்பெண்ணும் அந்த வீட்டில் குடியிருந்ததாக தெரிகிறது. ஒருசில மாதங்கள் அவர்கள் இருவரும் அங்கு குடியிருந்து வந்தனர்.

  கடந்த சில வாரங்களாக அந்த வீடு பூட்டிய நிலையிலேயே இருந்துள்ளது. அவ்வப்போது செந்தில் மட்டும் அங்கு வந்து சென்றுள்ளார்.

  வீடு பூட்டிய நிலையிலேயே இருப்பதால் அந்த பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு இந்த வீட்டை வாடகைக்கு தரும்படி அதன் உரிமையாளர் ராமசாமியிடம் கேட்டுள்ளார்.

  இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் அந்த வீட்டை பிரகாசுக்கு வாடகைக்கு விடுவதற்கு ஒப்பு கொண்டுள்ளார். மேலும், அந்த வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து ஒரு அறையில் வைத்து விட்டு, நீங்கள் வீட்டை வாடகைக்கு எடுத்து கொள்ளுங்கள் என்றும் பிரகாஷிடம் அவர் கூறியுள்ளார்.

  இதையடுத்து வீட்டில் உள்ள பொருட்களை அங்குள்ள ஒரு அறையில் பிரகாஷ் எடுத்து வைத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பேரலை தூக்கி அறையில் கொண்டு வைக்க முயன்றார். ஆனால் அந்த பேரலை அவரால் நகர்த்த முடியவில்லை.

  பேரலின் வாய்ப்பகுதி அட்டை வைத்து இறுக்கமாக கட்டி அடைக்கப்பட்டிருந்தது. இதில் தண்ணீர் இருக்கலாம் என்று எண்ணிய அவர் அந்த பேரலின் வாய்பகுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அட்டையை திறந்து பார்த்துள்ளார். அப்போது அந்த பேரலில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியுள்ளது.

  பேரலின் உள்ளே பார்த்த போது பெண் ஒருவரின் பிணம் இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் அலறி சத்தம்போட்டவாறு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். பின்னர் இதுகுறித்து உடனடியாக வீட்டின் உரிமையாளருக்கும், காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார்.

  தகவலின்படி அங்கு விரைந்து வந்த போலீசார் அந்த பேரலில் இருந்த பெண்ணின் பிணத்தை வெளியே எடுத்து பார்த்தனர். அழுகிய நிலையில் இருந்த அந்த பெண் சுமார் 35 வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். வாடகைக்கு தங்கிய செந்தில் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று அங்குள்ளவர்களுக்கு தெரியவில்லை.

  விசாரணையில் வாடகைக்கு இருந்தவர் தாராபுரம் சின்னக்காம்பாளையத்தை சேர்ந்த செந்தில் என்பது தெரியவந்தது. அவரை தேடியபோது அவர் தலைமறைவாக உள்ளது தெரியவந்தது. செந்தில் தான் இளம்பெண்ணை கொன்று பேரலுக்குள் திணித்து மண்ணைபோட்டு மூடியிருக்க வேண்டும் என்று போலீசார் முடிவு செய்தனர். அதன்படி செந்திலை போலீசார் தேடி வருகிறார்கள்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குடும்பத்தகராறில் இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

  காரைக்குடி:

  சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள கோட்டையூர் அழகா புரியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 40). இவரது முதல் மனைவி இறந்து விட்டதால் 2-வதாக பெரியநாயகி (36) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

  வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் அடிக்கடி சேகர் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே விரோதம் ஏற்பட்டது.

  இந்த நிலையில் இன்று அதிகாலை பெரியநாயகி தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடப்பதாக பள்ளத்தூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

  இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர்.

  விசாரணையில் பெரிய நாயகியை சேகர் அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. சேகரை கைது செய்த போலீசார், பெரியநாயகியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே 6 பவுன் நகைக்காக இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  கள்ளக்குறிச்சி:

  விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 31), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லதா (26). இவர்களுக்கு வீட்டின் அருகே விவசாய நிலங்கள் உள்ளது.

