கூடலூரில் இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற கணவர், சகோதரர் கைது

செல்லப்பிரியாவை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பிரியாவை கொலை செய்த அவரது கணவர் விமல், சகோதரர் செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.
கூடலூரில் இளம்பெண்ணை வெட்டிக்கொன்ற கணவர், சகோதரர் கைது
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்கன்முத்தன்பட்டி மெயின் ரோடு 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் விமல் (வயது 39). இவரது மனைவி செல்லப்பிரியா (32). விமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். தற்போது ஜாமீனில் வெளியே வந்தார்.

நேற்று இரவு விமல் மற்றும் செல்லப்பிரியாவின் சகோதரர் செல்லப்பாண்டி (34) ஆகியோர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது செல்லப்பாண்டி தனது தங்கையின் நடவடிக்கை குறித்து விமலிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு விமல் உன் தங்கையை என்னுடன் கேரளாவுக்கு அனுப்பி வை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது தங்கையிடம் செல்லப்பாண்டி எனக்கு சேர வேண்டிய நகையை கொடுத்து விட்டு உன் கணவனுடன் கேரளாவுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி மற்றும் விமல் ஆகிய 2 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்லப்பிரியாவை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பிரியாவை கொலை செய்த அவரது கணவர் விமல், சகோதரர் செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com