  லதா தினந்தோறும் விவசாய நிலத்துக்கு சென்று தண்ணீர் பாய்ச்சுவது வழக்கம். அதுபோல் நேற்று இரவு 8 மணிக்கு லதா வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். இரவு 9 மணி ஆகியும் லதா வீடு திரும்பவில்லை.

  இதனைத் தொடர்ந்து அவரது மாமனார் தாரங்க பாணி அவரை தேடி வயலுக்குசென்றார். அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் லதா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். உறவினர்கள் விரைந்து வந்து அவரை தியாகதுருகத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் தியாகதுருகம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று லதாவிடம் விசாரணைநடத்த முயன்றனர். ஆனால் லதாவின் கழுத்தில் காயம் ஆழமாக இருந்ததாலும், ரத்தம் வந்து கொண்டே இருந்ததாலும் அவரால் பேச முடியவில்லை. பின்பு அவர் ஒரு பேப்பரில் நடந்த விபரத்தை எழுதி காட்டினார்.

  அதில் நான் வயலில் தண்ணீர் பாய்ச்சுக் கொண்டிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் வயலுக்கு வந்தனர். அவர்களில் 2 பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

  அவர்கள் என் கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச்செயினை கொடுக்கும்படி கேட்டனர். நான் நகையை கொடுக்க முடியாது என்றேன். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் என்னை கீழே தள்ளினர். 2 பேர் எனது காலை பிடித்துக் கொண்டனர். மற்றவர்கள் என் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தாலிசெயினை பறித்தனர்.

  நான் ரத்தவெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்ததால் இறந்து விட்டேன் என நினைத்து அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

  இவ்வாறு அதில் லதா எழுதியிருந்தார்.

  இந்த நிலையில் லதாவின் உடல்நிலை மோசமானதால் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் லதா பரிதாபமாக இறந்து விட்டார். உடனே லதாவின் உடலுடன் பாதி வழியிலேயே ஆம்புலன்சில் சொந்த ஊர் திரும்பினர்.

  லதாவின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

  இதற்கிடையே லதா இறந்த தகவல் அவரது உறவினர்களுக்கும், பெரியமாம்பட்டு கிராம மக்களுக்கும் தெரியவந்தது. அவர்கள் ஆத்திரம் அடைந்தனர்.

  பின்னர் அவர்கள் பெரியமாம்பட்டு, சேலம்- சென்னை தேசிய நெடுஞ் சாலைல் வாகனத்தில் லதாவின் உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

  கொலையாளிகளை உடனே கைது செய்யக்கோரி அவர்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிணத்துடன் மறியல் போராட்டம் நடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

  இதுபற்றி தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் குற்றவாளிகளை கைது செய்தால்தான் இங்கிருந்து கலைந்து செல்வோம். அதுவரை செல்ல மாட்டோம் என்று ஆவேசமாக கூறினர்.

  குற்றவாளிகளை கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் லதாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

  இதன்பின்பு லதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

  இந்த நிலையில் லதா கூறிய அடையாளங்களை வைத்து பெரியமாம்பட்டு பகுதியை சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் இன்று காலை பிடித்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  6 பவுன் நகைக்காக இளம்பெண்ணை கொடூரமாக கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  கொலை செய்யப்பட்ட லதாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே நடத்தையில் சந்தேகம் பட்டு இளம்பெண்ணை எரித்து கொன்ற வழக்கில் கணவனை போலீசார் கைது செய்தனர்.
  திருக்கோவிலூர்:

  விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேட்டுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவர் சென்னையில் டைல்ஸ் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக சென்னையில் தங்கியிருந்து விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து சென்றார். இவரது மனைவி ரீனா (31). இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் உள்ளனர்.

  ரமேசுக்கு தனது மனைவி ரீனாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரமேஷ் சென்னையில் இருந்து மேட்டுச்சேரிக்கு வந்தார். நீ நடந்து கொள்ளும் விதம் சரியில்லை. இனிமேல் ஒழுங்காக இரு என ரீனாவிடம் கூறினார். அதற்கு ரீனா, நீங்கள் தான் என்மேல் தேவையில்லாமல் சந்தேகம் படுகிறீர்கள் என்றார். இதில் கணவன்-மனைவிக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  வாக்குவாதம் முற்றி ரமேஷ் ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த மண்எண்ணை எடுத்து ரீனாவின் உடலில் ஊற்றி தீ வைத்தார். காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று ரீனா அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

  உடல் கருகிய நிலையில் இருந்த ரீனாவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன்அளிக்காமல் நேற்று இரவு ரீனா பரிதாபமாக இறந்தார்.

  இது குறித்து மணலூர்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ஜெயவேல், சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலம் அருகே ஆசைக்கு இணங்க மறுத்ததால் இளம்பெண்ணை சித்தப்பா கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
  காடையாம்பட்டி:

  சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி காலனியை சேர்ந்தவர் அழகேசன். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களது மகள் மீனா(வயது 17).

  கடந்த சில வருடங்களுக்கு முன்பு தந்தையும், தாயும் இறந்ததை தொடர்ந்து மீனா மல்லூரில் உள்ள கஸ்தூரியின் தாய் வீட்டில் தங்கியிருந்தார். அழகேசனின் தந்தை குப்புசாமி, தாய் தீர்த்தம்மாள் ஆகியோர் கஞ்சநாயக்கன்பட்டி காலனியில் வசித்து வருகின்றனர். இவர்களது வீட்டுக்கு கடந்த 3 மாதத்திற்கு முன் மீனா வந்தார். இவர்களுடன் மீனாவின் சித்தப்பா வீராசாமி(45) என்பவரும் வசித்து வந்தார்.

  இந்த நிலையில், நேற்று காலை வீட்டிற்குள் மீனா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். நேற்று காலை வீட்டிற்குள் வீரசாமி இருந்ததாக கூறப்படுகிறது. கொலைக்கு பிறகு அவர் தலைமறைவாகி விட்டார்.

  இதனால் சந்தேகம் அடைந்த தீவட்டிப்பட்டி போலீசார், வீராசாமியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மீனாவை வீராசாமி கொலை செய்தது தெரியவந்தது.

  மீனாவை கொலையை செய்தது ஏன்? என்பது குறித்து வீராசாமி பரபரப்பு வாக்குமூலம் போலீசாரிடம் கொடுத்துள்ளார். அதன் விபரம் வருமாறு:-

  நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

  கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலத்தில் காவலாளி வேலை பார்த்தேன். இரவு நேரத்தில் வாட்ச்மேன் பணி என்பதால் எனக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. இதனால் நான், கொஞ்சம் நாட்களுக்கு முன்பு அந்த வேலையை விட்டு விட்டேன்.

  கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் என் அண்ணன் அழகேசன் மகள் மீனா மல்லூரில் இருந்து புறப்பட்டு தனது தாத்தா-பாட்டியை பார்ப்பதற்காக கஞ்சநாயக்கன்பட்டி காலனிக்கு வந்தார்.

  எங்களுக்கு சொந்தமாக பழைய வீடு ஒன்றும், புதிய வீடு ஒன்றும் உள்ளது. பழைய வீட்டில் எனது அப்பா குப்புசாமி வசித்து வருகிறார். புதிய வீட்டில் நானும், எனது அம்மா தீர்த்தம்மாள் மற்றும் மீனா ஆகியோர் வசித்து வந்தோம்.

  ஏற்கனவே எனது பழக்க, வழக்கங்கள் சரியில்லை என்பது பற்றி மீனாவுக்கு தெரியும். அதனால் அவர் என்னிடம் மட்டும் பேசமாட்டார். ஊரில் உள்ள மற்ற பசங்களிடம் மீனா ஜாலியாக பேசுவார். இது எனக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. பலமுறை அவரை ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். ஆனால் அவர் சம்மதிக்கவில்லை.

  மல்லூரில் வசித்து வரும் அவரது தாத்தா-பாட்டிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு மீனா போன் செய்து ஊருக்கு வருகிறேன். சித்தப்பா என்னிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார். இங்கு இருப்பதற்கு எனக்கு பயமாக இருக்கிறது என்று தெரிவித்தார். அவர்களும் மீனாவிடம் உடனே புறப்பட்டு மல்லூருக்கு வா என அழைத்தனர்.

  இந்த நிலையில் ஊரில் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் அவரிடம், குப்புசாமி, தீர்த்தம்மாள் மற்றும் ஊரில் உள்ளவர்கள் கோவில் திருவிழா வருடத்திற்கு ஒருமுறைதான் நடக்கிறது. எனவே, திருவிழாவை பார்க்க ஆசைப்பட்டு வந்த நீ, திருவிழா முடிந்த பிறகு மல்லூருக்கு போகுமாறு கூறினார்கள். இதனால் திருவிழா முடிந்த பிறகு மீனா மல்லூருக்கு போவதாக இருந்தார்.

  திருவிழா முடிவதற்குள் மீனாவை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என நான் முடிவு செய்தேன். நேற்று காலையில் குளித்து விட்டு மீனா வீட்டுக்குள் வந்தார். அவளை பார்த்ததும் எனக்கு காமவெறி தலைக்கேறியது. அவளை அடைய இது தான் சரியான நேரம் என நினைத்தேன். ஆசைக்கு இணங்குமாறு அவளை வற்புறுத்தினேன். ஆனால் அவர் மறுத்து விட்டார்.

  அப்போது வேறு பசங்களிடம் ஜாலியாக பேசுகிற. அதே மாதிரி என்கிட்ட பேசு, என்னை லவ் பண்ணு.. என் கிட்ட வா என சொன்னேன்.

  அந்த சமயத்தில் எனது அம்மா பாத்திரங்களை கழுவி எடுத்து வந்து வீட்டுக்குள் வைத்து விட்டு பக்கத்தில் உள்ள பழைய வீட்டுக்கு சென்றார். அம்மா வெளியே சென்றது எனக்கு சாதகமாக அமைந்தது.

  இதனால் நான் கதவை சாத்தி விட்டு, மீனாவை பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றேன். இதற்கு அவர் சம்மதிக்கவில்லை.

  அப்போது இது பற்றி அவள் வெளியே சென்று தாத்தா- பாட்டியிடம் சொல்லி விடுவேன் என மிரட்டினார். இது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

  கதவை திறந்து விடுங்கள், வெளியே போக வேண்டும் என அவள் சத்தம் போட்டாள். நான் முடியாது என்றேன். யாராவது வீட்டிற்குள் வாருங்கள். கதவை திறந்து என்னை காப்பாற்றுங்கள் என்று பயங்கரமாக சத்தம் போட்டாள்.

  இது எனக்கு மேலும் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆசைக்கு இணங்க மறுத்ததால் ஆத்திரத்தில் நான் வீட்டில் இருந்த கொடுவாளை எடுத்து மீனாவின் கழுத்தை ஓங்கி வெட்டினேன். இதில் அவர் அலறியபடி ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

  மீனா சத்தத்தை கேட்டு ஊர் மக்களும், பழைய வீட்டில் இருந்த எனது அம்மா, அப்பாவும் அங்கு பதட்டத்துடன் ஓடி வந்தனர். அப்போது நான் கொடுவாளுடன் வீட்டில் இருந்து வெளியேறி, எனக்கு ஒத்துவரல.. அதனால் போட்டு தள்ளி விட்டேன் என ஊரில் கூறிக் கொண்டே ஓடி தலைமறைவானேன். போலீசார் என்னை கண்டுபிடித்து கைது செய்து விட்டனர்.

  இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியதாக தெரிகிறது.

  ஏற்கனவே வீராசாமி ஊரில் ஆண்கள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இரவு நேரத்தில் கதவை தட்டுவார். பல பெண்களுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து வந்தார். அவரை ஊர் மக்கள் பிடித்து எச்சரித்ததும், பெண்கள் குளிக்கும்போது, அவர்களுக்கு தெரியாமல் மறைவாக இருந்து எட்டி பார்த்தது வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

  வீராசாமி மீது கொலை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். #Tamilnews
  • Whatsapp
  • Telegram
  • Linkedin